பக்கம்:புகழ்மாலை.pdf/61: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

புகழ்மாலை
(வேறுபாடு ஏதுமில்லை)

00:07, 14 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதா 59 சிந்தனைச் சிற்பி - சிங்கார வேலர் வழக்கறிஞன் பெருந்தர்க்க வாதி வாழும் மானிடர்க்கு விஞ்ஞான எண்ணம் தந்தோன். கிழப்பருவம் வரும்வரையில் வாழ்ந்திருந்து கீழ் மண்ணாய் மாறிவிட்ட உலக மேதை ! எழுத்தாளன் பெய்மதத்தை ஆரியத்தை எதிர்த்திட்ட உளிமனிதன் அறிவில் மூத்தோன். முழுத்தாடி வைத்திருக்கும் பெரியாருக்கு மூலபலம் போன்றிருந்த மூச்சு நண்பன்: சாத்திரத்தின் ஊழல்தனை எடுத்துக் கூறிச், சத்துள்ள காரணத்தால் மாற்றஞ் செய்தோன். நாத்தீக மாநாட்டை முதலில் இந்த r நாட்டினிலே நடத்தியவன்; வைதீகத்தைத் தீர்த்துவிட்டுத் தான்மற்ற வேலை என்று தினந்தோறும் அதற்காகப் பாடு பட்டோன். மாத்தமிழன் மீனவர்க்கு முத்து தெய்வ மனப்போக்கை மாற்றி வந்த சென்னைப் புத்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/61&oldid=293789" இலிருந்து மீள்விக்கப்பட்டது