"பட்டினப்பாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,289 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
 
:வசையில்புகழ் வயங்குவெண்மீன் // 01 // வசை இல் புகழ் வயங்கு வெள் மீன்
:றிசைதிரிந்து தெற்கேகினுந் // 02 // திசை திரிந்து தெற்கு ஏகினும்
:தற்பாடிய தளியுணவிற் // 03 // தன் பாடிய தளி உணவின்
:புட்டேம்பப் புயன்மாறி // 04 // புள் தேம்ப புயல் மாறி
:வான்பொய்ப்பினுந் தான்பொய்யா // 05 // வான் பொய்ப்பினும் தான் பொய்யா
 
:மலைத்தலைய கடற்காவிரி // 06 // மலை தலைய கடல் காவிரி
:புனல்பரந்து பொன்கொழிக்கும் // 07 // புனல் பரந்து பொன் கொழிக்கும்
:விளைவறா வியன்கழனிக் // 08 // விளைவு அறா வியல் கழனி
:கார்க்கரும்பின் கமழாலைத் // 09 // கார் கரும்பின் கமழ் ஆலை
:தீத்தெறுவிற் கவின்வாடி // 10 // தீ தெறுவின் கவின் வாடி
 
:நீர்ச்செறுவி னீணெய்தற் // 11 // நீர் செறுவின் நீள் நெய்தல்
:பூச்சாம்பும் புலத்தாங்கட் // 12 // பூ சாம்பும் புலத்து ஆங்கண்
:காய்ச்செந்நெற் கதிரருந்து // 13 // காய் செ நெல் கதிர் அருந்தும்
:மோட்டெருமை முழுக்குழவி // 14 // மோட்டு எருமை முழு குழவி
:கூட்டுநிழற் றுயில்வதியுங் // 15 // கூட்டு நிழல் துயில் வதியும்
 
:கோட்டெங்கிற் குலைவாழைக் // 16 // கோள் தெங்கின் குலை வாழை
:காய்க்கமுகிற் கமழ்மஞ்ச // 17 // காய் கமுகின் கமழ் மஞ்சள்
:ளினமாவி னிணர்ப்பெண்ணை // 18 // இன மாவின் இணர் பெண்ணை
:முதற்சேம்பின் முளையிஞ்சி // 19 // முதல் சேம்பின் முளை இஞ்சி
:யகனகர் வியன்முற்றத்துச் // 20 // அகல்? நகர் வியன் முற்றத்து
 
:சுடர்நுதன் மடநோக்கி // 21 // சுடர் நுதல் மட நோக்கின்
:னேரிழை மகளி ருணங்குணாக் கவருங் // 22 // நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்
:கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை // 23 // கோழி எறிந்த கொடு கால் கனம் குழை
:பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு // 24 // பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
:முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் // 25 // முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும்
 
:விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக் // 26 // விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா
:கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக் // 27 // கொழும்? பல் குடி செழும் பாக்கத்து
:குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு // 28 // குறு பல் ஊர் நெடு சோணாட்டு
 
== ==
16,349

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/5331" இருந்து மீள்விக்கப்பட்டது