பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/556: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:53, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 - தன்னை அறியாத தன்மையனும் என்று சொல்கிருர், அப்படி உள்ளவன் யார்? நுட்பமாகச் சொன்னர் முதலில், என்ன உடையான் என்றும், ஏகமாய் நின்முன் என்றும், தன்னை அறியாத தன்மையன் என்றும் சொல்லி' விட்டு அவனே இனம் கண்டுகொள்வதற்கு அடையாளம் காட்டுகிரு.ர். *: அவனுடைய சடையைப் பற்றிச் சொல்கிருர், போன பாட்டில், திரைமருவு செஞ்சடையான் என்று சொன்னவர் அந்த எண்ணத்தோடே பேசுகிருர். அங்கே செஞ்சடையான்' என்று மட்டும் சொன்னர். இங்கே சற்று விளக்கமாகச் சொல்கிருர். அது செம்பொன்னைப் போல ஒளிர்கிறது, செம்பொன். னைச் சுருள் சுருளாக வைத்தால் எப்படி இருக்கும்? அப்படி அவனுடைய தூய சடை தோற்றம் அளிக்கிறது. பொன்னைச் சுருளாகச் செய்தனய தூச்சடையான். அந்தச் சடையை, தூச்சடை' என்கிருர், அகங்களித்து, வந்த கங்கையின் அகங்காரத்தைப போக்கித் துயதாக்கிய, சடை அது. சாபமேற்ற சந்திரனத் தூயவனுக்கிப் புனைந்த சடை அது. ஆகவே தூய சடையாயிற்று. அவன் வானவர்களுக்கு அருள் பாலிக்கிருன். அவர்கள் தன் அருளைப் பெற்றுத் தம் தம் கடமைகளை முறையாக ஆற்றும்படி செய்கிருன். தன்னுடைய அருளை அவர்களுக்கு, ஆகும்படி திருவுள்ளங் கொண்டு வைக்கிறவன் அவன். இவர்கள் அடியவர்களைப் போலச் சிறந்த தகுதிய்ைப் பெரு விட்டாலும் உலகம் நடைபெறுவதற்காக அவர்கள் தம் தொழிலைச் செய்ய வேண்டுமாதலின் அவர்களுக்குத் தன் அருளைத் துணையாக வைத்திருக்கிருன். அடியவர்கள் குழந்தை போன்றவர்கள். அவர்களிடத்தில் இயல்பாக இறைவனுக்கு அன்பு சுரக்கிறது. அவர்களைத் தன் உடைமை.