பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/586: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கூகுளின் எழுத்துணரித் தரவு பதிவேறியது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:57, 4 மே 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101. இறைவன் ஊரும் ஏறு இறைவனுடைய வாகனமாகிய இடபத்தின் வலிமையை எண்ணிப் பார்க்கிருர் காரைக்கால் அம்மையார். அது தர்ம ரிஷபம் என்ருலும் அதற்குக் கோபம் வந்துவிட்டால் அது நடக்கும் முறையே வேறு. நமக்கு இன்பம் தருவதற்கும் துன்பம் தருவதற்கும் காரணமாக இருப்பது அறம். அதை அறக் கடவுள் என்றே சொல்வார்கள், பாவம் செய்பவர்களே அறம் புறக்கணிக்கும். நல்லவர்களுக்கு இனியதாக இருந்து நலம் செய்யும் அறக் கடவுள் தியவர்களுக்கு இன்னததாக நின்று ஒறுக்கும். “என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.” என்பது திருக்குறள். அறம் காய்வதும் உண்டு என்பது அதனுல் தெரியவரும். அறத்தையே இறைவன் இடபமாகக் கொண்டிருக்கிருன். ஆதலின் அது தீயவர்களே நடுங்கச் செய்யும் ஆற்றலும் கொண்டது. இறைவனே நோக்கி அந்த ஏற்றைப் பற்றிய விளுவை விடுக்கிருர் அம்மையார். 'பொன்னேயொத்த திருமேனியை உடையாய்! என்று விலாசம் இடுகிருர். பொன்ஒப்பாய்; எநின் வாகனமாகிய ஏறு எத்தகையது?’ என்று கேட்கிருர்,