திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/116.பிரிவாற்றாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு using AWB
சி பக்க மேம்பாடு
வரிசை 12:
; அதிகார முன்னுரை: அஃதாவது, வரைந்து எய்தியபின் தலைமகன் அறம் பொருள் இன்பங்களின் பொருட்டுச் சேயிடையினும், ஆயிடையினும் தலைமகளைப் பிரிந்து செல்லும். செல்லுஞான்று, அப்பிரிவினை அவள் ஆற்றாந்தன்மை. அஃது ஈண்டுப் பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி கூறலும், அவள்தனக்குத் தலைமகள் தானே அவன் குறிப்பான் உணர்ந்து கூறலும், பிரிவு உணர்த்தியவழிக் கூறலும், தலைமகன் பிரிந்துழி ஆற்றுவிக்குந் தோழிக்குத் தலைமகள் மறுத்துக்கூறலும் என நால்வகையாற் கூறப்படும்.
 
===குறள் 1151 (செல்லாமை ) ===
 
:<small>'''<font color="#F87217"> (பிரிந்து கடிதின்வருவல் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.) </font>'''</small>
வரிசை 29:
:இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.
 
===குறள் 1152 (இன்கணுடைத் ) ===
 
:<small>'''<font color="#F87217"> (பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) </font>'''</small>
வரிசை 44:
; உரை விளக்கம்: 'பார்வல்' என்றதனாற் புணர்ச்சிபெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. 'புன்கண்' என்னும் காரணப்பெயர் காரியத்தின் மேலதாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, "முள்ளுறழ் முளையெயிற் றமிழ்தூறும் தீநீரைக்/ கள்ளினும் மகிழ்செய்யும் எனவுரைத்தும் அமையார்என்/ ஒள்ளிழை திருத்தும்" (கலி. பாலைக்கலி,3) பண்டையிற் சிறப்பால் அவன் பிரிதற்குறிப்புக் காட்டி அச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்- பயன்.
 
===குறள் 1153 (அரிதரோ ) ===
 
:<small>'''<font color="#F87217"> (இதுவுமது)</font>'''</small>
வரிசை 60:
; உரை விளக்கம்: அரோ அசைநிலை. உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது.
 
===குறள் 1154 (அளித்தஞ்ச ) ===
 
:<small>'''<font color="#F87217">(இதுவுமது) </font>'''</small>
வரிசை 75:
; உரை விளக்கம்: 'தேறியார்' என்பது, தன்னைப் பிறர்போற் கூறல். சொல்லும் செயலும் ஒவ்வாமைக்குற்றம் அவர்க்கு எய்தும், அஃது எய்தாவகை அழுங்குவி என்பது கருத்து.
 
===குறள் 1155 (ஓம்பின ) ===
 
:<small>'''<font color="#F87217"> (இதுவுமது) </font>'''</small>
வரிசை 90:
; உரை விளக்கம்: ஆளுதற்கு அமைதல்- இறைவர் ஆதற்குத் தெய்வத்தால் ஏற்புடையர் ஆதல். மற்று- வினைமாற்றின்கண் வந்தது.
 
===குறள் 1156 (பிரிவுரைக்கும் ) ===
 
:<small>'''<font color="#F87217">(தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) </font>'''</small>
வரிசை 105:
; உரை விளக்கம்: அருமை- பயன்படுதல் இல்லாமை. கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எ்ணணுதலும் உணர்த்தலும் வல்லர் ஆயினார் பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்துவந்து நல்குதல் யாண்டையது என்பதாம். அழுங்குவித்தல் பயன்.
 
===குறள் 1157 (துறைவன் ) ===
 
:<small>'''<font color="#F87217">(இதுவுமது) </font>'''</small>
வரிசை 120:
; உரை விளக்கம்: முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்டதுணையான் மெலிந்து ஆ்றறாமையின் 'இறவாநின்ற' என்றும் கூறினாள். அழுங்குவித்து வந்து கூறற்பாலை அல்லையாய் நீயும் இவ்வளைகள் செய்தனவே செய்தாய் எனப் புலந்து கூறியவாறு.
 
===குறள் 1158 (இன்னாதின ) ===
 
:<small>'''<font color="#F87217">(இதுவுமது) </font>'''</small>
வரிசை 134:
; உரை விளக்கம்: தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது, உடன்பட்டு வந்தமைபற்றிப் புலக்கின்றாள்ஆகலின், 'இனன்இல்லூர்' என்றாள். உலகியல் கூறுவாள்போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.
 
===குறள் 1159 (தொடிற்சுடி ) ===
 
:<small>'''<font color="#F87217">(காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடும், ஆகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) </font>'''</small>
வரிசை 149:
; உரை விளக்கம்: சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தம்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள் வாளா 'சுடல்' என்றாள். அகறல்- நுகராமை. சுடல் என்பது முன்னும் கூட்டப்பட்டது. தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை என்பதாம்.
 
===குறள் 1160 (அரிதாற்றி ) ===
 
:<small>'''<font color="#F87217">(தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர், அது நீ செய்கின்றிலை என்ற தோழிக்குச் சொல்லியது.) </font>'''</small>