பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/574: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:55, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 (அரனவனைக் காண வல்லார் ஆர் என்று கூட்டுக, அரனவன: அவன்: பகுதிப் பொருள் விகுதி. அரனே என்பது தான் பொருள். போர்வையதேைல என்பதிலுள்ள அது என்பதும் பகுதிப்பொருள் விகுதியே. போர்வை என்றது போர்த்தப்படுபவருக்குத் துன்பம் இல்லாமல் மூடியதைக் குறித்தது. குளிருள்ள காலத்தில் குளிரால் நடுங்கும் ஒருவருக்கு மற்ருெருவர் போர்வையைப் போர்த்தில்ை அதனுல் அவர் இன்பம் அடைவாரேயன்றிச் சினம் கொள்ள மாட்டார். அவ்வாறு அன்பினுல் போர்த்தும்பொழுது இறைவன் அதை மனமுவந்து ஏற்றுக்கொள்வான். போர்த்தல் - மூடுதல். அமைத்தல் - வெளியில் பிதிர்ந்து வராமல் இருக்கச் செய்தல், சீர் வல்ல-இறைவனிடம் கொண்ட நெருக்கத்தால் பெற்ற சிறப்பிலே உரம் பெற்றிருந்த இறைவனுடைய சிறப்புக்களேயெல்லாம் அறிய வல்ல என்றும் பொருள் கொள்ளலாம். தாயம்-உரிமை. நாமும்: உம்மை மற்ற அன்பர்கள் செய்வதைப் போல நாமும் செய்தோம் என்று குறித்தது; எச்சஉம்மை. தனி நெஞ்சு-வேறு ஒன்றும் புகாத நெஞ்சம். நெஞ்சின் உள்-அந்தரங்கத்தில். மாயத்தால் உள்ளே ஆடைத்து மறைத்து வைத்தோம் என்று கூட்டுக. மாயம் என்றது பிறர் அறியாதவாறு என்பதைக் குறித்தது.) இறைவனே அன்பினால் உரிமையாக்கிக் கொள்ளலாம் என்பது கருத்து. அற்புதத் திருவந்தாதியில் வரும் 96-ஆவது பாடல் இது.