பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/289: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:54, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 289 நான்கு பெரும்பிரிவாக இருந்தது. அவர்கள் வேதங்களைப் படிப்பவன் பிராமணன்' என்றும், போர்த்தொழில் செய்பவன் சத்திரியன் என்றும், வணிகம் செய்பவன் * வைசியன்" என்றும், பிற தொழில்களைச் செய்து வாழ்பவன் சூத்திரன்’ என்றும் மனிதர்களைப் பாகுபாடு செய்தனர். பிராமணர்கள் தங்களைத் தவிர்த்து, அரசன், வணிகன், வேளாளன், என்ற மூவரையும் சூத்திரன்' என்று பிரித்தனர். இவர்களுக்கு இன்னின்ன தொழில்தான் என்றும் வரையறுத்தனர்.

ைவேளாண் மாந்தர்க்கு உழுதுாண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி' என்பதைத் தொல்காப்பியம் காட்டுகின்றது. தொழில் அடிப்படையிலான இப்பாகுபாடு நாளடைவில் பிறப்பு அடிப்படையிலான பாகுபாட்டிற்கு வழிவகுத்தது.

இத்தகைய பாகுபாட்டிற்குச் சிலர் எதிர்ப்புத் தெரி வித்தனர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறி மக்களை ஒன்று சேர்த்துப் பார்த்தனர். ஆனால் இவற்றையும் மீறிச் சாதிப்பாகுபாடு வேகமாகப் பரவி வேரூன்றத் தொடங் கியது. சங்க காலத்திற்குப் பிறகு பல்லவர் காலத்தில் மதமும், சாதியும் மன்னர்களையும், மக்களையும் ஆட்டிப் படைத்தன. புலவர்களும் இதன் அடிப்படையிலேயே பாடல்களைப் புனைந்தனர். பிற்காலச் சோழர் காலத்தும் சாதிமத பேதங்கள் மிகுந்தன; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தும் இவ்வகைப் பேதங்கள் தொடர்ந்தன. இந் நிலையில்தான் தன் மான இயக்கம் தோன்றுகின்றது. பாவேந்தரும் தன்மான இயக்கமும் தொடக்கக் காலத்தில் பாவேந்தர் கடவுட் பாடல்கள் எழுதிவந்தார். தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள