திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/14.ஒழுக்கமுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
பக்க மேம்பாடு using AWB
சி (Balajijagadesh, திருக்குறள் அறத்துப்பால் 14.ஒழுக்கமுடைமை பக்கத்தை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்து...)
சி (பக்க மேம்பாடு using AWB)
:[[{{திருக்குறள் பரிமேலழகர் உரை]]}}
{{TOCright}}
 
==அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை==
 
 
;அதிகார முன்னுரை: அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை யுடையராதல். இது மெய்ம்முதலிய அடங்கினார்க்கல்லது முடியாதாகலின், '''அடக்கமுடைமை'''யின் பின் வைக்கப்பட்டது.
 
 
== திருக்குறள் 131 (ஒழுக்கம்) ==
 
::நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
::என்றும் இடும்பை தரும்
 
;பரிமேலழகர் உரை (இதன்பொருள்): நல்லொழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும்= ஒருவனுக்கு நல்லொழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்;
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: 'நன்றிக்கு வித்தாகும்' என்றதனால், தீயவொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும், 'இடும்பை தரும்' என்றதனால் நல்லொழுக்கம் இன்பந் தருதலும் பெற்றாம். ஒன்றுநின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின், இதனாற் பின்விளைவு கூறப்பட்டது.
 
 
==திருக்குறள் 139 (ஒழுக்கமுடையவர்க்)==
 
;பரிமேலழகர் உரைவிளக்கம்: தீயசொற்களாவன: பிறர்க்குத் தீங்குபயக்கும் பொய்ம் முதலியனவும், வருணத்திற்கு உரியஅல்லனவும் ஆம். அவற்றது பன்மையாற் சொல்லுதல் தொழில் பலவாயின. 'சொலல்' சாதியொருமை. சொல்லெனவே அமைந்திருக்க 'வாயால்' என வேண்டாது கூறினார். நல்லசொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு. இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.
 
 
==திருக்குறள் 140 (உலகத்தோடு)==
;பரிமேலழகர் உரைவிளக்கம்: 'உலகத்தோடு பொருந்த ஒழுகுத'லாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகியவாற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான், அவையும் அடங்க 'உலகத்தோ டொட்ட' வென்று்ம், கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல்.
:இவை இரண்டு பாட்டானும், '''சொல்லானும், செயலானும்''' வரும் ஒழுக்கங்கள் எல்லாம் ஒருவாற்றாற் றொகுத்துக் கூறப்பட்டன.
 
 
===பார்க்க:===
 
 
:[[திருக்குறள் அறத்துப்பால் 15.பிறனில்விழையாமை]]
:[[திருக்குறள் அறத்துப்பால் 13.அடக்கமுடைமை]]
 
:[[திருக்குறள் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை]]
:[[]]
"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/483484" இருந்து மீள்விக்கப்பட்டது