பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/309: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:56, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 309. என்று வரும் பாவேந்தரின் அடிகள் அன்னாரின் கடவுட் கொள்கையை நன்கு விளக்குகின்றன. மானுடத்தைப் போற்றல் கடவுளை மற; மனிதனை நினை' என்றார் தந்தை பெரியார். இதற்குக் காரணம், கடவுள் ஏற்புக் கொள்கை யாளர்கள் மனிதர்களை முழுக்க முழுக்க மறந்துவிட்டுத். தங்கள் சி ந் த ைன எல்லாவற்றையும் கடவுளிடம். செலுத்தினர். செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்: என்பதற்கிணங்க மக்கள், நினைத்துப் போற்ற வேண்டிய மானுடத்தை மறந்தனர். மாறாக, கடவுளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தனர். இந்நிலை கண்டு பாவேந்தர் வேதனை உறுகின்றார். செல்வக் குழந்தை தாய்ப்பால் இன்றித் திடுக்கிடும் போதே - அப்பனே துடித்தழும் போதே - கோயிலின் கல்லின் தலையில் பாலூ ற்றினால் உலகம் ஒப்பாதே - திருந்திடு வாயோ இப்போதே! -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 4, ப. 158. வேதனை மிக மிக அவர் பாட்டில் ஒர் உறுதி உருவா கின்றது. புரட்சி தலைகாட்டுகின்றது. மெல்ல மக்களைத் துரண்டுகின்றார் பாவேந்தர். o பாதிக்குதே பசி என்றுரைத்தால், செய்த பாபத்தைக் கார ணம் காட்டுவார் - மத வாதத்தை உம்மிடம் நீட்டுவார் - பதில் ஓதிகின்றால் படை கூட்டுவார் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 159.