பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/302: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:55, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சமயஞ்சார்ந்த துறைகளில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் மேலாதிக்கம் தொடர்ந்து நிலைபெற்றது. தமிழர்களின் நிலை தாழ்ச்சியுற்றது. தமிழரிடையே ஏற்றத் தாழ்வு பெருகியது. இந்நிலையிலிருந்து தமிழர்கள் விடுபடுவதற்கும் மீண்டும் எழுச்சி பெற்று மற்றவர்களுடன் சரிநிகர் சமானமாக வாழ்வதற்கும் உரியன செய்யவேண்டும் என்று 20 -ஆம் நூற்றாண்டு நல்லறிஞர் பெருமக்கள் எண்ணத் தொடங் கினர். அவர்களுக்குத் தலைமை வகித்தவர்தான் "தந்தை பெரியார் அவர்கள். அவர் சுயமரியாதை இயக்கம்" தொடங்கித் தமிழர்களை ஒன்றுபடுத்திப் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தார். தமிழர்களின் ஒற்றுமைக்குத் தடையாக இருப்பது சாதி சமயங்கள் என்று எடுத்துக் கூறினார். சாதி சமயங்கள் நாட்டை விட்டுத் தொலைய வேண்டுமானால் அவற்றின் வேராக இருக்கும் கடவுளை அழித்தாக வேண்டும் என்று எண்ணிக் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பரப்பலானார். சுயமரியாதை இயக்கத் தால் ஈர்க்கப்பட்டவர் பாவேந்தர் ஆதலால் கடவுள் களாலும் கோயில்களாலும் ஏற்படும் கேடுகளைத் தமக்கே உரிய புரட்சிக் குரலில் பாடுகின்றார்: சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத் தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி ஊறும் பகுத்தறிவை இல்லாதொழித்து விட்டுச் சாறற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப் பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கியே அந்தக் கற்கள் கடவுள்களாய்க் காணப்படும் அங்கே. டபாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 6. கடவுள் நம்பிக்கையால் மக்கள், உழைப்பின் மேல் நம்பிக்கை இல்லாமல் சாறற்ற சக்கையாய்க் கிடக்கின்றார் களே என்று கடவுள் நம்பிக்கையால் ஏற்படும் தீமையை எடுத்துக் கூறுகின்றார்.