பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/559: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:53, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

549 விரும்பி அன்பு செய்தால் அதனினும் சிறந்த செயல் வேறு இல்லை. அவனைப்பற்றிச் சொல்கிரு.ர். - மனிதர்களைவிட உயர்ந்தவர்கள் தேவர்கள். தம்மினும் உயர்ந்தவர்களைப் பற்றிக்கொண்டு வாழ்வதுதான் அறிவாளி களுக்கு அழகு,இறைவனே எல்ல்ாத் தேவர்களுக்கும் தலைவன் அவர்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் தரும் உபகாரி. "இதை நீ முதலில் தெரிந்துகொள்' என்று தொடங்குகிருர். அவன் கண்டாய் வானேர் பிரான் ஆவான் என்றும். சிலர் சில காலம் தலைவர்களாக இருப்பார்கள். பிறகு அந்தத் தலைமைப் பதவி போய்விடும். எப்போதுமே தலை வராக இருக்கும் நிலை இந்திராதியர்களுக்கு இல்லை. ஆனல் சிவபெருமானே என்றும் தலைவனக இருப்பவன். மற்றவர்கள் எல்லாம் தம் தம் தொழிலே ஆற்றும் தலைவர்களாக இருந்து, தமக்கு வரையறுக்கப்பட்ட காலம் ஆனவுடன் அந்தத் தலை மைப் பதவியிலிருந்து இறங்கி விடுவார்கள். இறைவனே என்றும் பிரானுக இருப்பவன். + - அவன் எப்படி இருக்கிருன்? அழகிய பவளவண்ணத் திருமேனி கொண்டவன் அவன். "பவளம் போல் மேனியிற் பால்வெண்ணிறும்’ என்று அப்பர் பாடுவார். குழகன்றன் அம்பவள மேனி” (39) என்று முன்னும் அம்மையார் சொல்லியிருக்கிருH. இப்போதும், அவன் கண்டாய் அம்பவள வண்ணன் என்கிரு.ர். இறைவனுடைய நீல கண்டத்தைப் பற்றி அடிக்கடி சொல்வது அம்மையாருக்கு இயல்பு. முதல் பாட்டிலேயே, மைஞ்ஞான்ற கண்டத்து வானேர் பெருமானே’ என்று சொன்னவர். அந்த வானேர் பிரானுடைய கண்டத்தை இப்