பக்கம்:புகழ்மாலை.pdf/57: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

புகழ்மாலை
(வேறுபாடு ஏதுமில்லை)

00:07, 14 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா 55 மதுரத் தமிழ் காக்கும் மயிலை சிவமுத்து எளியநடை எளியஉடை , எளிய வாழ்க்கை; எப்போதும் தமிழ்மொழியை வளர்க்குந் தொண்டு; வெளிநடிப்பை, விளம்பரத்தை, விரும்பா உள்ளம், வித்தைக்கு முத்து; இவர் மயிலை முத்து. பிளவுதனை உண்டாக்கும் சாதி பேதப் பிரிவினையை எதிர்கின்ற வடலூர் வள்ளல். விளக்கேற்றி வைத்துவரும் பெரியார் கல்வி விழிப்புதனை உண்டாக்கும் பாண்டி வேந்தன் நெருப்புக்குப் புகைஉண்டு; ஆனால் விண்ணில் நீந்துகின்ற கதிருக்குப் புகையேன் இல்லை? இரவினிலே தாமரைப்பூ தூங்கு வானேன்? இலைப்பந்தல் போடுகின்ற மரங்கள் யாவும், தரைமீது நடக்காமல் நின்று கொண்டே தவிப்பானேன் எப்போதும்? என்று பிஞ்சுப் பருவத்தில் தன் தந்தை இடத்தில் கேட்டுப் பகுத்தறிவுத் திறமைதனை வளர்த்த மேதை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/57&oldid=293781" இலிருந்து மீள்விக்கப்பட்டது