திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

==திருக்குறள்: 10 (பிறவிப்)==
 
:'''பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா:'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="BLUE">பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார்</FONT>
:'''ரிறைவ னடிசேரா தார்:'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;<FONT COLOR="BLUE">இறைவன் அடி சேராதார்.</FONT>
 
:'''பரிமேலழகர் உரை:'''
 
:(இதன்பொருள்) ''இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர்'' = இறைவன் அடி என்னும் புணையைச்சேர்ந்தார்புணையைச் (சேர்ந்தார்), பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்;
:''சேராதார் நீந்தார்'' = (அதனைச்) சேராதார், நீந்தமாட்டாராய் (அதனுள்) அழுந்துவர்.
 
<FONT COLOR=" green "><big>'''தொடரமைப்பு:'''இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவி பெரு கடல் நீந்துவர், சேராதார் நீந்தார். </big> </FONT>
 
:'''பரிமேலழகர் உரைவிளக்கம்:'''
 
:காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின், 'பிறவிப்பெருங்கடல்' என்றார். 'சேர்ந்தார்' என்பது சொல்லெச்சம்{{sup|{{smaller|¶}}}}.
 
:உலகியல்பை நினையாது, இறைவன் அடியையே நினைப்பார்க்குப் '''பிறவியறுதலும்''', அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு அஃது '''அறாமையும்''' ஆகிய இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன.
 
{{sup|{{smaller|¶ பாட்டில் சொல் குறைந்து நிற்பது சொல்லெச்சம்}}}}.
 
:''''தெய்வப்புலமைத் திருவள்ளுவர்' இயற்றிய திருக்குறள் அறத்துப்பால்'''
17,107

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/957261" இருந்து மீள்விக்கப்பட்டது