முல்லைப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 153:
==பிறகுறிப்புக்கள்:==
 
'''வினைமுடிபு''':
தலைவி தன்னிடத்தே வதிகின்றவனை இன்றுயிலைக்காணாளாய் (80)நெஞ்சாற்றுப்படுத்த புலம்பாலே(81) ஒடுவளை திருத்தியும்(82) மையல்கொண்டும் உயிர்த்தும்(83) நடுங்கி நெகிழ்ந்து(84) பூப்போலுண்கண் புலம்புமுத்துறைப்ப(23) அதுகண்டு துயருழந்து(80) தேற்றியும் (82) வற்புறுத்திப் பிரிதல் வேண்டுமெனக் கருதிக் காட்டவும் காட்டவும் காணாதவள் (22) பெருமுது பெண்டிர் (11) எவ்வம் களையெனக் கூற (21) அதுகேட்டு நீடுநினைந்து (82) பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலையில் (6)இட்டசுடர் அழலாநிற்க (85) இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோளுடைய (88)அஞ்செவிநிறையப் (89)பரந்தபாடியிலே (28)அரசிருந்து (79)ஒருகை பள்ளியொற்றி ஒருகை (75) முடியொடு சேர்த்தி (76) வேழத்தை (69) உள்ளியும் (72)மாவைச் சிந்தித்தும் (74) ஒழிந்தோரை உள்ளியும் (72) நினைந்து(76) நடுங்குதற்குக் காரணமான பாசறையிற் (79) பெரும்படைநாப்பண் வேறோர் (43) அகம் நேர்பு கண்டங்கோலி (44) யவனர் (61) புலித்தொடர்விட்ட நல்லில்லிலே (62) பொழுதளந்தறியும் (55) காண்கையர் (56) கன்னல் இனைத்தென்றிசைக்கையினாலே (58) மங்கையர் (47) திருமணிவிளக்கங்காட்டி (63) எழினிவாங்கியபள்ளியிலே சென்று(64) இளையர் கவளங் கைப்பச் (36) சுரையர் (48) மாட்டப் (49) பெருமூதாளர் ஏமஞ்சூழ (54) மிலேச்சர் உழையராக (68) வெண்மணி நிழத்திய நடுநாளினும் (50) மண்டமர்நசையாற் கண்படைபெறாதிருந்து (67) மற்றைநாட் படைகொணோன் விரலாலே (77) வென்று (89) கண்ணிவலந்திருத்திப் (78) பிறர் வேண்டுபுலங்கவர்ந்த (90) விசயத்தாலே வெல்கொடியுயர்க் (91) காடு பிறக்கொழியப் (101)பெருவழியிலே (97) வயிரும் வளையுமார்ப்ப (92) ஈண்டு பெருந்தானையோடே (90) துனைபரிதுரக்குஞ் செலவினையுடையராய் வந்தவருடைய (102) தேர்பூண்டமா (103) ஆலின (89) வென வினை முடிக்க.- '''நச்சினார்க்கினியர் உரை'''
 
"செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே, வன்புறை குறித்த றவிர்ச்சி யாகும்" (தொல். கற்பியல்,சூ.44) என்பதனால் வற்புறுத்திப் பிரிதல் வேண்டுமென்றுணர்க.
:தொல்காப்பியனார் கருத்திற்கேற்ப நப்பூதனார் செய்யுள் செய்தாரென்றுணர்க். இவ்வாறன்றி ஏனையோர் கூறும் பொருள்கள் இலக்கணத்தோடு பொருந்தாமையுணர்க.
 
பெருமுதுபெண்டிர் (11), நல்லோர் (18) போகித் (7) தூஉய்த் தொழுது (10) விரிச்சிநிற்ப (11) அவர்கேட்ட நன்னர் (17) வாய்ப்புள் (18) ஆய்மகள் (13) கையளாகிக் (14) கன்றின் (12) அலமரனோக்கித் (13) தாயர் இன்னே வருகுவரென்போளுடைய (16) நன்மொழியாக யாங்கள் கேட்டனம்; அதன் கருத்தாதல் (17) தலைவர் வருத்ல் வாய்வது (20); நல்ல காரியம்(18); மாயோய் (21), நீ நின் (20) பருவரலெவ்வம் களையென்று கூற (21) அதுகேட்டு நீடு நினைந்து (82) என்க.
இங்கனம் பொருள் கூறாமல் தலைவியது இரக்க மிகுதிகண்டு பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டுவந்து தலைவர் வருவராதல் வாய்வது; நின்னெவ்வங்களையென்று பல்காலும் ஆறுவிக்கவும், ஆற்றாளாய்த் துயருழந்து(80) புலம்பொடு(81) தேற்றியும் திருத்தியும் (82) மையல்கொண்டும் உயிர்த்தும் (83) நடுங்கிநெகிழ்ந்து (84) கிடந்தோள் (88) எனப் பொருள்கூறியக்கால் நெய்தற்குரிய இரங்கற்பொருட்டன்றி முல்லைக்குரிய இருத்தற்பொருட்டாகாமை யுணர்க. அன்றியும் தலைவன் காலங் குறித்தல்லது பிரியானென்பதூஉம், அவன் குறி்த்தகாலங் கடந்தால் தலைவிக்கு வருத்தமிகுமென்பதூஉம். அது பாலையாமென்பதூஉம், அவ்வாற்றாமைக்கு இரங்கல் நிகழ்ந்தால் நெய்தலாமென்பதூஉம் நூற்கருத்தாலுணர்க.
'''-நச்சினார்க்கினியர் உரை'''
"https://ta.wikisource.org/wiki/முல்லைப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது