பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/43: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி format
 
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
'''{{rh| 42||என் பார்வையில் கலைஞர்}} {{rule}}'''
'''{{rh|42||என் பார்வையில் கலைஞர்}} {{rule}}'''
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
தேங்காய் பறித்தேன். வயல்களுக்கு நீர் பாய்ச்சினேன். கூலியாள் மிச்சம் என்பதை புரிந்து கொண்ட என் தாத்தா இனிமேல் நான் பள்ளிக் கூடத்திற்கு பகல் பாதியிலும் போகக் கூடாது என்று தடுக்கப் போனார்.
தேங்காய் பறித்தேன். வயல்களுக்கு நீர் பாய்ச்சினேன். கூலியாள் மிச்சம் என்பதை புரிந்து கொண்ட என் தாத்தா இனிமேல் நான் பள்ளிக் கூடத்திற்கு பகல் பாதியிலும் போகக் கூடாது என்று தடுக்கப் போனார்.

எனக்கு அழுகை அழுகையாக வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காலமான திருமலை ஆச்சி என்றும் சின்னத்தாயி என்றும் அழைக்கப்பட்ட எனது விதவைத் தாய் வாய்க்கால் மண்ணில் எனக்கு பல்தேய்த்தபடியே ‘என் மவனே... உனக்கு சொத்து இல்ல... சுகம் இல்லடா.. நீ படிச்சி சர்க்கார் வேலைக்கு போனாத்தான் நீயும் தேறமுடியும். இந்த அம்மாவும் தேற முடியும்’ என்று அறிவுறுத்தியது, தாத்தா பார்த்த தடியடி பார்வையில் அழுகையானது. இந்தச் சமயத்தில்தான் ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டம் நீக்கப்பட்டு, சிறுவர்களான நாங்கள் எல்லாம் மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு முழுநேரமும் சென்றோம். இதில் ஒன்று குறிப்பிட வேண்டியது முக்கியம். ராஜாஜி கொண்டுவந்த திட்டத்திற்கு பெயர் புதிய கல்வித் திட்டம். இதற்கு திராவிட இயக்கம் வைத்த பெயர் குலக்கல்வித் திட்டம். முதலமைச்சரின் பெயர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி. திராவிட இயக்கத்தினர் அவருக்கு வைத்த பெயர் குல்லுகப்பட்டர்.
எனக்கு அழுகை அழுகையாக வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காலமான திருமலை ஆச்சி என்றும் சின்னத்தாயி என்றும் அழைக்கப்பட்ட எனது விதவைத் தாய் வாய்க்கால் மண்ணில் எனக்கு பல்தேய்த்தபடியே ‘என் மவனே... உனக்கு சொத்து இல்ல... சுகம் இல்லடா... நீ படிச்சி சர்க்கார் வேலைக்கு போனாத்தான் நீயும் தேறமுடியும்... இந்த அம்மாவும் தேற முடியும்’ என்று அறிவுறுத்தியது, தாத்தா பார்த்த தடியடி பார்வையில் அழுகையானது. இந்தச் சமயத்தில்தான் ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டம் நீக்கப்பட்டு, சிறுவர்களான நாங்கள் எல்லாம் மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு முழுநேரமும் சென்றோம். இதில் ஒன்று குறிப்பிட வேண்டியது முக்கியம். ராஜாஜி கொண்டுவந்த திட்டத்திற்கு பெயர் புதிய கல்வித் திட்டம். இதற்கு திராவிட இயக்கம் வைத்த பெயர் குலக்கல்வித் திட்டம். முதலமைச்சரின் பெயர் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி. திராவிட இயக்கத்தினர் அவருக்கு வைத்த பெயர் குல்லுகப்பட்டர்.

இத்தகைய வார்த்தைகளின் அருமை பெருமைகளோ அல்லது சிறுமைகளோ எனக்கு புரியாது. ஆனாலும், காமராசர் முதலமைச்சராகி எளிய பிள்ளைகள் முழு நேரம் படிக்க வகை செய்திருக்கிறார் என்பது மட்டும் தெரியும். இதற்கு தந்தை பெரியாரும் காரணமாக இருந்தார் என்பது எனக்கு அப்போது தெரியாது. உயர்நிலைப் பள்ளியில் உபகாரச் சம்பளமும் எனக்குக் கொடுக்கப்பட்டது. கல்லூரி வரைக்கும் இந்தத் தொகை நீடித்தது. ஆகையால், அந்தக் காலக்கட்டத்தில் காமராசரை கடுமையாக விமர்சித்த திராவிட முன்னேற்ற கழகத்தினர் குறிப்பாக கலைஞர் எனக்கு அறவே பிடிக்காமல் போயிற்று. அந்த இளம் வயதில் அவரை நான் எனது சொந்த எதிரியாகவே நினைத்தேன். எனக்கு கிடைத்த முழுக் கல்வியை இவரும், அண்ணாவும் எங்கே பறித்து விடுவார்களோ என்று அநியாயமாகப் பயந்தேன்.

"https://ta.wikisource.org/wiki/பக்கம்:என்_பார்வையில்_கலைஞர்.pdf/43" இலிருந்து மீள்விக்கப்பட்டது