பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/303: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:55, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 303 இன்னமும் எல்லாவற்றுக்கும் கடவுளே காரணம் என்ற மூடநம்பிக்கையை மக்களிடம் சிலர் பரப்பி வருகின்றனர். இம்மூட நம்பிக்கையை விலக்கிப் பகுத்தறிவு பெறுதல் வேண்டும். பச்சை விளக்காகும்-உன் பகுத்தறிவு தம்பி! பச்சை விளக்காலே-நல்ல பாதை பிடி தம்பி பத்துடனே மூன்று-நீ பகுத்தறிவைப் போற்று -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 157. என்று குழந்தைக்குப் பகுத்தறிவைப் புகட்டுகின்றார். எல்லாம் அவன் செயல்' என்று சொல்லிச் சொல்லி நம்மை மடையர்களாக்கிவிட்டு நமது உழைப்பை உறிஞ்சும் அம்மனிதர்களுக்கு நம் தோளின் வலிமையைக் காட்ட வேண்டும் என்பதனை, எல்லாம் அவன் செயலே என்று பிறர் பொருளை வெல்லம் போல்அள்ளி விழுங்கும் மனிதருக்கும் காப்பார் கடவுள்உமைக் கட்டையில் நீர் போகுமட்டும் வேர்ப்பீர் உழைப்பீர் எனஉரைக்கும் வீணருக்கும் மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த தேனின் பெருக்கே, என் செந்தமிழே கண்ணுறங்கு - பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, பக். 125-126. என்பதன் மூலம் உணர்த்துகின்றார். கோயிலின் கேடுறவு பண்டைக் காலத்தில் கோயில்களுக்கு இருந்த சிறப்பே தனி. கோயில்கள் ஊரின் நடுவில் இருக்கும். ஊரின் வரவு செலவுக் கணக்கை எல்லாம் சரிபார்க்கும் இடமாகக் கோயில் இருந்தது. ஊரில் விலை மதிப்பில்லாப் பொருள்கள்