பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/280: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:52, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தனியார் கோவில்களில் நடைபெறும் சீர்கேட்டிற்கு மட்டும் குறைவா என்ன? ஆண்டவனைத் தரிசிப்பதற்கு எத்தனை வ ழி க ள். ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு *கட்டணங்கள். ஆண்டவன் முன்னிலையில் சாதி மதங்கள் கூடாது என்றார் பாவேந்தர். இன்று அரசு அதனைச் செயல்படுத்தி விட்டது. உலகம் அறிவியலில் எவ்வளவோ முன்னேறி விட்டது. ஆனால் மக்களை ஏமாற்றுவது மட்டும் குறைந்தபா டில்லை. அறிவியல் வளர வளர மக்களிடையே நீதி, நியாயம் ஏதும் இல்லாமல் போய்விட்டது. உயிரினும் ஒம்பப்பட்ட ஒழுக்கம் கூடச் சீர்குலையத் தொடங்கி விட்டது. அறிவியல் இந்த அளவிற்கு முன்னேறியும் மக்களிடையே ஏன் இந்தக் குறைபாடு? இக்குறை பாட்டினை நையாண்டி செய்வதுபோல், அறிவு வளரவளரத் தருமம் அரோகரா - ஒழுக்கம் அரோகரா -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 4, பா. 164. என்று கூறுகின்றார். எனவே இந்நிலைகளில் இருந்து மக்கள் விடுதலை பெற வேண்டுமானால் நாட்டில் தனி யுடைமை ஒழிதல் வேண்டும் என்கின்றார். தொழிலாளர் நிலை ஆண்டானின் கொடுமையாலும் தனியுடைமையினால் விளைந்த சீர்கேட்டினாலும் துயரப்படுபவர் தொழி லாளர்கள், ஏழைகள், வாழ்க்கை என்பது துன்பந்தான் என்பதனை ஏற்றுக் கொண்ட அபலைகள். அவர்களின் துயரநிலையினை எண்ணி எண் ணி வேதனைப்படுகின்றார் பாவேந்தர். காண்ப தெல்லாம் தொழிலாளி செய்தான் - அவன் காணத் தகுந்தது வறுமையாம் - அவன் பூணத் தகுந்ததும் பொறுமையாம் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 155,