பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/575: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:55, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. செந்தீ அழல் இறைவன் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம் என்ற மூன்று தொழிலையும் செய்கிருன். அந்த மூன்று தொழில்களையும் தன் ஆணையால் பிரம்ம விஷ்ணு ருத்திரர்களைச் செய்யச் சொல்வி அவர்களுக்கு வேண்டிய ஆற்றல்களே அருளுகிருன். 'மூவண்ணல் தன் சங்கிதி முத்தொழில் இயற்ற வாளா, மேவு அண்ணல்’ என்று பரஞ்சோதி முனிவர் கூறுவார். உயிர்க் கூட்டங்கள் தம் வினைக்கு ஏற்ப உடம்பை எடுத் துப் பிறந்தும் வாழ்ந்தும் இறந்தும் மீண்டும் பிறந்தும் வரு கிரு.ர்கள். ஒவ்வோர் உயிரும் இவ்வாறு பிறவிச் சுழலில் சுழன்று வருகிறது. மகாப் பிரளய காலத்தில் எல்லா உயிர் களுக்கும் ஒய்வு கொடுப்பது போல இறைவன் சர்வசங்காரம் செய்கிருன், ஜலப் பிரளயம், அக்கினிப் பிரளயம் என்பது போல் பிரளயங்கள் பல வகைப்படும். உலகமெல்லாம் நீரில் அமிழ்ந்து கிடப்பது ஜலப் பிரளயம், தியால் வெந்து அழிவது அக்கினிப் பிரளயம், காலாக்கினி ருத்திரர்களை அதிஷ்டித்து நின்று அக்கினிப் பிரளயத்தை நடத்துகிருன் இறைவன். இறைவன் அக்கினிப் பிரளயத்தை நிகழ்த்தும்போது எங்கே பார்த்தாலும் தீ மூண்டு நிறைந்து நிற்கிறது. தீக் கொழுந்துகள் பலபடியாகச் சிறி எழுந்து உலகை எரிக் கின்றன. அந்தர் மத்திய பாதலம் என்று சொல்லும் மூன்று தட்டாகிய உலகங்களும் அழலால் எரிந்து சாம்பலாகின்றன. அந்த மூன்று உலகங்களுக்கும் உள்ளே புகுந்து எல்லாப் பொருள்களையும் தனக்குள் அடக்கிக் கொண்டு அந்தச் செந் தீயின் அழலானது எழுந்து எரிகின்றது. அதன் நாக்குகளுக்கு