திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadesh, திருக்குறள் அறத்துப்பால் 4.அறன்வலியுறுத்தல் பக்கத்தை [[திருக்குறள் பரிமேலழகர் உரை/அற...
சி பக்க மேம்பாடு using AWB
வரிசை 1:
:[[{{திருக்குறள் பரிமேலழகர் உரை]]}}
{{TOCright}}
 
===திருக்குறள் பரிமேழகர் உரை===
 
வரி 8 ⟶ 11:
 
:அஃதாவது,அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள், ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும். "சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்/ அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல" ''(புறநானூறு- 31.)'' என்றார் பிறரும்.
 
 
===திருக்குறள்: 31 (சிறப்பீனுஞ்)===
 
 
:'''சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்''' // // சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு
:'''காக்க மெவனோ வுயிர்க்கு. (01)''' // // ஆக்கம் எவனோ உயிர்க்கு.
 
 
'''பரிமேலழகர் உரை:'''
வரிசை 22:
: '' செல்வமும் ஈனும்'' =துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்:
:''உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன்'' = ஆதலான் உயிர்கட்கு அறத்தின்மிக்க ஆக்கம் யாது?
 
 
'''பரிமேலழகர் உரை விளக்கம்:'''
 
 
:எல்லாப்பேற்றினும் சிறந்தமையின் வீடு 'சிறப்பு' எனப்பட்டது.
வரி 38 ⟶ 36:
 
===திருக்குறள்: 32 (அறத்தினூஉங்)===
 
 
:'''அறத்தினூஉங் காக்க முமில்லை யதனை''' // // அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
:'''மறத்திலி னூங்கில்லை கேடு. (02)''' // // மறத்தலின் ஊங்கு இல்லை கேடு
 
 
'''பரிமேலழகர் உரை:'''
வரி 48 ⟶ 44:
:(இதன்பொருள்) ''அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'' = ஒருவனுக்கு அறம் செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை;
:''அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு'' = அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை.
 
 
'''பரிமேலழகர் உரை விளக்கம்:'''
 
 
:"அறத்தினூஉங் காக்கமு மில்லை" என மேற்சொல்லியதனையே அனுவதித்தார், அதனாற் கேடுவருதல் கூறுதற் பயன் நோக்கி.
 
:இதனால் ''அது செய்யாவழிக் கேடுவருதல்'' கூறப்பட்டது.
 
 
 
===திருக்குறள்: 33 (ஒல்லும்)===
 
 
 
:ஒல்லும் வகையா னறவினை யோவாதே // ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
:செல்லும்வா யெல்லாஞ் செயல்" // செல்லும் வாய் எல்லாம் செயல்
 
 
:பரிமேலழகர் உரை:
 
 
:(இதன் பொருள்) ஒல்லும் வகையான் = தத்தமக்கியலுந்திறத்தான்;
:அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல் = அறமாகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான்எல்லாம் செய்க.
 
 
:பரிமேலழகர் உரைவிளக்கம்:
வரி 83 ⟶ 70:
 
===திருக்குறள்: 34 (மனத்துக்கண்)===
 
 
:மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
:னாகுல நீர பிற."
 
 
:பரிமேலழகர் உரை
 
 
:(இதன் பொருள்) மனத்துக்கண் மாசு இலன் ஆதல் = அவ்வாற்றான் அறஞ்செய்வான் தன் மனத்தின்கட் குற்றம் உடையனல்லனாக;
:அனைத்து அறன் = அவ்வளவே அறமாவது;
:பிற ஆகுல நீர = அஃதொழிந்த சொல்லும் வேடமும் அறமெனப்படா, ஆரவார நீர்மைய.
 
 
:பரிமேலழகர் உரை விளக்கம்:
வரி 102 ⟶ 85:
:பிறர் அறிதல்வேண்டிச் செய்கின்றன வாகலின், ஆகுல நீர என்றார்.
:மனத்து மாசுடையனாயவழி அதன்வழியவாகிய மொழி மெய்களாற் செய்வன பயனிலவென்பதூஉம் பெறப்பட்டது.
 
 
 
===திருக்குறள்: 35 (அழுக்காறவா)===
 
 
:'''"அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு'''
:'''மிழுக்கா வியன்ற தறம்.'''
 
 
:பரிமேலழகர் உரை:
 
 
:(இதன் பொருள்) அழுக்காறு = பிறர் ஆக்கம் பொறாமையும்;
வரி 120 ⟶ 98:
:இன்னாச்சொல் = அதுபற்றிவரும் கடுஞ்சொல்லும் ஆகிய;
:நான்கும் இழுக்கா இயன்றது அறம் = இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறமாவது.
 
 
:பரிமேலழகர் உரை விளக்கம்:
வரி 126 ⟶ 103:
:இதனான் இவற்றோடு விரவியியன்றது அறமெனப்படாது என்பதூஉங் கொள்க.
:இவை இரண்டுபாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.
 
 
 
===திருக்குறள்: 36 (அன்றறிவா)===
 
 
:'''அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது'''
:'''பொன்றுங்காற் பொன்றாத் துணை.'''
 
 
:பரிமேலழகர் உரை:
வரி 140 ⟶ 113:
:(இதன் பொருள்) அன்று அறிவாம் என்னாது அறம் செய்க = யாம் இதுபொழுது இளையம் ஆகலின் இறக்குஞான்று செய்தும்எனக் கருதாது அறத்தினை நாடோறுஞ் செய்க;
:அது பொன்றுங்கால் பொன்றாத் துணை = அவ்வாறு செய்த அறம் இவ்வுடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவில்லாத துணையாம்.
 
 
:பரிமேலழகர் உரைவிளக்கம்:
 
 
:மற்று என்பது அசைநிலை.
:பொன்றாத்துணை என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனையுடம்பினுஞ் சேறலின்.
:இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க என்பது கூறப்பட்டது.
 
 
 
===திருக்குறள்: 37 (அறத்தாறிது)===
 
 
:'''அறத்தா றிதுவென வேண்டா சிவிகை'''
:'''பொறுத்தானோ டூர்ந்தா னிடை.'''
 
 
பரிமேலழகர் உரை:
 
 
:(இதன் பொருள்) அறத்து ஆறு இது என வேண்டா = அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகமவளவையான் உணர்த்தல் வேண்டா;
:சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை = சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.
 
 
:பரிமேலழகர் உரைவிளக்கம்:
 
 
:பயனை ஆறு என்றார், பின்னதாகலின்.
வரி 172 ⟶ 136:
:உணரப்படு்ம் என்பது சொல்லெச்சம்.
:இதனாற் பொன்றாத்துணையாதல் தெளிவிக்கப்பட்டது.
 
 
 
===திருக்குறள்: 38 (வீழ்நாள்)===
 
 
:'''வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்'''
:'''வாழ்நாள் வழியடைக்குங் கல்.'''
 
 
:பரிமேலழகர் உரை:
வரி 186 ⟶ 146:
:(இதன் பொருள்) வீழ் நாள் படாமை நன்று ஆற்றின் = செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்;
:அஃது ஒருவன் வாழ் நாள் வழி அடைக்கும் கல் = அச்செயல் அவன் யாக்கையோடு கூடுநாள் வரும் வழியை வாராமலடைக்கும் கல்லாம்.
 
 
பரிமேலழகர் உரை விளக்கம்:
 
 
:ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ளதுணையும், உயிர் யாக்கையோடுங்கூடி நின்று அவ்வினைகளது இருவகைப்பயனையும் நுகருமாகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது.
வரி 196 ⟶ 154:
:பயன் இரண்டாவன, இன்பந் துன்பம் என்பன.
:இதனான் அறம் வீடுபயக்கும் என்பது கூறப்பட்டது.
 
 
===திருக்குறள்: 39 (அறத்தான்)===
 
 
:'''"அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்'''
:'''"புறத்த புகழு மில.'''
 
 
:பரிமேலழகர் உரை:
 
 
:(இதன் பொருள்) அறத்தான் வருவதே இன்பம் = இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது;
:மற்ற எல்லாம் புறத்த = அதனோடு பொருந்தாது வருவனவெல்லாம் இன்பமாயினுந் துன்பத்தினிடத்த;
:புகழும் இல = அதுவேயுமன்றிப் புகழும் உடையனவல்ல.
 
 
:பரிமேலழகர் உரை விளக்கம்:
வரி 221 ⟶ 174:
:அறத்தோடு வாராதன புகழுமில எனவே, வருவது புகழுடைத்தென்பது பெற்றாம்.
:இதனான் அறஞ்செய்வாரே இம்மையின்பமும், புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.
 
 
 
===திருக்குறள்: 40 (செயற்பால)===
 
 
:'''"செயற்பால தோரு மறனே யொருவற்
:'''குயற்பால தோரும் பழி.'''
 
 
:பரிமேலழகர் உரை:
 
 
:(இதன்பொருள்) ஒருவற்குச் செயற்பாலது அறனே = ஒருவனுக்குச் செய்தற் பான்மையது நல்வினையே;
:உயற்பாலது பழியே = ஒழிதற்பான்மையது தீவினையே.
 
 
:பரிமேலழகர் உரை விளக்கம்:
 
 
:ஒரும் என்பன இரண்டும் அசைநிலை.
:தேற்றேகாரம் பின்னுங் கூட்டப்பட்டது.
:பழிக்கப்படுவதனைப் பழி யென்றார். இதனாற் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.
 
 
:'''தெய்வப்புலமைத் திருவள்ளுவர் செய்த அறன்வலியுறுத்தல் அதிகாரமும் அதற்குப்பரிமேலழகர் செய்த உரையும் முற்றும்.'''
 
==திருக்குறள் பாயிரவியல் முற்றும்==
 
 
 
:[[திருக்குறள் அறத்துப்பால் 3.நீத்தார்பெருமை]]
:[[திருக்குறள் அறத்துப்பால் 5.இல்வாழ்க்கை]]
 
:[[திருக்குறள் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை]]
:[[திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை]]
:[[]] :[[]]
:[[]] :[[]]
 
==திருக்குறள் பாயிரவியல் முற்றும்==