பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/293: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:54, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 293, அங்கு வாழ்வோர் அனைவரும் காட்டுமிராண்டிகள் என்றும் துரற்றும் இயல்பினராக விளங்கினர்' இவ்வாறு தங்களை அறிஞர்களாக மாற்றிக்கொண்ட ஆரியர்கள் தமிழக மன்னர்களை ஆட்டிப்படைக்கும் சக்தியாக மாறினர். அல்லது அதற்குத் தமிழக மன்னர்கள் இடம் கொடுத்தனர். அவர்கள் மன்னனுக்குக் கூறும் அறிவுரை, ஓராயிரம் பேர் ஒழிந்துபோ கட்டுமே மற்றவர் வழிக்கு வருவா ரன்றோ? திருத்த வேண்டும் திருந்துவர் மக்களைத் திருத்தல் மன்னன் கடமை மனுநூல் நாட்டில் வழங்க வேண்டுமே அதற்குப் பார்ப்பனர் காப்பாற்றப் படுதல் வேண்டும் ஆள்வோர் பார்ப்பனர் சொற்படி ஆள வேண்டும் விளைபொருள் விற்பவர் வேண்டும் திருவடி தொழுது நம் பெருமை காக்கவும் வரும்படி நமக்கு வைத்து வணங்கவும் காலாம் வகுப்பு நமக்கு வேண்டுமே - பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 63. என்பதாகும். இவ்வாறு நான்கு வருணக் கோட்பாட்டை உண்டாக்கி, சாதிக்கொரு நீதி சொல்லும் மனுநீதியைக் காக்க வேண்டுவது மன்னனின் கடமையாம் என்று கூறிக் கூறி மன்னர்களின் சிந்தனையைக் குருடாக்கி வந்தனர். மன்னர்களை மட்டுமல்லாது பொதுமக்களையும் ஏமாற்ற எத்தனித்தனர் அகத்தியக் குள்ளன் ஆரியர் கொள்கையைப் புகுத்தினான் செந்தமிழ்ப் பொன்னா டதனில்! ஆதலால் 'குள்ளனை அணுவும் கம்பாதே' என்ற பழமொழி அன்று பிறந்தது