விக்கிமூலம்:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 84:
::://விக்கிமூலம் தொடர்பான பயண உதவித் தொகை வாய்ப்புகள்// இந்தப் புரிதல் தற்போது நடைபெற்ற [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை, சேலம்|பயிற்சிப் பட்டறையில்]] கடைபிடிக்கப்படவில்லை என அறிகிறேன். தொலைநோக்கில் தன்னார்வமான தலைமைத்துவத்தை உருவாக்க இதனை எதிர்காலத்தில் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். -[[பயனர்:Neechalkaran|Neechalkaran]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 12:49, 19 சூன் 2019 (UTC)
::::{{Ping|Neechalkaran}} //விக்கிமூலம் தொடர்பான பயண உதவித் தொகை வாய்ப்புகள்// என்று குறிப்பிட்டது விக்கிமூலம் சார்பாக விக்கிமீடியா அறக்கட்டளையினால் நடத்தப்படும் கருத்து நிகழ்ச்சிகளில் விக்கிமூல பிரதிநிதியாக பங்கேற்பதை தவிர்ப்பதற்காக. [[விக்கிமூலம்:பயிற்சிப் பட்டறை, சேலம்|இப்பயிற்சிப் பட்டறை]] விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்வதற்காக என்பதற்காக அவர்கள் அழைக்கப்பட்டார்கள். இதனால் அவர்களில் பங்களிப்பு மேலும் நன்றாக உயரும். நன்றி. {{Ping|Ravidreams}} கவனத்திற்கு -- [[பயனர்:Balajijagadesh|ஜெ. பாலாஜி (Balajijagadesh)]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 13:37, 19 சூன் 2019 (UTC)
:::::நடைபெற்ற பயிற்சிப் பட்டறைக்கு பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்யும் முன் {{Ping|Balajijagadesh}} என்னிடம் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்டிருந்தார். அதையே இங்கும் பகிர்கிறேன். தமிழ் விக்கிமூலத்தின் பிரதிநிதியாக விக்கிமேனியா, Wikimedia Conference போன்று உலகளாவிய அல்லது தேசிய அளவிலான கருத்தரங்குகளுக்கு ஓரிருவர் மட்டுமே செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கும் போது, ஒருவர் தன்னார்வமாக எவ்வளவு பங்களித்திருக்கிறார் என்பது மட்டுமே கணக்கில் கொள்ளப்பட வேண்டும். கணியம் திட்டத்தில் பங்கேற்று உதவித் தொகை பெற்றுக் கொண்டு பங்களிக்கும் பயனர் கணக்குகளின் பங்களிப்புகள் அதற்குக் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது. அதே போலவே, நிருவாகியாக விண்ணப்பிக்கும் போதும் தன்னார்வப் பங்களிப்புகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். இதன் மூலம், விக்கிமூலம் திட்டத்தின் தலைமையும் ஒருங்கிணைப்பும் என்றுமே தன்னார்வலர்களிடமே தங்கி இருப்பதை உறுதி செய்யலாம். இதில் புரிந்து கொள்ள வேண்டியது எதிர்பார்ப்பு பயனர் கணக்குக்குத் தானே தவிர பயனருக்கு அல்ல. அதாவது, திவ்யா கணியம் என்ற பயனர் கணக்கு திவ்யா என்ற பெயரில் தனிப்பட்ட ஒரு கணக்கில் தன்னார்வமாகப் பங்களித்திருந்தால் அவருடைய தன்னார்வப் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்பட வேண்டும். அவர் கணியம் திட்டத்தில் ஈடுபட்டு விட்டார் என்பதற்காக புறக்கணிக்கக் கூடாது.
:::::நடைபெற்ற சேலம் நிகழ்ச்சி ஒரு திறன் மேம்பாட்டுப் பயிற்சி. இதில் கணியம் திட்டப் பயனர்கள் பங்கேற்றால் மேம்பட்ட புரிதலுடன் பங்களிப்பார்கள். இதனால் தமிழ் விக்கிமூலத்துக்கு நன்மையே. நம்மிடம் 25+ பேருக்குப் பயிற்சி கொடுக்க நிதி இருக்கிறது ஆனால் பங்கேற்க ஆள் இல்லை என்பது விரும்பத்தக்க நிலையா? ஒருவேளை நூற்றுக்கணக்கில் தன்னார்வலர்கள் விண்ணப்பித்திருக்கும் நிலையில், தன்னார்வலர்களுக்கு முதல் முன்னுரிமை கொடுத்துத் தேர்ந்தெடுத்திருக்கலாம். இது போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைப் பொருத்தவரை, தனிப்பட்ட சிலர் பயன் பெற்றுவிட்டார்களா என்பதைக் காட்டிலும் திட்டம் மேம்பட வாய்ப்பு இருக்கிறதா என்பதையே கவனத்தில் கொள்ள வேண்டும். 100 பங்களிப்புகள் செய்த தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என்றால் கணியம் திட்ட பங்களிப்பாளர்களுக்கும் அதே வரையறை பொருந்தும். புதிதாக வரும் கணியம் திட்ட பங்களிப்பாளர்கள் அனவைரும் தொடர்ந்து பங்களிப்பாளர்களா என்று தயங்கினால், இதே தயக்கம் வழக்கமான தன்னார்வர்களுக்கும் பொருந்தும் அல்லவா? எத்தனையோ பேரைச் செலவு செய்து விக்கிமேனியாவுக்கு அனுப்புகிறோம், அவர்கள் திரும்ப வந்து சமூகத்துக்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி எழும் அல்லவா? எனவே, இது போன்ற திட்டங்களில் நாம் தொழிலில் செய்வது போல, இவ்வளவு செலவு செய்தோம் இவ்வளவு பயன் என்று அளவிடவோ அல்லது கல்லூரி நுழைவுத் தேர்வு போல மிக இறுக்கமான வரையைறகளையோ வைக்க முடியாது. ஒரு குறைந்தபட்ச தகுதியுடன் 10 பேருக்குப் பயிற்சி அளித்து யாராவது ஒருவர் தொடர்ந்தால் கூட வெற்றி தான். ஆனால், யார் அந்த ஒருவர் நமக்கு முதலிலேயே தெரியாது. எனவே, விருப்பமும் குறைந்தபட்ச தகுதியும் உள்ள அனைவருக்கும் நம் நிதி நிலைக்கு உட்பட்டு பயிற்சி அளிக்க வேண்டும்.
:::::உலகளாவிய கல்வியில் விக்கிமீடியா திட்டங்களில் 3-4% பேர் தொடர்ந்து பங்களித்தாலே மாபெரும் வெற்றி என்கிறார்கள். நம் இயக்கத்தில் எவ்வளவோ செலவு செய்கிறார்கள். அதன் பயன் என்பது கேள்விக்குறியே. ஆனால், தமிழ் விக்கிப்பீடியா தொடர்ந்து குறைந்த செலவில் நிறைந்த பயன் தரும் திட்டங்களைச் செயற்படுத்துகிறது. தமிழ் விக்கிக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தயங்காமல் பயன்படுத்திக் கொண்டு இன்னும் நிறைய பேரைத் தக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நன்றி --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:53, 28 சூன் 2019 (UTC)
 
==பங்களித்தோர் எண்ணிக்கை==
"https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது