பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,884:
முப்பாழும் கற்றுணர்ந்தோர் முன்னோர் பொறுதருள் வாரீ (117)
 
=இறந்த காலத்து இரங்கல் =
==அ==
===1===
வார்த்தைத் திறமில்லா மனிதருக்குப் புன் சொல்லாம்
சாத்திரங்கள் சொல்லாச் சதுர் இழந்து கேட்டேனே (1)
 
மெத்த மெத்தச் செல்வாக்கில் வேறு மருள் எடுத்துத்
தத்தித் தலைகீழாய்த் தான் நடந்து கெட்டேனே (2)
 
வழக்குத் தலங்களினும் மண் பெண் பொன் ஆசையினும்
பழக்கம் தவிராமல் பதி இழந்து கெட்டேனே (3)
 
ஆணி பொருந்தும் அரும்பூமி அத்தனையும்
காணில் நமது என்று கனம் பேசிக் கெட்டேனே (4)
 
ஆசாரம் இல்லாத அசடருடன் கூடிக்
பாசாங்குபேசிப் பதி இழந்து கெட்டேனே (5)
===6===
குருமார்க்கம் இல்லாக் குருடருடன் கூடிக்
கருமார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே (6)
 
ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல்
பாலர் பெண்டீர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே (7)
 
பிணவாசம் உற்ற பெரும்காயம் மெய்யென்று
பண ஆசையாலே பதி இழந்து கெட்டேனே (8)
 
கண்ட புலவர் கனக்கவே தான் புகழ
உண்ட உடம்பெல்லாம் உப்பரித்து கெட்டேனே (9)
 
எண்ணிறந்த சென்மம் எடுத்துச் சிவபூசை
பண்ணிப் பிழையாமல் பதி இழந்து கெட்டேனே (10)
===11===
சிற்றெறும்பு சற்றும் தீண்டப் பொறாஉடம்பை
உற்றுருக்கவும் சுடவும் ஒப்பித்து மாண்டேனே (11)
 
தன் உடம்பு தானே தனக்கும் பகையாம் என்று
எண்ணும் உணர்வுஇல்லாமல் இன்பம் என்று மாண்டேனே (12)
 
தோல் எலும்பு மாங்கிஷமும் தொல் அன்னத்தால் வளரும்
மேல் எலும்பும் சுத்தமென்று வீறாப்பாய் மாண்டேனே (13)
 
போக்கு வரத்தும் பொருள் வரத்தும் காணாமல்
வாக்கழிவு சொல்லி மனம்மறுகிக் கெட்டேனே (14)
 
==அ==
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது