பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/299: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:55, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 299 டிற்கும் முன்பே பல உருவங்களை உடைய கடவுள்களை மக்கள் வழிபட்டு வந்தனர் என்பதனைப் பண்டைய கிரேக்கக் காவியங்களான இலியட்டும் ஒடிசியும் உணர்த்துகின்றன. இந்தியாவில் கூடச் சிந்துசமவெளி நாகரிக மக்கள் பசுபதி லிங்கம் போன்ற வடிவங்களைக் கடவுள்களாக வழிபட்டனர் என்பதை அகழ்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்றளவிலும் Զ- GՆ) 5 நாகரிகத்துடன் இணையாத பழங்குடி மக்களிடமும் உருவ வழிபாடு இருந்து வருகின்றது என்பதனை நீலகிரியிலும், சோட்டா நாகபுரியிலும், நாகலாந்திலுமுள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கையைக் கொண்டு அறிந்துகொள்ள முடிகின்றது. உருவ வழிபாட்டின் தோற்றம் மிகத் தொன்மையான காலத்திலேயே மக்கள் உருவ வழிபாட்டை மேற்கொண்டனர், என்று முன்பு கண்டோம். இவ்வுருவ வழிபாடு இயற்கை வழிபாட்டிலிருந்து தோன்றிய தாகும். முதலில் மனிதன் இயற்கையையே வழிபட்டான். நாகரிகம் வளர வளர இயற்கையின் வடிவங்களைக் கற்களில் வடித்து அதனை வழிபட்டான். மனிதன் கூடி வாழத் தலைப்பட்ட பின்பு மனிதனையும் வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. மக்கள் கூடிவாழத் தலைப்பட்ட பின்பு தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து அவனது சட்ட திட்டங் களுக்குக் கீழ்ப்பட்டு நடந்தனர். அத் தலைவனுக்குத் துணையாகப் பலர் இருந்தனர். இவர்கள் போர்க் காலத்தும், இயற்கையின் சீற்றத்தின் போதும் மக்களைப் பாதுகாத்தனர். போரில் வீழ்ந்துபட்ட வீரனுக்கு நடுகல் நட்டு அவனை வழிபட்டனர். இப்பழக்கம் தொல் காப்பியனார் காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது எனபதனை,