பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/288: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:53, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பட்டிருப்பான். நாக வழிபாடு, இந்திர வழிபாடு, அக்கினி (தீ) வணக்கம், சூரிய (ஞாயிறு) பகவான் வழிபாடு போன்றவை அவ்வாறுதான் தோன்றியிருக்க வேண்டும். எனவே மனிதன் தனித்தனியாக வாழ்ந்த அக்காலத் திலேயே இயற்கை வழிபாடு தோன்றிவிட்டது எனலாம். பின்பு மனிதர்கள் கூடி வாழக் கற்றுக் கொண்டனர். அவ்வாறு கூடி வாழ்ந்த காலத்தும் இயற்கை வழிபாடு" மக்கள் வாழ்க்கையில் முதலிடம் பெற்றிருந்தது. இந்திர விழவூரெடுத்த காதை" இதனை உணர்த்தும். மேலும் இக் காலத்தில் தமிழர்கள் தை மாத முதலில் ஞாயிற்றையும் காளையையும் வழிபடுகின்றனர். தீயை - தீபத்தை வழி படுதலே கார்த்திகை தீப வழிபாடாக, கார்த்திகைச் சாறாக மலர்ந்தது. மனிதர்கள் கூடிவாழத் தலைப்பட்டதும் வாழும் இடத் திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்பத் தங்கள் தொழிலை நடத்தி வந்தனர். அந்நிலையில் அவர்கள் செய்யும் தொழில் அடிப்படையில் பெயர் .ெ ப ற் ற ன ர். வேட்டுவன், பொதுவன், ஊரன் (அல்லது) உழவன், துளையர் (அல்லது) பரதவர் போன்ற திணை அடிப்படையிலான டாகுபாடே தொல்காப்பியனார் காலத்திற்கு முன்பு இருந்தது. மக்கள் பெருக்கம் மிகுந்ததாலும், மக்களுக்கிடையே போக்குவரத்து மிகுதியானதாலும், மக்களுக்கிடையே ஒருதிணை மக்கள் பிற திணையில் வாழத் தலைப்பட்டனர். அந்நிலையில் அவர்கள் எத்தொழில் செய்கின்றனரோ அதன் அடிப் படையில் பாகுபாடு செய்யப்பட்டனர். ஒருவன் எத் தொழிலையும் செய்யலாம் என்ற முறை பழந்தமிழகத்தில் இருந்தது. இத்தருணத்தில்தான் ஆரியர்களின் இந்திய வருகை அமைந்தது -- மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் வரையில் அவர்களது வாழ்க்கை நாடோடி வாழ்க்கையாகவே இருந்தது. அவர்களின் பாகுபாடு