பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/306: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:56, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் முப்பது கோடியர் பாரதத்தார் இவர் முற்றும் ஒரே சமூகம்-என ஒப்பும் தலைவர்கள் கோயிலில் மட்டும் ஒப்பா விடில் என்ன சுகம்? - பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 199. இதனால் கோயிலினால் கிடைக்கும் பயனை அல்லவா இழந்து விடுகின்றோம். பயனற்ற ஒரு பொருள் நமக்கு எதற்கு? மேலும் அறங்கள் மதிக்கப்படுவதில்லை. அறமற்ற இடம் அறநிலையமாக முடியுமா? எனச் சிந்தித்த பாவேந்தர், - அறம் சொன்ன வள்ளுவர் தாம் கோயிலை அறிவித் தாரா? - பாரதிதாசன், குறிஞ்சித்திட்டு, ப. 122. என்று கேட்டு நம் சிந்தனையைத் துரண்டி விடுகின்றார். சாதி, மதம், கடவுள், கோயில் என்ற கட்டுக்களில் இருந்து மனிதன் விடுதலை பெறவேண்டுமானால் எதனை யும் பகுத்தறிவுக் கொண்டு சிந்தித்தல் வேண்டும் என்கின்றார் பாவேந்தர் : பழைய நூற்கள் இப்படிப் பகர்ந்தன என்பதால் எதையும் நம்பிவிடாதே உண்மை என்று நீ ஒப்பிவிடாதே! பெருநாளாகப் பின்பற்றப்படுவது வழக்கமாக இருந்து வருவது என்பதால் எதையும் நம்பி விடாதே உண்மை என்று நீ ஒப்பிவிடாதே பெரும் பான்மையினர் பின்பற்று கின்றனர் இருப்பவர் பலரும் ஏற்றுக் கொண்டனர்