குர்ஆன்/விடிவெள்ளி

இல அரபு தமிழாக்கம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
86.1 وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
86.2 مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
86.3 ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
86.4 إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
86.5 فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
86.6 خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
86.7 يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
86.8 إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
86.9 يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
86.10 فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
86.11 وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
86.12 وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
86.13 إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
86.14 وَمَا هُوَ بِٱلْهَزْلِ அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
86.15 إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
86.17 فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=குர்ஆன்/விடிவெள்ளி&oldid=1486571" இலிருந்து மீள்விக்கப்பட்டது