பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/568: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:54, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 அன்பு இருக்கும்? இப்படி ஒர் எண்ணம் தோன்றியது. அம்மை யாருக்கு. யாரைக் கேட்பது? அந்த மங்கையரைக் கேட்டால் ஒவ்வொருவரும் தம்மிடந்தான் இறைவன் நெருங்கி அன்பு செய்கிறவன் என்று சொல்லக்கூடும். அவ்வாறு பட்சபாத மின்றி அன்பு செய்கிறவன் அவன். ஆலுைம் அவனுடைய திருவுள்ளத்தில் யாரேனும் ஒருவரிடம் மிகுதியான அன்பு இருக்குமோ? இந்த ஐயத்தை எப்படித் தீர்த்துக் கொள்வது? இறைவனையே கேட்டுவிடலாம் என்று அம்மையாருக்குத் தோன்றுகிறது. "எம்பெருமானே, இந்த இரண்டு பேர்களுக்குள் உன் னுடைய அன்புக்கு நெருக்கமானவர் யார்?" என்று அவனையே நோக்கிக் கேட்கிரு.ர். ஈங்குஇவருள் அன்பு அணியார் சொல்லுமின் இங்கு ஆர்?' இறைவன் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் இடத்தைப் பார்த்தால் இரண்டு பேருமே சிறந்தவர்களாகத் தோன்று கின்றனர். உடம்பிலே ஒரு பாதியையே ஒருத்திக்கு வழங் கின்ை என்ருல் அவர்களுடைய நெருக்கத்தைச் சொல்ல வேண்டியதில்லை. ஆல்ை மற்ருெருத்தியைத் தலையர்லே தாங்குகிருன், அன்புள்ளவர்களை ஆதரித்து ஒட்டியுறவாடு வதை, "தலையினலே தாங்குகிருன்” என்று சொல்வது உலக வழக்கு. அப்படிப் பார்த்தால் தலையாலே தாங்கும் சல மகளாகிய கங்கைக்கு இறைவன் இரண்டாந்தரமான இடத் தைக் கொடுத்திருக்கிருன் என்று சொல்ல முடியாது. உடம் புக்குள் உத்தம அங்கமாக இருப்பது தலே. அந்த உத்தமமான இடத்தையே கங்கைக்கு அளித்திருக்கிருன். அவ்வாருளுல் அவளிடத்தில் உள்ள அன்பு அவ்வளவு உயர்ந்ததன்று என்று. சொல்ல முடியுமோ?