பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/292: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:54, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்கின்றார். அறிவு வளராத ஓர் இனம் எந்தப் பயனை எய்திவிட முடியும். மக்கள் அனைவரும் அறிவு பெற வேண்டுமானால் இந்தச்சாதி சமயங்களை நாட்டைவிட்டு ஒட்டவேண்டும். சாதி சமயங்களால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறும் பாவேந்தர் அதற்கான வழியையும் கூற வேண்டாவா?

  • சமுதாயத்தின் புண்களுக்கு மருந்திடாமல் தாண்டி ஒடுவோர் உருப்படியாக என்ன சாதிக்க இயலும்? குறை களைக் கடிந்திடாமல், குற்றங்களைச் சாடிடாமல், சமுதாயக் கோளாறுகளைக் கண்டித்திடாமல், இவற் றிற்குத் தக்கவழி காட்டிடாமல் கவிதைகளை எழுதிக் குவித்திடுவோர் இடிப்பாரை இல்லாத மன்னனைப்போல் சமுதாயத்துக்குக் கேடுதான் செய்வர்ல் அவர்களால் எப் பயனும் இல்லை. பாவேந்தரும் மாற்றத்திற்குத் தக்க

வழியையும் காட்டுகின்றார். சாதியும் சமயமும்தான் நோய் என்று கண்ட பின்பு அந்த நோயின் மூலம் எது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நோயை முழுமையாக நீக்க முடியும். நோய்நாடி நோய்முதல் காடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்* என்பார் வள்ளுவர். அதற்கிணங்கப் பாவேந்தரும், சாதி நோயின் மூலம்-வேர்- ஆரிய ஆதிக்கமே என்று உறுதி யாகக் கூறுகின்றார். "தம்மை உயர்வாகக் கருதிக்கொண்டு பிறரைத் தாழ்த்தும் மனப்பான்மை எல்லாரிடமும் உள்ளது. எனினும் ஆரியருக்கு அது மிகுதி எனலாம். அவர்கள் சென்று தங்கிய இடங்களில் எல்லாம், அங்குள்ளவர்களோடு கலந்து பழகி அவர்களின் நாகரிகப் பழக்க வழக்கங் களையும், கலைகள் முதலியவற்றையும் தம்முடையனவாக ஆக்கிக் கொண்டு, பிறகு உயர்வெல்லாம் தமக்கே என்றும்,