பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/296: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:55, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இவ்வாறு வாய்த்திறனில் மட்டுமே இக்கலையை வளர்த்து விட்டனர். எனவே இத்தகைய பொய்யான - மனித மனத்திற்குச் சாதகமாகக் கூறப்படும் சாதகம் போன்ற அனைத்து மூடநம்பிக்கைகளும் ஒழியவேண்டும். மனித நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்காமல் மதம் மூடத்தனத்தை வளர்ப்பதால் அல்லவா பிழைக்க வழியின்றி வாடுகின்றோம்; பிறருக்கு அடிமையாகி வாழ்ந்திருக் கின்றோம், சாத்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என்பவை சமயம் போட்ட குட்டிகள். இவை துரயவை. எனச் சமயம் இட்டுக் கட்டுகின்றது.' பேடி வழக்கங்கள் மூடத்தனம் - இந்தப் பீடைகளே இங்குச் சாத்திரங்கள். -பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 1, ப. 69. இச்சாத்திரங்கள் எல்லாம் தொலைதல் வேண்டும். இவை யெல்லாம் தமிழரின் நாகரிகம் என்பதற்கு, சாதியில்லை என்பதுதான் எங்கள் நாகரிகம் சமயமில்லை என்பதுதான் எங்கள் நாகரிகம் -பாரதிதாசன், குறிஞ்சுத்திட்டு, ப. 131. என்றுஆர்ப்பரிக்கின்றார் பாவேந்தர். தமிழ் நாகரிகத்தின் மணிமுடியை இரண்டே அடிகளில் கூறிவிட்டார். தமிழ். நாகரிகத்தைக் கூறிய பாவேந்தர், தமிழ் வாழ்வு எது, என்பதற்கு, ஆயிரம் சாதிகள் ஒப்பி - நரி அன்னவர் காலிடை வீழ்ந்து நாய்களைப் போல் தமக்குள்ளே - சண்டை நாளும் வளர்க்கும் மதங்கள் தூயனவாம் என்று நம்பிப் - பல தொல்லை அடை குவ தின்றி எேனல் நான் எனல் ஒன்றே - என்ற நெஞ்சில் விளைவது வாழ்வு -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 2, ப. 159.