பட்டினப்பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 67:
== ==
 
:வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி // 29 // வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
:நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி // 30 // நெல்லொடு வந்த வல் வாய் பஃறி
 
:பணைநிலைப் புரவியி னணைமுதற் பிணிக்குங் /31/ பணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும்
:கழிசூழ்படப்பைக் கலியாணர்ப் // 32 // கழி சூழ் படப்பை கலி யாணர்
:பொழிற்புறவிற் பூந்தண்டலை // 33 // பொழில் புறவின் பூ தண்டலை
:மழைநீங்கிய மாவிசும்பின் // 34 // மழை நீங்கிய மாக விசும்பின்
:மதிசேர்ந்த மகவெண்மீ // 35 // மதி சேர்ந்த மக வெள் மீன்
 
:னுருகெழுதிற லுயர்கோட்டத்து // 36 // உரு கெழு திறல் உயர் கோட்டத்து
:முருகமர்பூ முரண்கிடக்கை // 37 // முருகு அமர் பூ முரண் கிடக்கை
:வரியணிசுடர் வான்பொய்கை // 38 // வரி அணி சுடர் வான் பொய்கை
:யிருகாமத் திணையேரிப் // 39 // இரு காமத்து இணை ஏரி
:புலிப்பொறிப் போர்க்கதவிற் // 40 // புலி பொறி போர் கதவின்
 
:றிருத்துஞ்சுந் திண்காப்பிற் // 41 // திரு துஞ்சும் திண் காப்பின்
:புகழ்நிலைஇய மொழிவளர // 42 // புகழ் நிலைஇய மொழி வளர
:வறநிலைஇய வகனட்டிற் // 43 // அறம்? நிலைஇய அகன் அட்டில்
:சோறுவாக்கிய கொழுங்கஞ்சி // 44 // சோறு ஆக்கிய கொழும் கஞ்சி
:யாறுபோலப் பரந்தொழுகி // 45 //ஆறு போல பரந்து ஒழுகி
 
:யேறுபொரச் சேறாகித் // 46 // ஏறு பொர சேறு ஆகி
:தேரோடத் துகள்கெழுமி // 47 // தேர் ஓட துகள் கெழுமி
:நீறாடிய களிறுபோல // 48 // நீறு ஆடிய களிறு போல
:வேறுபட்ட வினையோவத்து // 49 // வேறு பட்ட வினை ஓவத்து
:வெண்கோயின் மாசூட்டுந் // 50 // வெள் கோயின் மாசு ஊட்டும்
 
:தண்கேணித் தகைமுற்றத்துப் // 51 // தண் கேணி தகை முற்றத்து
:பகட்டெருத்தின் பலசாலைத் // 52 // பகட்டு எருத்தின் பல சாலை
:தவப்பள்ளித் தாழ்காவி // 53 // தவ பள்ளி தாழ் காவின்
:னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு // 54 // அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
:மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம் // 55 // ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
 
:மாயிரும் பெடையோ டிரியல் போகிப் // 56 // மா இரும் பெடையோடு இரியல் போகி
:பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த் // 57 // பூதம் காக்கும் புகல் அரு கடி நகர்
:தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு // 58 // தூது உணம்? புறவொடு துச்சில் சேக்கும்
:முதுமரத்த முரண்களரி // 59 // முது மரத்த முரண் களரி
:வரிமண லகன்றிட்டை // 60 // வரி மணல் அகன் திட்டை
 
:யிருங்கிளை யினனொக்கற் // 61 // இரும் கிளை இனன் ஒக்கல்
:கருந்தொழிற் கலிமாக்கள் // 62 // கரு தொழில் கலி மாக்கள்
:கடலிறவின் சூடுதின்றும் // 63 // கடல் இறவின் சூடு தின்றும்
:வயலாமைப் புழுக்குண்டும் // 64 // வயல் ஆமை புழுக்கு உண்டும்
:வறளடும்பின் மலர்மலைந்தும் // 65 // வறள் அடும்பின் மலர் மலைந்தும்
 
:புனலாம்பற் பூச்சூடியு // 66 // புனல் ஆம்பல் பூ சூடியும்
:நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு // 67 // நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரு
:நாண்மீன் விராய கோண்மீன் போல // 68 // நாள் மீன் விராய கோள்மீன் போல
:மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக் // 69 // மலர் தலை மன்றத்து பலருடன் குழீஇ
:கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப் // 70 // கையினும் கலத்தினும் மெய் உற தீண்டி
 
:பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ // 71 // பெரு சினத்தால் புறம்? கொடாஅது
:திருஞ்செருவி னிகன்மொய்ம்பினோர் // 72 // இரு? செருவின் இகல் மொய்ம்பினோர்
 
== ==
"https://ta.wikisource.org/wiki/பட்டினப்பாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது