திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 147:
 
 
:மற்று என்பது அசைநிலை.
:பொன்றாத்துணை என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனையுடம்பினுஞ் சேறலின்.
:இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க என்பது கூறப்பட்டது.
 
 
 
===திருக்குறள்: 37 (அறத்தாறிது)===
 
 
:'''அறத்தா றிதுவென வேண்டா சிவிகை'''
:'''பொறுத்தானோ டூர்ந்தா னிடை.'''
 
 
பரிமேலழகர் உரை:
 
 
:(இதன் பொருள்) அறத்து ஆறு இது என வேண்டா = அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகமவளவையான் உணர்த்தல் வேண்டா;
:சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை = சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.
 
 
:பரிமேலழகர் உரைவிளக்கம்:
 
 
:பயனை ஆறு என்றார், பின்னதாகலின்.
:என என்னும் எச்சத்தாற் சொல்லாகிய ஆகமவளவையும், பொறுத்தானோடு ஊர்ந்தானிடை என்றதனாற் காட்சியளவையும் பெற்றாம்.
:உணரப்படு்ம் என்பது சொல்லெச்சம்.
:இதனாற் பொன்றாத்துணையாதல் தெளிவிக்கப்பட்டது.
 
 
 
===திருக்குறள்: 38 (வீழ்நாள்)===
 
 
:'''வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்'''
:'''வாழ்நாள் வழியடைக்குங் கல்.'''
 
 
:பரிமேலழகர் உரை:
 
:(இதன் பொருள்) வீழ் நாள் படாமை நன்று ஆற்றின் = செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்;
:அஃது ஒருவன் வாழ் நாள் வழி அடைக்கும் கல் = அச்செயல் அவன் யாக்கையோடு கூடுநாள் வரும் வழியை வாராமலடைக்கும் கல்லாம்.
 
 
பரிமேலழகர் உரை விளக்கம்:
 
 
:ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ளதுணையும், உயிர் யாக்கையோடுங்கூடி நின்று அவ்வினைகளது இருவகைப்பயனையும் நுகருமாகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது.
:குற்றங்கள் ஐந்தாவன: அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன; இவற்றை வடநூ்லார் பஞ்சக்கிலேசம் என்பர்.
:வினை இரணடாவன, நல்வினை தீவினை என்பன.
:பயன் இரண்டாவன, இன்பந் துன்பம் என்பன.
:இதனான் அறம் வீடுபயக்கும் என்பது கூறப்பட்டது.