பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/295: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:54, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 295 மூடகம்பிக்கையை ஒழித்தல் சாதி சமயங்களை ஒழித்துவிட்டால் மட்டும் அறியாமை நீங்கி அறிவு வளர்ந்துவிடாது. சாதி சமபங்கள் ஒழிவதுடன் அவற்றால் உண்டாகிய மூட நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும். கண்மூடித்தனத்தால் நாம் என்ன சொல்கின்றோம், எதைச் செய்கின் கிறோம் என்று தெரியாமலேயே மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் எழுச்சிக்கு, அறிவின் வளர்ச்சிக்கு மூடநம்பிக்கை ஒழிதல் வேண்டும், இம்மூட நம்பிக்கைகளைப் பெரும்பாலான மக்கள் பின்பற்றுகின்றனர் என்ற காரணத்திற்காகவோ, தொன்றுதொட்டு வரும் ஒன்று என்பதற்காகவோ அதனை நாம் போற்ற வேண்டிய தேவையில்லை. அவ்வாறு இருப்பதில் ஒன்று சாதகம் (சோதிடம்). தமிழர்களிடம் சிறந்த வானவியல் * 3]) ol) L / Т ДЕ இருந்த இக்கலை பிற்காலத்தில் பொய்க்கலையாகி விட்டது. பாவேந்தர் காட்டும் இருவரைக் காணுங்கள். அவர்களின் உரயாடல் வருமாறு. முதலில் சோதிடம் கேட்க வந்தவர் சாதகத்தைச் சோதிடரிடம் கொடுக்கின்றார். அதனைப் பார்த்துச் சோதிடர் கூறுவதில் உரையாடல் தொடங்கு ன்ெறது. இந்த வைகாசி எட்டுத் தேதிக்கு முந்தியே திருமணம் முடிந்திட வேண்டும் அத்தனை விரைவிலா? அத்தனை விரைவிலா? நடுவில் ஒரே ஒரு தடையிருப்பதால் ஆடியில் திருமணம் கூடுதல் உறுதி ஆடியில் திருமணம் கூடுமோ ஐயரே? ஆடிக் கடைசியில் ஆகும் என்றால் ஆவணி முதலில் என்றுதான் அர்த்தம் - -பாரதிதாசன், தொகுதி 3, ப. 121.