பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/290: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:54, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் மயிலம் என்ற ஊரில் உள்ள சுப்பிரமணியக் கடவுள் மீது மயிலம் பூரீசுப்பிரமணியர் துதியமுது என்ற நூலை எழுதினார். பிற்காலத்தில் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டுத் தன்மானக் கவிஞராக, புரட்சிக் கவிஞராக, மாறினார். புதுச்சேரியில் பெரியாரின் உரையைக் கேட்ட பின்புதான் கடவுள் மறுப்புப் பாடல்களை எழுதத் தொடங்கினார். சங்க மருவிய காலம் முதல் புதுமைக் கவிஞர் என்று போற்றப்படும் சுப்பிரமணியக் கவிஞர் காலம் வரையில் தமிழ் இலக்கியத்தை அடக்கி ஆண்டு வழி நடத்திய மத வழிச் சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் மீறிச் சமயச் சார்பற்ற கருத்துக்களை அந்த இடத்திலே அமர்த்தினார் என்பதே சுப்புரத்தினக் கவிஞர் செய்த முதல் புரட்சி.'. அத்துடன் நில்லாமல் சமயங்களையும் சாதிகளையும் சாடினார். சாதி என்பதே தமிழுக்கில்லை, தமிழருக் கில்லை என்று உறுதியாகக் கூறுகின்றார். மிக்குயர்ந்த சாதி கீழ்ச் சாதி என்னும் வேற்றுமைகள் தமிழ்க்கில்லை தமிழர்க் கில்லை பொய்க்கூற்றே சாதி எனல், ஆரியச்சொல் புதுநஞ்சு: பொன்விலங்கு! பகையின் ஈட்டி -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 57. என்று சாதி என்பது ஆரியச்சொல் என்றும், அது தமிழர்க்கு நஞ்சு போன்றது, விலங்கு போன்றது, பகையின் சட்டி போன்றது என்றும் ஒப்புமை காட்டுகின்றார். இதன் நோக்கம் சாதி என்ற நஞ்சு அழிக்கப்பட வேண்டியது, சாதி என்ற விலங்கு நொறுக்கப்பட வேண்டியது, சாதி என்ற ஈட்டி ஒடிக்கப்படவேண்டியது என்பதேயாகும். சாதி ஒரு பழிச்சின்னம் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சின்னம் இருக்கும். அது தேசியச் சின்னம் என்று அழைக்கப்படும். இந்தியாவின்