பக்கம்:புகழ்மாலை.pdf/59: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

புகழ்மாலை
(வேறுபாடு ஏதுமில்லை)

00:07, 14 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா 57 பாம்பன் நகரத்து பர்னாட்ஷா பர்னாட்ஷா போல்தனது முடிவு தன்னைப் பயமின்றி எடுத்துரைத்து வந்த தாலே, கர்விஎனப் பலராலும் நினைக்கப் பட்ட கவிமனிதர் தான் இந்த பாம்பன் ஸ்வாமி நர்மதையைக் கங்கைதனை நினைக்கும் நாளில், நம்நாட்டுக் காவிரியை நினைக்க வைத்து, பர்வதத்தோள்; தமிழ்வீரப் பார்வை நன்கு பாடுகின்ற திறமைபெற்று இருந்த சிங்கம் காந்தியைப்போல் உணவுமுறை, ஒழுக்கந் தன்னைக் கடைப்பிடித்த கவிவாணர்; தர்க்க வீரர் மாந்தளிர்போல் மேனியுள மனைவியோடு, வள்ளுவர்போல் இல்லறத்தை நடத்தி, வாழ்ந்து, சாந்தநிலை தனையடைய விரும்பிப், பின்னர், சந்யாசி வாழ்வைமேற் கொண்ட போதும், தீந்தமிழ்க்குத் தீங்குசெயும் கூட்டத் தாரைத் தினந்தோறும் எதிர்த்திட்ட சைவ ஞானி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/59&oldid=293785" இலிருந்து மீள்விக்கப்பட்டது