பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/284: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:53, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தோன்றுமா? பாவேந்தரின் பொதுவுடைமைக் குடியரசில் நாடு எப்படியெல்லாம் நிருவகிக்கப்பட்டு வருகின்றது. என்பதனைச் சுருக்கமாகக் காண்போம். எல்லாருக்கும் எல்லாம் என்பது அவரது அரசின் உயிர் நாடி. எல்லாருக்கும் தேசம் எல்லாருக்கும் உடைமையெலாம் எல்லாருக்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே எல்லாருக்கும் கல்வி சுகாதாரம் வாய்த்திடுக எல்லாருக்கும் நல்ல இதயம் பொருந்திடுக -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 50. போன்றவையும், கல்லாரைக் காணுங்கால் கல்விகல் காக் கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம் இல்லாரும் ஆங்கில்லை; பிறன் கலத்தை எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே - பாரதிதாசன், பாண்டியன் பரிசு, ப. 99. போன்றவையும், காட்டினிலே குடியரசை நாட்டிவிட்டோம் இந்நாள் கல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும் காட்டாமே சாதிமணம்! கலப்பு மணம் ஒன்றே கல்வழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி ஊட்டிடுவோம் முதியவர்க்கும் மாணவர்க்கும்கன்றே உழையானை நோயாளி ஊர்திருடி என்போம் கேட்டைஇனி விலைகொடுத்து வாங்கோம்; சாதி கீழ்மேல் என்றுரைப்பவர்கள் வாழ்வது சிறையே - பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 86. போன்றவையும் அவர் காட்டும் அரசின் கொள்கைகளாக உள்ளன. இவ்வாறு, தமிழ் இயக்கத்திலும், தன்மான இயக்கத் திலும் சீர்திருத்த இயக்கத்திலும் புதியபுதிய புரட்சிகளைச் சேய்து புரட்சிக் கவிஞராகக் காட்சி அளிக்கும் பாவேத்தல்