பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/578: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:56, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

563. மறைத்துஉலகம் ஏழினிலும் வைத்தாயோ? அன்றேல் உறைப்போடும் உன் கைக் கொண்டாயோ?-கிறைத்திட்டு உளைந்துஎழுந்து எேரிப்ப - மூவுலகும் உள்புக்கு அளைந்துஎழுந்த செக்தி அமல். ‘எம்பெருமானே, சர்வப் பிரளய காலத்தில் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து நின்று சீறி எழுந்து நீ எரிப்பதனுல் மூன்று உலகங்களிலும் கலந்து பொங்கி எழுந்த பிரளய காலாக்கினியாகிய செம்மையாகிய தீயின் கொழுந்துக: மற்றக் காலங்களில் இந்த உலகம் ஏழினிலும் மறைந்து வைத்தாயோ? அல்லாமல் அதனை அதன் வெம்மையோடும் நின் திருக்கத்தில் பாதுகாத்து வைத்தாயோ? இதனே எனக்குச் சொல்லியருள வேண்டும். (உலகம் ஏழினிலும் மறைத்து வைத்தாயோ என்று கூட்டுக. உறைப்பு-வெம்மை மிகுதி. நிறைத்திட்டு-எங்கும் தன் வெப்பத்தை நிறையச் செய்து.உளேந்து-கொழுந்துகளே எழுப்பிச் சிறி. உள்புக்கு-உள்ளே புகுந்து. அளேத்து எங்கும் கலந்து. செந் தீ - செந்நிறத்தையுடைய தீ, அழில்-தீயின் கொழுந்து; அதன் வெப்பம் என்றும் சொல்லலாம். அழலே வைத்தாயோ, கைக் கொண்டாயோ' என்று கூட்டி முடிக்க. நீ எழுவாய். நீ எரிப்ப எழுந்த அழலை வைத்தாயோ, கொண்டாயோ?” என்று கூட்டுக.1 இவ் இறைவன் அழலேந்தி ஆடும் கோலத்தை நினைந்து இவ்வாறு பாடினர். அற்புதத் திருவந்தாதியில் 91ஆவதாக உள்ளது. இந்தப் :பாட்டு,