"பட்டினப்பாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,640 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
()
()
 
== ==
:மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே // 271 // மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே
:வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத் // 272 // வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் என
:தான்முன்னிய துறைபோகலிற் // 273 // தான் முன்னிய துறை போகலின்
:பல்லொளியர் பணிபொடுங்கத் // 274 // பல் ஒளியர் பணிபு ஒடுங்க
:தொல்லருவாளர் தொழில்கேட்ப // 275 // தொல் அருவாளர் தொழில் கேட்ப
 
:வடவர் வாடக் குடவர் கூம்பத் // 276 // வடவர் வாட குடவர் கூம்ப
:தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர் // 277 // தென்னவன் திறல் கெட சீறி மன்னர்
:மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண் // 278 // மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள்
:மாத்தானை மறமொய்ம்பிற் // 279 // மா தானை மற மொய்ம்பின்
:செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப் // 280 // செ கண்ணால் செயிர்த்து நோக்கி
 
:புன்பொதுவர் வழிபொன்ற // 281 // புன் பொதுவர் வழி பொன்ற
:விருங்கோவேண் மருங்குசாயக் // 282 // இருங்கோவேள் மருங்கு சாய
:காடுகொன்று நாடாக்கிக் // 283 // காடு கொன்று நாடு ஆக்கி
:குளந்தொட்டு வளம்பெருக்கிப் // 284 // குளம் தொட்டு வளம் பெருக்கி
:பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் // 285 // பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி
:கோயிலொடு குடிநிறீஇ // 286 // கோயிலொடு குடி நிறீஇ
:வாயிலொடு புழையமைத்து // 287 // வாயிலொடு புழை அமைத்து
:ஞாயிறொறும் புதைநிறீஇப் // 288 // ஞாயில் தொறும் புதை நிறீஇ
:பொருவேமெனப் பெயர்கொடுத் // 289 // பொருவேம் என பெயர் கொடுத்து
:தொருவேமெனப் புறக்கொடாது // 290 // ஒருவேம் என புறம் கொடாது
 
:திருநிலைஇய பெருமன்னெயின் // 291 // திரு நிலைஇய பெரு மன் எயில்
:மின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி // 292 // மின் ஒளி எறிப்ப தம் ஒளி மழுங்கி
:விசிபிணி முழவின் வேந்தர் சூடிய // 293 // விசி பிணி முழவின் வேந்தர் சூடிய
:பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற் // 294 // பசு மணி பொருத பரு ஏர் எறுழ் கழல் கால்
:பொற்றொடிப் புதல்வ ரோடி யாடவு // 295 // பொன் தொடி புதல்வர் ஓடி ஆடவும்
 
:முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவுஞ் / 296 / முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும்
:செஞ்சாந்து சிதைந்த மாப்பி னொண்பூ // 297 // செ சாந்து சிதைந்த மாப்?பின் ஒள் பூண்
:ணரிமா வன்ன வணங்குடைத் துப்பிற் // 298 // அரிமா அன்ன அணங்கு உடை துப்பின்
:றிருமா வளவன் றெவ்வர்க் கோக்கிய // 299 // திரு மா வளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
:வேலினும் வெய்ய கானமவன் // 300 // வேலினும் வெய்ய கானம் அவன்
 
:கோலினுந் தண்ணிய தடமென் றோளே. // 301 // கோலினும் தண்ணிய தட மென் தோளே.
 
==சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலை முற்றும்==
16,349

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/5392" இருந்து மீள்விக்கப்பட்டது