தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15/001

காஞ்சிக் கடிதம் : 11

ஏழ்மையால் எழில் கெட்டு...!



விஞ்ஞானத்துறைக் கற்றறிவாளர்களின்
         வேண்டுகோள்

‘இட்டுக் கட்டிக்’ கூறுவதே
        எனக்குச் சாதகமாக அமைந்தது

சிறுபான்மையினரின் கருத்தே
        ஒருநாள் நாட்டு மக்களின் கருத்தாகிவிடும்

டில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில்
       சிறுபான்மைப் பிரச்சினை பற்றிய பேச்சு

தம்பி,

K. சுவாமிநாதன் B.Sc.
J. மஞ்சேஸ்வர் B.Sc.
K. சீனுவாசன் B.Sc.
S. லட்சுமிவராகன் B.Sc.
S. சுப்பிரமணியம் B.Sc.
P.A. அசுவதநாராயணா B.E.
G. ராமதுரை M.Sc.
C.V. கோகுலரத்னம் B.Sc., B.E.
V. கிருஷ்ணபிரம்மம் B.E
P.K. வெங்கடேஸ்வரன் B.E,
A. ராமகிருஷ்ண சாஸ்திரி B.Sc. B.E.
K.M. தாமோதரன் M.Sc.
C.V.R. பாபு B.Sc.
R.V. ராமகிருஷ்ணசாஸ்திரி B.Sc.
N. சீனுவாசன் B.E.

G. ரங்கராஜன் M.Sc.
A.R. கோடீஸ்வரராவ் M.E.
N.V.S. சாஸ்திரி M.Sc.
D V. சுப்பிரமணியம் M.Sc.
S.S ராகவன் M.Sc.
K.U.M.பிரசாத் M.Sc.
பிரபாகரராவ் B.E
M R. லட்சுமண் M Sc.
N. ரமணி M.Sc.
K.T. ஜோசப் B.Sc.
M.R. அனந்தசயனம் M.E.
A. கோபாலகிருஷ்ணன் B.Sc.
V C. ஜோஷி Ph.D.
S. ஹரிஹரன் B.Sc.
காசி. விசுவநாத் M.Sc.
R. சீதாராமன் B.Sc.
K.J. நாயக் B.E.
K.V. கிருஷ்ணராவ் M.E.
H.R. பார்த்தசாரதி B.Sc.
P. மதுசூதனன் நாயர் M.Sc.
N.D. ஜெயசங்கர் M.Sc.
K.S. நாராயண அய்யர் M.Sc.
K. சுப்ரமணிய அய்யர் M.Sc.
G. சத்தியநாராயணராஜ் B.Sc.
K. ராமசாமி B.E.
D. தட்சிணாமூர்த்தி B.E.
H.N. கிருஷ்ணசாமி B.E.
S.R. சசிகாந்த் B.E.
A.S. பெருமாள் M.Sc.
E.V.L.N. ராவ் Ph.D.
B. ராஜீவலோசனம் B.Sc.
V.N. கிருஷ்ண மூர்த்தி M.Sc
ஆஷ்லிஷிமெய்ன் B.Sc.
S. வீரேசய்யா B.E.
M.K. மணி B.E.
V. அளகர்சாமி B.E.
K.P. கோபிநாதன் M.Sc.
K. அப்பாராவ் B.E.
B.V. சோமசேகர் B.E.

S.S. கிருஷ்ண மூர்த்தி M.Sc.
S. சுப்பிரமணியம் B.E.
G. பாஸ்கரராவ் M.Sc.
K. ராமசாஸ்திரி M.E.
V V. ஷான்பீ B.E.
P M. கோபிநாத் M.Sc.
B.V.S சர்மா M.Sc.
C.H. ராமச்சந்திரராவ் M.E.
V. முனிரத்தினம் B.E. (Hons)
K L. நாராயணா M.E.
G. செலமா ரெட்டி M.E.
G. ரமணி M.Sc.
V N. வசந்தராஜன் M.Sc.
T. நாராயணா B.E.
N. ரகுநா தநாயக் B.E.
P. பிரபாகராவ் B.E.
K.P.R. பிரபு B.Sc.
B. ராதாகிருஷ்ணராவ் B.Sc.
M. மாதவசம்பிகீதாயா B.E.
H V. வெங்கடகிருஷ்ணா B.E.
S. விஜயகுமார் சாஸ்திரி B.Sc.
K. நாராயணபட் B.Sc.
K. விசுவநாத் அடிகா B.Sc.
B. ரத்தினாகரபைரி B.Sc.
M.R. பரணேஷ் B.E.
M.K. சதீஷா B.E.
A P. சிவபிரசாத் B.Se.
P சேஷசாயி B.Se.
A. செல்வராஜன் M.Sc.
N. கோபால் B.E.
H.G. மாதவராஜ் M.Sc.
G.G. சண்ட் B.E.
R.K. யூவத்சவா B.Sc.
K.V.N சர்மா B.E.
M.V. ராமமூர்த்தி M.Sc.
V. ராமச்சந்திரன் B.Sc.
N. சேஷகிரி B.Sc.
N.S. ஜெயந்த் B.Sc.
H. ராமகிருஷ்ணா B.Sc.

G V. ஆனந்த் M.Sc.
T.V. சத்தியநாராயணா B.Sc.
V P. நாராயணசாமி B.E.
R. சீனுவாசன் B.E.
B. தத்தகுரு B.Sc.
P. தத்தகுப்தா B.Sc. (Hons)
N S. மகாதேவன் B.E.
H.K. ராமப்பிரியன் B.Sc.
குமாரி A பிரதீமா B.Sc.
G. ரமணி B.E (Hons)
R. விசுவநாதன் B.Sc.
N.C. ஜகன் B.Sc.
P.K. நாகேஸ்வரராவ் B.Sc.
R. சம்பத்குமார் Ph.D.
B. சுகவனம் M.Sc.
T. கங்காதரய்யா B.E.
M D. இடியாரா B.Sc.
D S R. சர்மா M.Sc.
K.G கிருஷ்ணமூர்த்தி B.E.
K.H. ராமா B.E.
R. தண்டபாணி B.Sc.
V மதுசூதனராவ் B.Sc.
D.M. பஜிலுல்லா B.Sc.
N. ராமச்சந்திரா B.Sc.
G. புருஷோத்தமம் B.Sc.
A. ராமதாஸ், B.E.
K.V. ராமமூர்த்தி, B.E.
K. பாலசந்திரபட், B.Sc.
S. சேஷாசலா, B.Sc.
R.K. சீனுவாசமூர்த்தி, B.Sc.
D.S. பதாக், B.Sc.
V. சர்மா, B.Sc.
S.H. வெங்கடேஷ், M.Sc.
K. நஞ்சுண்டசாமி, B.E.
குமாரி S. சீதாலட்சுமி, M.Sc.
குமாரி பாக்கியலட்சுமி, M.A. Ph.D.
குமாரி K.S. லீங்ஸி, M.Sc.
குமாரி D.E. லீலாவதி, M.Sc.
குமாரி கிளாடிஸ் சுமித்ரா, M.A.
குமாரி E.J. ராமன், M.A.

குமாரி J. அமிர்தவல்லி, M.Sc.
N. ராமன், B.Sc.
V. சீனுவாசன், M.A.
S. சத்தாக்கு, B.E.
V. ராம்ஜி, M.Sc.
K. நாகராஜ், B.Sc.
K. சிவராமன், B.Sc.
H.G. நாகராஜ், B.Sc.
A. அழகர்சாமி, B.E.
K. வெங்கடேஸ்வரன், B.Sc.
M.V. ராஜா, B.Sc.
V. சீதாராமராவ். B.E.
R. ரவீந்திரன், B.E.
K. நாராயணன், B.Sc.
V.N சுப்பாராவ், B.Sc.
R. சுந்தரேசன். B.Sc,
R. கிருஷ்ணமூர்த்தி, B.Sc.
N. ரங்கநாதன், B.Sc.
R. ராமநாதன், B.Sc
K S L. நரசிம்மன், B.Sc.
C.S. கணேஷ், B.Sc.
N. பார்த்தசாரதி, B.Sc.
R. ஆனந்தராஜ், B.Sc.
K V. வெங்கடாச்சாரி, B.Sc.
K R சீனுவாசன், B.Sc.
B.P. சானி, M.Sc.
N. பத்மநாபன், B.Sc. (Hons)
K N.N. ரெட்டி, M.Sc.
S.K ராமலிங்கம், M.Sc.
K. சந்தானம் M.Sc.
J சுப்பிரமணியம், M.Sc
K. சங்கரராவ், M.Sc.
V. பச்சையப்பன், M.Sc.
N S. வெங்கடராமன், M.A.M.Sc
R. கண்ணன்குட்டி B.E.
K. கிருஷ்ணசாமி, B.E.
V.R. ரங்கராஜு, B.E.
C. கந்தசாமி, M.Sc.
K. சீனுவாசராகவன், B.E.
A. சண்முகசுந்திரம், B.E.

C.V. ராமகிருஷ்ணன், B.E.
T. நடராஜன், B.Sc.
P. சூரியநாராயணன், B.Sc.
C. ரவீந்திரன், B.Sc.
K.S. சங்கரன், B.Sc.
K.P.S பிரபு, B.Sc.
D. ரவீந்திரா, M.E.
P. சத்தியநாராயணா, B.E.
M.S. கிருஷ்ணமூர்த்தி, B.E.
R. பாலசுப்பிரமணியம், M.E.
G.V. வெங்கடசேஷய்யா, M.E.
S. ராமன், B.Sc.
N. ராமன், M.A., M.Sc.
S. ராகவன், M.Sc.
N. விசுவநாதம், B.Sc.
V. V. S. சர்மா, B.SC.
R.J சீனுவாசன், B.E.
M K. சிவலிங்கம், M.A.
குமாரி R. லீலா, M.A.
M. சீனுவாசன், B.Sc.
P S. அனந்தராமன், B.E.
H.N. ராமச்சந்திரா, B.E.
P.G. லட்சுமணன், B.Sc.
K. R. K. ஈஸ்வரன், M.Sc.
V. கணேசன், B.Sc.
ஜாப் S. எபனேசர், M.Sc.
T.S. ராமபத்திரன், B.Sc.
S.A. அக்கீம், B.E.
K. ரங்கா, Ph.D.
B. யக்யநாராயணா, B.Sc.
M.S. ராதாகிருஷ்ணராவ், B.Sc.
G R. வெங்கடகிருஷ்ணன், M.Sc.
T.A வெங்கடராம், B.Sc.
D N அஜாரிகா, B.E.
N. ராகவேந்திரா, B.E.
S.R. யோக நரசிம்மம், M.Sc.
S. அய்யாசாமி, M.Sc.
குமாரி P. மாலதி, M.Sc.
குமாரி P. வசந்தா. B.Sc.
குமாரி P. ராதா, M.Sc.

குமாரி B. மீராபாய், M.Sc.
G. K. வெங்கடராவ். B.Sc.
R. நடராசன், M.E.
V. சுப்பிரமணியம், B.Sc.
V. சீராமுலு, B.E.
P. R. சீனுவாசன், M.Sc.
K. சீதரன், B.E.
S. குருராஜராவ், B.E.
D S. தேஷ்முக், M.Sc.
K. ராமமூர்த்தி ரெட்டி, B.E.
M. V பட், B.E.
J. கோபாலகிருஷ்ணன், M.Sc.
A K. மல்லய்யா, B.E.
M. Y. சுப்பிரமணியம், M.Sc.
J S. கினி, B.E.
K. தாமஸ்ஜேகப், B.Sc.
T. M. ராதாகிருஷ்ணன், M.Sc.
T. K. சந்தானம், B.E.
C. P. பிரபாகரன், M.Sc.
U. V. சவுதாரி, B.E.
S. B. பாய், B.Sc. (Hons)
K S. சீனுவாஸ், M.Sc.
M. K. பிரேமராஜன், B.Sc.
K. V. பட், M.Sc.
K R. ஹெக்கே, B.Sc.
K. சீனுவாசன், B.Sc. (Hons)
K. S சலபதிராவ், B.Sc.
C. சூரியநாராயணா, B.Sc.
A. பாலசுப்பிரமணியம் B.Sc.
M. R. கஜபதி B.E.
R. ராமநாதன் B.Sc.
V. B. K. சன்யாசிராவ் B.E.
R. S. சீனுவாசன் B.E.
M. V. ராவ் M.Sc.
G. ராமசாமி B.E.
H. S. முகுந்தா B.E.
B. சத்தியநாராயணா B.E. (Hons)
K. மல்லிகார்ஜுனராவ் B.Sc.
C. H. பிரசா தராவ் B.Sc.
M. சாம்பசிவராவ் B.Sc.

K. M. காமத் M.Sc.
A. N. மோகன் B.Sc.
M. ரவீந்திரன் B.Sc.
திருநாராயண அய்யங்கார் B.Sc.
M. J. S. ரங்காச்சாரி M.Sc.
S. ராஜசேகரன் B.Sc.
K. ரகுநாதன் M.Sc.
S. V. விஜயராகவன் B.E.
K. கோபாலன் M.Sc.
K. N. சுப்பிரமணியம் M.Sc.
M. சீனுவாசன் B.Sc. (Hons)
V. கிருஷ்ணன் M.Sc.
M. S. வாசுதேவ் B.E.
V. S. V. மணி B.Sc.
K. ரவீந்திரநாத் M.Sc.
S. R. ஜெயின் M.Sc.
D. V. சுப்பிரமணியம் M.Sc.
V. K. வாசுதேவன் உன்னி M.Sc.
குமாரி. V. வசந்தசேனா M.Sc.
குமாரி. சரோஜம்மா M.Sc.
T. S. கண்ணன் M.Sc.
S. R. சத்தியநாராயணா M.Sc.
குமாரி. D. K. பத்மா M.Sc.
N. பாலசுப்பிரமணியம் M.Sc.
H. C. மிருத்யன்ஜனேயா M.Sc.
குமாரி. S. K. விஜயலட்சுமம்மா M.Sc.
K. M. தாமோதரன் M.Sc.
N. மகாபத்ரா M.Sc.
R. ரங்கநாதன் B.Sc (Hons)
K. S. அய்யர். M.Sc
A. சீனுவாசன் M.Sc.
T. அருணாசலம் M.Sc.
S. ரங்கராஜு M.Sc.
G. ராமன் B.E.
V. சேஷகிரிராவ் M.E.
A. G. நாராயணராவ் B.Sc.
M. அந்தோனிரெட்டி B.E.
M. அரிசங்கர் B.Sc.
P. K. போலோஸ் B.Sc.
சீதாராம ஆசார்யா M.Sc.

L. R. சுப்பிரமணியம் M.Sc.
S. பட்டநாயக் B.Sc.
C. தேவநாதன் B.Sc. (Hons)
C. V. யோகாநந்தா M.E.
N. கிருஷ்ணமூர்ந்தி M.Sc
K. K. கண்ணன், M.Sc,
B. V. தாசரதி. B.E.
K. கேசவன், B.Sc.
G. B. சுப்பையா, B.E.
ஜோசப்லோபோ, B.E.
C. K. சீதாராமன், B.Sc.
T. ஜிஷ்ணு, B.E.
D. மல்லையா, B.E.
T. V. சுந்தரராஜமூர்த்தி, B.A., B.E.
C. குருராஜ், B.E,
R. பார்த்தசாரதி B.Sc.
V. மித்தர் B.Sc.
V. K. மாணிக்கசெல்வம் B.E.
S. வெங்கடசுப்பன், B.E. (Hons)
V. நாகராஜன், Ph.D.
G. V. கல்யாணசுந்தரம், M.A.
R. பாலகிருஷ்ணன், B.Sc.
R. கண்ணப்பன், B.E.
S. பாலசுப்பிரமணியம் B.Sc.
D S. சத்தியநாராயணா B.E.
S. ராஜசேகரன் B.Sc.
R. S ராஜகோபாலன் M.Sc.
S. சந்திரசேகரன் B.E.
S. சீதரன் B.Sc.
C. அனந்தநாராயணன் B.Sc.
V. திருவேங்கிடாச்சாரி B.E.
R. S. பட்கோகேஷ்வர் B.E.
R. G. புவனேஸ்வரன் B.Sc.
R. மீனாட்சிசுந்தரம் B.E.
S. ராமப்பிரசாத் B.E.
V. பசுபதி B.Sc.
N. ராதாகிருஷ்ணன் B.E.
H. பரூமிக் B.E.
S. C. முகோபாத்யாயா B.E.
Y. V. வெங்கடேஷ் B.E.

R. ஜம்புநாதன் M.Sc.
H. R. வைத்தியநாத் B.Sc.
N. K. சீனுவாசன் B.Sc.
R. நாகராஜா M.Sc.


பட்டியலைப் பார்த்தனையா! பட்டதாரிகள், அதிலும் தொழிலியல், பொறியியல், மின் இயல் போன்ற விஞ்ஞானத்துறையின் பட்டங்கள், மிக நீண்டகாலமாகப் புதுமுறைத் தொழில் வளம் பெறாமல் பஞ்சத்தில் அடிபட்டுக் கிடந்தோர் நாட்டினைப் புதுப்பொலிவு பெற்றிடச் செய்திடும் பொறுப்பினை மேற்கொள்ளவதற்கான தகுதியும் திறமையும் பெற்றிருப்பவர்களின் பட்டியல். இருண்ட சிற்றூர்கள் ஒளி பெற்றிடவும், துவண்டிடும் தொழிலினை முறுக்கேற்றிடவும், மனிதனைக் கசக்கிப் பிழிந்திடும் கடின உழைப்பைக் குறைத்திட யந்திர வலிவினைத் துணையாக்கிடவும், பொருள்களின் தன்மையினை நுணுகிக் கண்டறிந்து பயனை மிகுதியாக்கிடவும், எந்த விஞ்ஞான அறிவுத்திறமை தேவையோ, அதனைப் பெற்றுள்ள அறிவாளர்களின் பட்டியல்! இவர்கள் காட்டாறுகளைக் கட்டுப்படுத்துவர், கரம்பைக் கழனியாக்குவர், கடல்நீரைக் குடிநீராக்கிடுவர், வேகம், வலிவாக மாறிட வழிசெய்வர்—இவர்களைப் பாரதியார் ‘புதிய பிரம்மாக்கள்’ என்பார்! அத்தகைய சிறப்பியல்பு பெற்றவர்கள்; பெற்றுள்ள திறமையினை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ள பயிற்சி பெற்றுக்கொண்டுள்ளவர்கள்—பெங்களூர் விஞ்ஞானத்துறைக் கல்லூரியில் பயின்று வருபவர்கள்! இவர் போன்றோரின் கரம் பட்டுப்பட்டுத்தான் நாடு செல்வபுரியாகிடவேண்டும். இவர் போன்றாரின் தொகை பெரும் அளவு பெற்றதனால் பிரிட்டனும் ஜெர்மனியும், ரஷியாவும், அமெரிக்காவும், இத்தனை வளர்ச்சிகண்டன. ஆனால்......!

பெருமிதமல்லவா கொள்ளவேண்டும், பழமைப் பிடியிலே சிக்கிக் கிடந்திட்ட நாட்டை மீட்டிடத் திறமை பெற்றுள்ளவர்களில் பட்டியலைக் காணும்போது; புதிய உற்சாகமும் நம்பிக்கையுமல்லவா பெறவேண்டும்; அதற்கு மாறாக இந்தப் பட்டியலையும் காட்டிவிட்டு, பெருமூச்செறிவது ஏன்! ஆனால்......என்று இழுப்பு எதற்காக என்று கேட்கிறாய்; புரிகிறது.

இவர்களின் தகுதியையும் திறமையையும், இவர்களால் நாடு பெற இருக்கும் பெருமையையும் வளர்ச்சியையும் எண்ணும்போது, எல்லோருக்கும் ஏற்படுவது போல எனக்கும் இனிப்பான உணர்ச்சிதான் எழுகிறது. என்றாலும்......

நான் இந்தப்பட்டியலைத் தந்துள்ளதன் நோக்கம், விஞ்ஞானத் துறையினரின் தொகை வளர்ந்து வருவதனைக் காட்டுவதற்காக இருப்பின், மகிழ்ச்சி குறைவின்றிக் கொள்வேன். நான் இந்தப் பட்டியலைத் தந்திருப்பது, அதற்காக அல்ல, எப்படிப்பட்டவர்களின் கருத்தையெல்லாம் துச்சமென்று மதித்திடும் துரைத்தனம் நடத்தப்படுகிறது, எவ்விதமான தகுதி திறமை படைத்தவர்களெல்லாம் ஏனோ தானோக்கள் ஆக்கப் பட்டுவிடுகின்றனர் இந்த ஆளவந்தார்களால் என்பதை அறிவதனால் எனக்கு ஏற்பட்டுள்ள வேதனையைப் பங்கிட்டுக் கொள்வதற்கு உன்னை அழைக்கவே இந்தப் பட்டியலைக் காட்டினேன்.

எந்த அரசு எனினும், எம்முறையில் நடாத்தப்படும் அரசு எனினும் அந்த அரசு அந்நாட்டு நல்லறிவாளர்களின் நட்புறவு பெற்றிட வேண்டும்—நாற்படையினும் மேலானதோர் நற்படையாகிடும் அந்த நட்புறவு. சொல்லேர் உழவர் என்பது கவிதை புனைவோரை மட்டும் குறித்திடுவதாகாது...அறிவுக் கழனியில் பணியாற்றிடும் படைப்பாளர்கள் அனைவரையும் குறிப்பதாகும். அத்தகைய அறிவாளர்களைப் புறக்கணிக்கும் அரசு, புறக்கணிக்கப்பட வேண்டிய அரசாகிவிடும்—ஓர் நாள். இவை, ஆன்றோர் மொழிந்தவை. இன்றுள்ள ஆளவந்தார்களோ, ஏன் அடிக்கடி, எதற்கெடுத்தாலும் ஆன்றோர், சான்றோர் என்றெல்லாம் அழைக்கின்றீர்கள்; நாங்கள் இருக்கின்றோமே, போதாதோ என்கிறார்கள்! சொல்வது மட்டுமல்ல. அறிவாளர்கள் கூறுவதை மருந்துக்கும் கொள்ளமாட்டோம் என்று உறுதியாக நிற்கின்றனர்—கற்பாறை போல!!

நான் குறிப்பிட்டேனே ஒரு பட்டியல்—விஞ்ஞான வித்தகர்களின் பெயர் வரிசை—இது மேலும் நீண்டதாகிடும். வேறு பற்பல கல்லூரிகளில் உள்ளவர்களின் பெயர்களையும் சேர்த்தால் நான் தந்துள்ள பட்டியல், தயாரித்தால் கிடைக்கக்கூடிய மிகப் பெரிய பட்டியலில் ஒரு சிறு துண்டு.

இவர்கள், மொழி வெறி, வகுப்பு வாதம், ஜாதிப் பித்து, கட்சி மாச்சரியம், பதவிமோகம், வன்முறையில் நாட்டம், குழப்பவாதம், பிளவு மனப்பான்மை போன்ற எவற்றினுக்கும் பலியாகிவிடக் கூடியவர்கள் அல்லர். அறிவாலயத்தில் உள்ளவர்கள். எதற்கும், தாமாக முன்னாலே வந்து நிற்கும் இயல்பினருமல்லர். சந்தடி, சச்சரவு விவாதம் ஆகியவைகளுக்கு அப்பால் நெடுந்தொலைவில் இருந்துகொண்டு, மனநிம்மதியுடன் நுண்ணறிவு பெற்று வருபவர்கள். உனக்கா எனக்கா! பார்த்துவிடலாம் வா! என்ற வம்புக்கும் போட்டிக்கும் வருபவர்களல்லர், தமக்கென்று அமைந்துள்ள கோட்டத்தில் இருந்துகொண்டு. அறிவாற்றலைப் பெற்றுக்கொண்டு வருபவர்கள்—பிறகு அதனை நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்த.

அத்தகைய அறிவாளர்கள், கூடிப் பேசி, பிரச்சினையின் பல கோணங்களையும் கண்டறிந்து, ஒரு கருத்தைக் கொண்டு, அதனை அரசு நடாத்திடும் லால்பகதூர் அவர்களுக்குத் தெரிவித்துள்ளனர் — நல்ல விளக்கத்தையும் இணைத்து.

இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்கக்கூடாது என்பதும், ஆங்கிலத்தை அகற்றிவிடக் கூடாது என்பதும் அவர்கள் லால்பகதூருக்குத் தெரிவித்திருக்கும் கருத்தின் சுருக்கம்.

அரசியல்வாதிகள், ஆளுங் கட்சியைக் குறை கூற அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ள, மொழிப் பிரச்சினையைக் கிளப்பிவிட்டு விடுகிறார்கள் என்று ஆளவந்தார்கள் அடித்துப் பேசுகிறார்கள்—தாமே அரசியல்வாதிகள் என்பதை மறந்து; அண்ணல் காந்தியாரின் பெயர் கூறி—அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டவர்கள் என்பதனையும் மறந்து.

இது பொருளற்ற குற்றச்சாட்டு என்ற போதிலும், இதனைக்கூடப் பட்டியலில் காணப்படுவோர்மீது வீசுவது இயலாததாகும். ஏனெனில், இவர்கள் ஒவ்வொருவரும் பயிற்சி பெற்றுப் பயன் தரும் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றுள்ளவர்கள்—அரசியல் அங்காடியில் நுழைந்திட வேண்டிய நிலையில் உள்ளவர்கள் அல்லர்.

இத்தகைய அறிவாளர்களின் பேச்சைத் தட்டி நடக்கக்கூடாது, இத்தகையவர்களை அலட்சியப்படுத்தக் கூடாது என்று. ஆளவந்தார்கள் மேற்கொண்டாக வேண்டிய நெறி, அதிலும் குடியாட்சிமுறை காரணமாக ஆள வந்தார்களாகிவிட்டவர்கள், இந்த நெறியைக் கடைப்பிடிக்கப் பெரிதும் கடமைப்பட்டவர்கள். ஆனால், லால்பகதூர் என்ன கருதுகிறார்! பட்டியலைப் பார்த்து என்ன கூறுகிறார்!! லால்பகதூர் இருக்கட்டும், பெரிய பதவியில் உள்ளவர்; உனக்கு அறிமுகமான மண்டலத்தைக் கேட்டுப்பாரேன்; பட்டியலைக் காட்டிப் பாரேன்! ஒரேவரியில் பதில் வரும், “இவர்கள் கூறிவிட்டால் போதுமா!” என்று திகைத்து நிற்பாய், அவர் தொடருவார், “இவர்களுக்கு என்ன தெரியும்?” என்பார்! கணைகள் தொடரும், சில நூறுபேர் கூறுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இலட்சோப இலட்சம் மக்கள் இருக்கிறார்கள். தெரியுமா?” என்பார். இறுதியாக, “பொதுமக்களுக்கு எது நல்லது என்பதுபற்றி இந்தப் புத்தகம் புரட்டிகளுக்கு என்ன தெரியும்? சதா பொது மக்களோடு பழகிப் பழகி, தொண்டாற்றித் தொண்டாற்றி, அதற்கே எம்மை அர்ப்பணித்துக்கொண்டுவிட்ட எமக்கன்றி, இந்த B. A. க்களுக்கும், M. A. க்களுக்கும், B.Sc.களுக்கும், M. Sc. களுக்கும், B. E. க்களுக்கும், M. E. க்களுக்கும், Ph. D. களுக்குமா தெரியப்போகிறது?” என்று கேட்பார். அவருடைய கோபம் அந்த அளவோடு அடங்கிப் போய்விட்டால், தம்பி! நீ தப்பிப் பிழைக்கலாம்; இல்லையோ, ஆரம்பிப்பார் மளமள வென்று; படித்தவனெல்லாம் அறிவாளியா! படிக்காத மேதை இல்லையா, படித்தால் மட்டும் போதுமா! படித்தவன் படும்பாடு தெரியுமா? எத்தனை B. A. வேண்டும். சோறு போட்டால் போதும் விழுந்து கிடப்பார்கள் காட்டிய இடத்தில்! - இப்படிப்பட்ட துந்துபி தொடரும். காரணம் என்ன, அவருடைய ஆர்வத்துக்கு? அவருடைய கண்களுக்கு மிகப் பெரியவராக, மிகப்பெரிய இடத்தில் உள்ளவராக உள்ளவர்களிலே பலர், படிக்காமலேயே பாராளும் பக்குவம் பெற்றவர்களாகி விட்டது தெரிகிறது. தெரியும்போது, படித்தவன் என்றால் என்ன, அதற்காகத் தனி மதிப்புத் தர வேண்டுமா என்ன! என்று தோன்றுகிறது. பள்ளிக்கூடத்துக்கும் தனக்கும் நடைபெற்ற ‘ஒத்துழையாமை’ இயக்கம் வேறு அவருக்கு நினைவிற்கு வந்துவிடுகிறது. வந்ததும் வாயிலிருந்து வார்த்தைகள் பொறி பொறியாகக் கிளம்புகின்றன.

படித்தவர்கள் சிறுபான்மையினர் — மற்றவர்களே பெரும்பான்மையினர் — பெரும்பான்மையினர் ஆட்சி நடத்தும் உரிமை பெறுவதே ஜனநாயகம் என்று வாதாடியவர்களே உண்டு! அவர்களைக் காணும் நிலை எனக்கு ஏற்பட்டதுண்டு.

மதம், இனம், மொழி என்பவை காரணமாக, சிறு பான்மையினர் இருப்பது தெரியுமல்லவா! — அந்தப் பட்டியலில்தான் மண்டலம் சேர்த்து விடுவார், நான் காட்டிய பட்டியலையும்! அதனால்தான், ‘ஆனால்’ என்று பெருமூச்செறிந்தேன்.

இன்று நாடு உள்ள நிலைமையில் பட்டதாரிகள் சிறுபான்மையினர் — எண்ணிக்கைப்படி. அதிலும் நான் காட்டிய விஞ்ஞானத்துறைக் கற்றறிவாளர்கள் மிகச் சிறிய சிறுபான்மையினர். எனவே அவர்கள், செல்வாக்கற்ற நிலையில் வைக்கப்பட்டு விடுகின்றனர்—பொதுமக்களால் அல்ல—பொதுமக்கள் பெயரைக் கூறிக்கொண்டு ஆட்சி பீடம் பிடித்துக்கொள்பவர்களால். ஒருநாள் வந்தே தீரும்—படித்தவர்கள் பெரும்பான்மையினர் என்று நாடு பெருமையுடன் கூறிக் கொள்ளக்கூடிய நாள். இப்போது நல்ல வளர்ச்சி உள்ள நாடுகளில் அதுதான் நிலை. அந்த நிலைநோக்கி நம் நாடும் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே, இன்றைய சிறுபான்மையினர் நாளைய பெரும் பான்மையினர் ஆகப்போவது திண்ணம். என் மகன் B. A. என்று கூறிப் பெருமைப்படும் தகப்பனார், ஆத்திச்சூடியோடு தமது படிப்பை முடித்துக் கொண்டவராக இருக்கலாம்; ஆனால், அவருக்குத் தம் மகனை நன்றாகப் படிக்கவைக்க வேண்டுமென்ற ஆர்வம் எழுந்தது.

நல்லரசு, சிறுபான்மையினர் எண்ணிக்கையில், என்ற கணக்கு மட்டும் பார்த்து, அவர்களின் பேச்சைத் துச்சமென்று தள்ளிவிடக்கூடாது. சொல்லப்படுவதன் பொருள் பொருத்தம், ஏற்றம் கண்டறிந்து, கொள்வதா தள்ளுவதா என்று முடிவு செய்யவேண்டும்—இந்தி கூடாது என்று சொல்பவர்கள் சிறுபான்மையினர்—ஆகவே, அவர்கள் பேச்சிலே எவ்வளவு நியாயம் இருந்தாலும், ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது நல்லாட்சி என்ற தனிச் சிறப்பைப் பெறமுடியாது.

அதுபோலவே, நாம் மிகச் சிலர் கூறி என்ன பயன்? ஆட்சியிலுள்ளோர் அதனை மதித்து ஏற்றுக் கொள்ளவா போகிறார்கள் என்ற ஐயப்பாடு கொள்ளாமல், நாம் உணர்ந்ததை உரைப்பது நமது கடமை என்ற பொறுப்புணர்ச்சியுடன் பெங்களூர் விஞ்ஞானத் துறைக் கல்லூரியினர் மொழி பற்றிய தமது கருத்தினை லால்பகதூருக்குத் தெரிவித்தது கண்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று இவர்கள் கூறிடும் கருத்தினை, ‘சிறுபான்மையினர்’ கருத்து என்று லால்பகதூர் கருதிவிடக்கூடும். ஆனால், இந்தக் கருத்து இதுவரையில் வாளாயிருந்த எத்தனை எத்தனையோ இலட்சக்கணக்கானவர்களை ஈர்த்துக் கொண்டுவிடும் என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் ஆளவந்தார்களின் கட்சியிலேதான் பலர், அருவருப்பு, அச்சம் காரணமாக, அறிவாளர்களின் கருத்தை மதித்திட மறுக்கின்றனர். பொதுமக்கள் அந்த விதமான போக்கில் இல்லை. அவர்களுக்கு அறிவாளர்கள் பற்றியும் தெரியும், ஆளவந்தார்களின் ஆலவட்டங்களைப் பற்றியும் நன்றாகத் தெரியும். கேட்கலாமே அவர்களின் பேச்சை, சிற்சில வேளைகளில்;

யாரு! கொளந்தையப்பனா! தெரியுமே! தெரியும்!! கொளத்தங்கரைத் தெரு! அடே அப்பா! அது சின்ன புள்ளையிலே ஊர்லே போட்ட ஆட்டம் கொஞ்சமா! அது அப்பன் பொத்தகம் வாங்கப் பணம் கொடுத்தா, “இது பொட்டலம் வாங்கிட்டுப் பொடியன்களோட பொழுதை ஓட்டும்”

என்று ஆரம்பித்து, வாழ்க்கை வரலாற்றை விளக்குவதை.

பொதுமக்கள், கூறப்படும் கருத்தை, கவனிக்க மறுப்பதில்லை. ஆகவே, நமது கருத்து நாடாள்வோரால் தள்ளப்பட்டுவிடினும் நாட்டினரால் வரவேற்கப்படும் என்ற நம்பிக்கையுடன், விவரம் அறிந்தவர்கள், விளக்கம் பெற்றவர்கள், உண்மையை அஞ்சாது உரைத்திடவேண்டும். உரைத்து வருகின்றனர்.

கருத்தளிப்பவர் சிறுபான்மையினரா பெரும்பான்மையினரா என்பதல்ல முக்கியமாகக் கவனிக்கப்படத்தக்கது. அளிக்கப்பட்ட கருத்து ஏற்புடையதா அல்லவா என்பது தான் மிக முக்கியம்.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்ற வள்ளுவர் வாக்கு, இதற்கும் சேர்த்துத்தான் என்பதை உணரலாம்.

ஆனால், நமது கருத்தை எடுத்துக் கூறிவிட்டோம், நமது கடமை முடிந்தது என்ற அளவுடன் இருந்துவிட்டால் பயன் இல்லை. அதனைச் சிறுபான்மையினர் கருத்து என்று கூறுபவர் வெட்கித் தலைகுனியும்படி, பெரும்பான்மையினரின் கருத்து ஆக்கிக் காட்டிட வேண்டும். உண்மையை உணருவது, உண்மையை உரைப்பது என்பதுடன், உண்மையை நிலைநாட்டுவது என்பது இணையவேண்டும்.

என்ன கூறினார் மண்டலம்? நினைவிற்கு வருகிறதா! பொதுமக்களிடம் தமக்குத்தான் தொடர்பு இருக்கிறது, இந்தப் பட்டதாரிகளுக்கு அல்ல என்றார். தமக்குப் பொதுமக்களிடம் தொடர்பு இருப்பதால், பொதுமக்களின் விருப்பம் எது, அவர்களுக்கு நல்லது எது என்பது தமக்கே தெரியும் என்று மார் தட்டுகிறார். அந்தப் பொது மக்கள் தொடர்பை, இந்த அறிவாளர்கள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்; இயலாததா? மண்டலம் கூறுகிறாரே எனக்குப் பொதுமக்கள் தொடர்பு உண்டு என்று. அந்தப் பொதுமக்கள் விஞ்ஞானத்துறை பயில் அறிவாளர்களை வெறுத்தா ஒதுக்கி விடுவர்? அவர்களுக்கு உள்ள குறையே, இந்த அறிவாளர்கள் பழகமாட்டேன் என்கிறார்களே என்பதுதான்! ஆகவே, பெங்களூர் விஞ்ஞானக் கல்லூரி பயில் வித்தகர்கள், தாம் கொண்டுள்ள கருத்தினைச் சிறுபான்மையினரின் கருத்து என்று ஆளவந்தார்கள் அலட்சியப்படுத்தினால் மனம் தளர்ந்துவிடாமல், இக்கருத்தினைப் பெரும்பான்மையினர் கருத்தாக்கிக் காட்டுவோம் என்ற உறுதி எடுத்துக்கொண்டு பொது மக்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, கருத்தினைப் பரவிடச் செய்திடவேண்டும். முயற்சியில் ஈடுபட்டால், எத்தனை எளிது என்பதும், எத்துணை சுவை உளது என்பதும், என்னென்ன பயன் விளைகின்றன என்பதனையும் அறிந்துகொள்ளலாம். அதிலும் இந்த மொழிப் பிரச்சினையைப் பொருத்தமட்டில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் செய்யவேண்டிய பணி நிரம்ப உளது. நெடுநாளைக்கு முன்பே இப்பணி துவக்கப்பட்டிருக்க வேண்டும். முன்பே இப்பணி நடைபெற்றிருக்குமானால் இப்போது சிறுபான்மைக் கருத்து என்ற பேச்சுக்குக்கூட இடம் ஏற்பட்டிருக்காது. ஆனால், அந்தப் பேக்சு ஏற்பட்டுவிட்டதாலேயே, மனச்சோர்வு அடைந்துவிட வேண்டும் என்பது இல்லை; ஆலின் விதை மிகச் சிறிது!!

சென்னை சட்டமன்றத்தில் தி. மு. கழகத்தினரின் எண்ணிக்கை 15! இப்போது 50! எனினும், எண்ணிக்கை 15 என்றிருந்த போதும், நாம் மிகமிகச் சிறுபான்மையினராக இருக்கிறோம் என்ற தயக்கம் காட்டியதில்லை; சரியென்று பட்டதனைச் செப்பினோம். அந்தச் செயலை எள்ளிநகையாடியோரும் உண்டு; ஆனால், அந்தநிலை இன்றி ஓர் வளர்ச்சி நிலையை, கழகத்துக்குத் தந்திருப்பதனை நாடு அறியும்; நல்லோர் மகிழ்கின்றனர்; மற்றையோர் மனத்தாங்கல் கொண்டுள்ளனர். ஒரே மரத்தில் ஒரு கிளையில் குயிலும் மற்றோர் கிளையில் காகமும் இருக்கின்றன; மரம் என்ன செய்யும்! அது போலச் சமூகத்தில் நமது கழக வனர்ச்சி கண்டு மகிழ்ச்சி கொள்பவர்களும் இருக்கிறார்கள். மல்லாந்து படுத்துக்கொண்டு துப்பிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

அன்றும் இன்றும், கழகம் கூறுவதை மறுப்பதும், மறைப்பதும், திரிப்பதும், குறைப்பதும், குலைப்பதும் தொழிலாக்கிக் கொண்டவர்கள் உண்டு; அன்று மறுத்துக் கொண்டிருந்தவர்களிலே சிலர் இன்று மனம் மாறி நமது கருத்தை ஆதரிக்க முற்பட்டுள்ளனர்; அன்று நமது அரணாக நின்றவர் சிலர் நினைப்பு மாறியதால் இன்று நமது மாற்றார்கை அம்புகளாகியுமுள்ளனர்; பூத்தது உதிர்வதும், பெற்றது மடிவதும், சேர்த்தது ஒழிவதும்போல என்று கொள்வோம். மொத்தத்தில் கணக்கெடுத்தால் ‘சிறுபான்மை’ என்றிருந்த கணக்கு நாம் மகிழத்தக்க மாற்றம் பெற்றிருப்பது தெரியும். இப்போதும் ‘சிறுபான்மை’ என்று எண்ணிக்கைதான் சட்டமன்றத்தில். ஆனால், 15—50 ஆக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி கண்டு, மாற்றுக்கட்சியினர் தமது முறைகளை மாற்றிக்கொண்டனரா என்றால், இல்லை; வேகமாகி இருக்கிறது. அன்றுபோலவே இன்றும், இட்டுக் கட்டுவதும், திரித்துக் கூறுவது நடந்தபடி இருக்கிறது, அன்று—1958-ல்—நான் இந்தியை ஏற்றுக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டேன், சட்டசபை கமிட்டிச் கூட்டத்தில் என்று, ஒரே புகார்—வதந்தி — தப்புப் பிரச்சாரம்—பரபரப்பு.

எனக்குத் தம்பி! அதிலே ஒரு மகிழ்ச்சி—என்னைப் பற்றி ‘விஷமம்’ செய்யப்படுகிறதே என்பது குறித்து வரவேண்டிய எரிச்சல்கூட எழவில்லை; இந்திக்கு எத்தனை அளவு எதிர்ப்பு இருக்கிறது, அதனை எவராவது ஆதரிக்க முனைகிறார்கள் என்று கூறப்பட்டால், மக்கள் எத்தனை ஆத்திரம் கொள்கிறார்கள் என்பதனை அறிந்து மகிழ்ந்தேன். பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தேன், கட்டிவிடப்பட்டதை உடைத்துப்போடக் கிடைத்தது வாய்ப்பு.

“கூட்டத்திற்குத் தாங்களும் சென்று விட்டு அங்குக் கூறப்பட்ட கருத்துக்களையும் ஒத்துக் கொண்டுவிட்டு, கையெழுத்தும் போட்டுவிட்டு வெளியே வந்து வேறுவிதமாகச் சொல்கிறார்கள்.”

என்று பேசினார் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர்;

“அதிலே கையெழுத்துப் போடப்பட்டது என்று சொல்வது தவறு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்”

என்று நான் குறுக்கிட்டுக் கூறினேன்.

“அந்தக் கூட்டத்திற்கு யார் யாரெல்லாம் வந்திருந்தார்கள் என்று தெரிந்து கொள்வதற்காகக் கையெழுத்து வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.”

என்று மேலும் கூறினார் அந்தக் காங்கிரஸ் உறுப்பினர்.

“அவ்விதமும் கையெழுத்து வாங்கவில்லை என்பதை அம்மையார் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

என்று நான் கூறினேன்.

1958, பிப்ரவரி 12ம் நாள் சென்னை சட்டமன்றத்தில் இந்த நிகழ்ச்சி; அதுவரையில், விடாமல் ஒரு திங்கள் மேடைக்கு மேடை, அண்ணாதுரை இந்தியை ஏற்றுக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டான் என்றுதான் பேச்சு! பேச்சா! இடிமுழக்கம்! பெரியாரின் பேருரை! கேலிப்படம்! கடாவுதல்! எல்லாம்!! தெரிந்த வித்தை அவ்வளவும்!! மறுநாளும் எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது சட்டசபையில்.

“நம் நிதி அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள், நான் கையெழுத்துப் போட்டுவிட்டதாகச் சொன்னதாக நான் பத்திரிகையில் பார்த்தேன்” (நான்)

“நான் எந்தக் கூட்டத்திலும் கையெழுத்துப் போட்டதாகச் சொல்லவில்லை”

(அமைச்சர் சுப்பிரமணியம்)

“நிதி அமைச்சர் சொன்னதாகப் பத்திரிகையில் வந்தது. பத்திரிகையிலே வந்தது மட்டுமல்ல; நேற்றைய தினம் பேசிய கனம் அங்கத்தினர் அனந்த நாயகி அவர்கள் கையெழுத்துப் போட்டுவிட்டு இப்போது இல்லையென்று சொல்கிறாரே என்று ஆழ்ந்த வருத்தத்தோடு கேட்டார்” (நான்)

“திருத்திக்கொண்டேன் என்பதைக் கனம் அங்கத்தினர் அவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்”

(கனம் அனந்தநாயகி அம்மையார்)

புகார் கிளப்பிய இதழ்கள், அது பொருளற்றது என்பதை விளக்கிடும் சட்டசபை நிகழ்ச்சியை எடுப்பாக வெளியிட்டனவா? இல்லை! அதற்கா அவை? இட்டுக் கட்டுகளோ இருப்பதை மறைப்பவைகளோ இவைகளுக்கு இடம் கொடுத்தாகிலும் என்னைக் குறைகூற எண்ணுபவர்களுக்கு இடம் நிறைய!

இந்த ‘இட்டுக்கட்டு’ கூட, எனக்கு ஒரு சாதகமாக அமைந்தது. உண்மை விளங்கச் செய்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது மட்டுமல்ல; மொழி விஷயமாக கழகக் கொள்கை எது என்பதனைச் சரியான முறையில் பதிவு செய்துகொள்ளவும் வழி கிடைத்தது.

1958 மார்ச் 11-ம் நாள் அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

“This House is of firm opinion that Part 17 of the Constitution of India should be suitably amended so as to retain English as the official language of the Union Government without any time limit.”

காலவரையின்றி இந்தியப் பேரரசில், ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக நீடிக்கச் செய்வதற்கு ஏற்ற முறையில், இந்திய அரசியல் சட்டத்தின் 17வது பிரிவைத் திருத்த வேண்டுமென்று இந்த மன்றம் உறுதியான கருத்து கொண்டிருக்கிறது.

என்ற தீர்மானத்தைக் கழகம் கொடுத்தது. இதற்கு ஆதரவாக 14 வாக்குகள்; எதிர்த்து 121. கழகம் கொடுத்தது தோற்கடிக்கப்பட்டது; ஆனால் நாடு பதிவு செய்து கொண்டது, கழகம் மொழிபற்றிக் கொண்டுள்ள கொள்கை என்ன என்ற உண்மையை.

அதே சட்டமன்றத்தில் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் எட்டாம் நாள்,

“This House recommends to the Government to convey to the Union Government that this House is of opinion that steps should be taken to recognize all the fourteen languages enumerated in the 8th schedule of the constitution as the official languages of the Union under article 343 and till such time English shall be retained for all official purposes of the Indian Union.”

இந்திய அரசியல் சட்டத்தில் எட்டாம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 14-தேசிய மொழிகள் எல்லாம் பேரரசின் ஆட்சி மொழிகளாக ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும், அதுவரையில் 343-ம் விதிமுறையின்படி, இந்தியப் பேரரசின் அதிகாரக் காரியங்கள் அனைத்துக்கும் ஆங்கிலத்தைப் பயன் படுத்துவது நீடிக்கப்படவேண்டும் என்பதனை மத்திய சர்க்காருக்குத் தெரிவிக்க வேண்டுமென்று, (மாநில) சர்க்காருக்கு இந்த மன்றம் சிபாரிசு செய்கிறது.
என்ற தீர்மானம் கொண்டு வந்தது கழகம். ஆதரவாக 44-வாக்குகள்; எதிர்த்து 84.

இம்முறையும் வெற்றி இல்லை. ஆனால், கழகக் கருத்துக்கு ஏற்பட்ட வளர்ச்சி தெரிகிறதல்லவா! ‘சிறு பான்மை’ வளருகிறது என்பதற்கு இந்தச் சான்று.

1958-ல் மொழிபற்றிய கழக யோசனையை வெளியிட்டவர் தோழர் அன்பழகன்; 1963-ல் தோழர் மதியழகன்.

எனவேதான் கூறுகிறேன் சிறுபான்மையினரின் கருத்து என்றால், ஆட்சியினர் அலட்சியப்படுத்திவிடுவதும் தவறு, அந்தக் கருத்து எப்போதுமே சிறுபான்மையினர் கருத்தாகவே இருந்துவிடுமோ என்று அந்தக் கருத்தினர் அச்சப்படுவதும் தவறு. நம்பிக்கையுடனும், நல்ல முறையிலும் பணியாற்றினால், சிறுபான்மையினர் கருத்து என்று கூறப்படுவதையே, நாட்டு மக்களின் கருத்து என்ற அளவுக்கு வளர்ச்சிபெறச் செய்வதில் வெற்றி பெற்றிட முடியும். பெங்களூர் விஞ்ஞானத்துறை பயில்வோர் இதனை உணர்ந்து அதற்கு ஏற்றபடி தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறுபான்மையினர் என்பது குறித்து மிக அதிகமான அளவு சிந்தனையைச் செலுத்த வேண்டிய வாய்ப்பு எனக்கு, துவக்கநாள் தொட்டு. சிறுபான்மை என்பதற்கு எண்ணிக்கையை மட்டுமே காரணமாகக்காட்டுகிறார்கள்; அந்த முறையிலே மட்டும் கவனித்தால் அந்தப் பிரச்சினையின் முழு உண்மை துலங்காது.

ஜாதி, மதம், மொழி அடிப்படையில் அமைந்துவிடும் சிறுபான்மையினருக்கும், ஜாதி, மதம், மொழி, அரசு—முறை, ஆகியவைபற்றிய கருத்தினைக் கண்டறிந்து எத்தகைய கருத்தினை எவரெவர் பெற்றுள்ளனர் என்று கணக்கெடுத்து, அதிலே பெரும்பான்மை—சிறுபான்மை என்று வகைப்படுத்திப் பார்ப்பது பிரச்சினையின் உண்மையை உணர்ந்துகொள்ள உதவும்.

மதம், ஜாதி, மொழி என்பனவற்றின் காரணமாக அமைந்துவிடும ‘சிறுபான்மை’ அதிகமான அளவிலோ, அதிகமான வேகத்திலோ வளர்ந்து ‘பெரும்பான்மை’ ஆகிவிடுவது இயலாத காரியம்.

ஆனால், கருத்து அடிப்படையில் காணப்படும் ‘சிறுபான்மை’ என்பது அவ்விதமல்ல, வேகமாக மாறி வளர்ந்து, பெருமபான்மை ஆகிவிடக்கூடியது.

பெரும்பான்மையோர், கூடித் தீர்ப்பளித்துத்தான் கிரேக்கப் பெருமகனார் சாக்ரடீசுக்கு நஞ்சளித்துக் கொன்றனர்; அவருக்காக அந்த மன்றத்தில் சிறுபான்மையோர்தான் பரிவுகாட்டினர்.

ஆனால், சாக்ரடீஸ் உயிரோடு இருந்தபோது இருந்த சிறுபான்மை, அவர் மறைந்ததும் வேகவேகமாக வளர்ந்தது, பெரும்பான்மையாகிவிட்டது! பெரும்பான்மையா! கிரேக்கம் முழுவதும் அவர் சார்பில்! கிரேக்கத்தோடும் நின்று விடவில்லை, அறிவுலகம் அவ்வளவும் அவருக்கே!!

இவை குறித்தெல்லாம் எண்ணவும், இவைகளில் சிலவற்றைக் குறித்துப் பேசவும் இம்முறை டில்லியில் எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

இந்தி எதிர்ப்பு உணர்ச்சியே சிறுபான்மையினரின் உணர்ச்சி என்பதுதானே டில்லிப் பேரரசின் கணக்கு. அந்த முறையில், ‘சிறுபான்மை’யினரில் ஒருவன் என்ற நோக்கத்துடனேயே என்னை அங்குக் கவனிக்கிறார்கள்.

அந்நிலையில் சிறுபான்மையினர் பிரச்சினை பற்றிப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது, மகிழ்ச்சி தந்தது.

டில்லிப் பல்கலைக் கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரி மாணவர் மன்றத்தில் பேசும் வாய்ப்புப் பெற்றேன். ஜனநாயகத்தில் சிறுபான்மையோர் பிரச்சினை என்பது குறித்துப் பேசினேன். கல்லூரித்தலைவர் சர்க்கார் என்பவரும், ஆசிரியர்களும் மாணவர்களும் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தில் பேசச் சென்ற என்னுடன் நமது மனோகரன், ராஜாராம், செழியன், முத்து, ராமபத்திரன் ஆகியோரும் வந்திருந்தனர்.

டில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி தரமானது என்று கூறப்படுகிறது. ஆனால், கல்லூரி முதல்வர், சென்னை கிருத்தவக் கல்லூரி, லயோலா கல்லூரி ஆகியவைபற்றிப் பெருமிதத்துடன் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இங்கு நான் கல்லூரிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்போது, கல்லூரி முதல்வர்கள் என்னிடம் தனியாக, அரசியல் பேசாதிருக்கும்படி கேட்டுக் கொள்வார்கள்—ஒருவிதமான அச்சத்துடன். அன்று செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர் அதுபோல ஏதும் கூறவில்லை. உற்சாகமாக வரவேற்று, நண்பர்போல் பழகினார்.

மாணவர்கள், பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருப்பவர்கள் என்பதை அறிந்து கொண்டேன். துளியும் எதிர்பாராத நிலையில் இந்த வாய்ப்புக் கிடைத்தது, காரணம் என்ன இதற்கு என்று அறிந்துகொள்ள இயலவில்லை—துவக்கத்தில்.

அந்தக் கல்லூரி மாணவர் இருவர் ஒருநாள் மாலை என்னைக் கண்டு தங்கள் கல்லூரியில் சொற்பொழிவாற்ற வரவேண்டும் என்று அழைத்தபோது, எனக்கு வியப்பாக இருந்தது. வருவதற்கு இசைவு தெரிவித்து விட்டு, எதற்கும் முறைப்படி, உங்கள் கல்லூரி முதல்வரிடமிருந்து ஒரு அழைப்புக் கடிதம் பெற்று அனுப்புங்கள் என்றேன்.

“தேவைகூட இல்லை. எவரெவரை அழைத்துப் பேசச்சொல்வது என்பது மாணவர்மன்றம் பெற்றிருக்கும் உரிமை. முதல்வர் அதற்குக் குந்தகம் விளைவிப்பதில்லை. நாங்கள் ஆண்டுதோறும் ஆண்டுரூஸ் சொற்பொழிவுகள் எனும் தொடர் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். அதிலே, முன்பு ஜெயப்பிரகாஸ் நாராயணன், ஹிரேன் முக்கர்ஜி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மாணவர்களாகவே ஒரு ஆங்கில மாத இதழ்கூட வெளியிட்டு வருகிறோம்; ஆன்செட் என்பது இதழின் பெயர்; இதழ்கள் நாளை அனுப்பிவைக்கிறோம்; நீங்கள் விரும்புகிறபடியே கல்லூரி முதல்வரின் அழைப்புக் கடிதமும் பெற்று அனுப்புகிறோம்” என்று கூறினர் சொன்னபடியே செய்தனர். ஆன்செட் இதழ் கிடைத்தது. அதைக் கண்ட பிறகுதான், ஏன் என்னை அழைக்க விரும்பினார்கள் என்பது எனக்குப் புரிந்தது. அந்த இதழில் தி. மு. கழகத்தைத் தாக்கி ஒரு கட்டுரையும், விளக்கமளித்து, ஒரு கட்டுரையும் அந்த விளக்கத்துக்கு மறுப்பு அளித்து ஒரு கட்டுரையும் வெளியிடப்பட்டிருந்தன, முன்னதாகவே, கழகம் செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்குச் சென்றுவிட்டிருக்கிறது! பிறகு, நானும் செல்லவேண்டியது முறைதான் என்று எண்ணிக்கொண்டேன்.

சிறுபான்மையோர் பிரச்சினை என்ற உடன், அனேகமாக, முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் ஆகியோர் குறித்த விஷயம் பேசுவேன் என்றுதான் அவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள்; நான் முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் ஆகியவர் குறித்த பிரச்சினையாக மட்டும் சிறுபான்மையோர் பிரச்சினையைக் கருதவில்லை; கொள்கை கருத்து-இவற்றிலேகூட சிறுபான்மையினராக உள்ளவர்கள் பற்றிய பொதுப் பிரச்சினையாகவே அதனைக் கருதினேன்; அந்த முறையிலேதான் பேசினேன்.

வாடிக்கையாக, கூட்டத் தலைவர் பேச்சாளர்பற்றி நாலு நல்லவார்த்தை சொல்லி அறிமுகப்படுத்துவார் அல்லவா; அதுபோல மாணவர் தலைவர் என்னைக் குறித்துப் பேசினார்-இவர் நமக்கெல்லாம் மிக நன்றாக அறிமுகமானவர்; பிரமுகர்; தி. மு. கழகத்தவர் என்றெல்லாம். நான் துவக்கத்திலேயே சொன்னேன். “என்னை இங்கு அனைவரும் மிக நன்றாக அறிந்திருப்பதாக நண்பர் கூறினார்; நன்றி; ஆனால், உண்மை என்னவென்றால், என்னைப்பற்றிய தவறான கருத்துகளைத்தான் நீங்கள் தெரிந்துவைத்திருப்பீர்கள், நல்லனவற்றை அல்ல; என்றாலும், எனக்கொரு மகிழ்ச்சி, நல்லதோ கெட்டதோ, சரியோ தவறோ, ஏதோ ஒரு வகையில், என்னை நீங்கள் அறிந்துகொண்டிருக்கிறீர்கள்; அந்த மட்டில் மகிழ்ச்சிதான். இனி நான் பேசியான பிறகு, என்னை ஓரளவு நீங்கள் சரியாகவும் அறிந்துகொள்ளலாம், அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள்; சரியாக அறிந்துகொள்ளும் இயல்பு உள்ளவர்கள்!” என்று கூறினேன். ஏன் அவ்விதம் கூறத்தோன்றிற்று என்றால், பல நூறு முறை என் பேச்சைக் கேட்ட பிறகும், இங்கே இல்லையா சிலர், என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள்; புரிந்துகொள்ள மறுப்பவர்கள், சுளையை விட்டுவிட்டுத் தோலை எடுத்துக் கொள்பவர்கள்! அதுபோல, எங்கும் சிலர் இருக்கத்தானே செய்வார்கள்; அதனால் அவ்விதம் கூறினேன்.

‘ஆனால் மாணவர்களிலே மிகப் பெரும்பாலானவர்கள் அவ்விதமானவர்கள் அல்ல என்பது, அவர்கள் பலமுறை, நான் கூறிய கருத்தினுக்கு ஒப்பம் அளிக்கும் முறையில், மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததிலிருந்து தெரிந்தது. துளியும் தொடர்பற்ற ஒருவனுடைய பேச்சை, அக்கறையற்று, ஒருகாதில் வாங்கி மறு காது வழியாக விடுபவர்களாக இருந்துவிடுவார்களோ, பேச்சு பயனற்றுப் போய்விடுமோ என்று நான் அச்சப்பட்டுக் கொண்டேன். அச்சம் பொருளற்றது என்பதனை மாணவர் போக்கு விளக்கிக் காட்டிற்று.

“சிக்கலும், மாறுபட்ட கருத்துகள் மிகுந்ததுமான ஒரு பிரச்னை பற்றி என்னை ஏன் பேச அழைத்தார்கள் என்று நான் யோசித்தேன்; என்னைப் பற்றியே பல மாறுபட்ட கருத்துக்கள் உலவுகின்றன என்பதால், நான்தான் சிறுபான்மையோர் பிரச்சினை குறித்துப் பேசப் பொருத்தமானவன் என்று மாணவர்கள் தீர்மானித்தார்கள் போல் தெரிகிறது. சிறுபான்மையோர் பிரச்சினை மட்டுமல்ல. நானே விவாதத்துக்கு உரிய ஆசாமி தான்!” என்று கூறினேன். பிறகு, சிறுபான்மையோர் என்பதற்கு என்னென்ன பொருள் கொள்ளப்படுகின்றன, எங்கெங்கு இந்தச் சிறுபான்மையோர் உள்ளனர் என்பது குறித்து விவரம் அளித்தேன்.

பெரும்பான்மையோர் என்று ஒரு பகுதி சமூகத்தில் இருப்பதனால், இயற்கையாகவே சிறுபான்மையோர் என்ற பகுதி இருந்து தீரவேண்டி இருக்கிறது. இது இன்று நேற்று முளைத்ததுமல்ல; இட்டுக் கட்டப்பட்டதுமல்ல; பொருளற்றதுமல்ல; வெறும் பொழுது போக்குப் பிரச்சினையுமல்ல; மிக முக்கியமானது; நெடுங்காலமாக இருந்து வருவது; சிக்கலைப் போக்கும் வழி இதுதான் என்று திட்டவட்டமாக எவரும் எளிதிலே கூறிவிட முடியாத விதமான கடினமான பிரச்சினை இது. மாணவர் மன்றம் இத்தகைய பிரச்சினை பற்றி அறிந்துகொள்ள ஆர்வம்காட்டுவது வரவேற்கத்தக்கது. ஏனெனில், மிகப் பெரியவர்கள் சிலர், சிறுபான்மையோர் பிரச்சினை, வகுப்புவாதப் பிரச்சினை, ஜாதிப் பிரச்சினை என்பவைகள் சில்லறைப் பிரச்சினைகள்; அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுவிட்டால், கல்வி அறிவு பெருகிவிட்டால், தொழிற் புரட்சி ஏற்பட்டுவிட்டால், இந்த சில்லறைப் பிரச்சினைகள் தாமாக மடிந்தொழியும் என்று கூறிவருகிறார்கள்; பொருளாதார வளர்ச்சி, தொழிற் புரட்சி, கல்வி வளர்ச்சி எல்லாம் வியந்து பாராட்டத்தக்க அளவு உள்ள இன்றைய அமெரிக்காவில், சிறுபான்மையோர் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. உரிமை கேட்டு, நீக்ரோ மக்கள் கிளர்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்; ஆகவே, சிறுபான்மையோர் பிரச்சினை என்பது, யாரோ சில சிறு மதியாளர்கள் வேண்டுமென்றே கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகின்ற முறையில் இருக்கிறது என்று தவறாக எண்ணிக்கொள்ளாதீர்கள்; எங்கெங்கு, எந்தெந்தச் சமயத்தில், என்ன காரணம் காட்டி, சமூகத்தில் ஒரு பகுதியினர் மற்றோர் பகுதியினரைக் கொடுமையாக நடத்தினாலும் இழிவுபடுத்தினாலும், உரிமையைப் பறித்தாலும். வளர்ச்சியைத் தடுத்தாலும், ஆதிக்கம் செலுத்தினாலும், கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட, இழிவாக நடத்தப்பட்ட பகுதி, எதிர்த்துக் கிளம்பியே தீரும், எதிர்ப்பின் முறைகள் வேறு வேறாக இருக்கலாம்; ஆனால், ஆதிக்கம் செய்பவர்களை எதிர்த்து நிற்கும் இயல்பு எங்கும் உண்டு, எப்போதும் உண்டு; ஆதிக்கக்காரர் மிகப்பெரும்பாலோராக இருப்பினும் கொடுமை செய்திட அவர்களுக்கு உரிமை கிடையாது, வலிவு இருக்கலாம்! கொடுமைக்கு ஆளானவர்கள் சிறிய அளவினராக இருப்பினும், எதிர்த்து நிற்கும் உரிமையும் இயல்பும் அந்தச் சிறுபான்மையினருக்கு உண்டு; சிறுபான்மையினர் என்பதற்காக அவர்கள் உரிமை இழந்துவிட வேண்டும் என்பதில்லை, கொடுமையில் உழலவேண்டும் என்பதில்லை. இந்த உணர்ச்சிதான், சிறுபான்மையோர் பிரச்சினை என்பதன் அடிப்படையாக அமைந்திருக்கிறது.” என்று விளக்கம் தந்தேன்.

பொதுவாக ஒரு கருத்து இங்குப் பரப்பப்பட்டிருக்கிறது—இங்கு மட்டுந்தான் சிறுபான்மையோர் பிரச்சினை என்பது வேண்டுமென்றே கிளப்பிவிடப்பட்டிருப்பதாக. உண்மை முற்றிலும் வேறு. நீண்ட பல ஆண்டுகளாகக் குடியாட்சி முறையை மேற்கொண்டுள்ள பல நாடுகளில்—ஐரோப்பிய பூபாகத்து நாடுகளில்—இன்றும்கூட சிறுபான்மையோர் பிரச்சினை இருந்து வருகிறது. காரணம்? ஆதிக்கம் செலுத்திடும் இயல்பு. அரசு நடத்தும் வாய்ப்புப் பெற்றதனாலோ, ஜாதி காரணமாகவோ, மொழி காரணமாகவோ, மத அடிப்படையிலோ, பொருளாதார வலிவின் துணை கொண்டோ ஏற்பட்டுவிடுகிறது; ஆதிக்கம் செலுத்திச் செலுத்தி அதிலே ஒரு தனிச்சுவை கண்டுவிட்டவர்கள், எளிதிலே அந்த இயல்பினை விட்டுவிடுவதில்லை; வெற்றி வீரர்கள், ஆளப் பிறந்தவர்கள், அறிவாற்றல் மிக்கவர்கள் என்று காரணம் காட்டி, பண்டைய கிரேக்கத்தில், சமூகத்தில் ஒரு பகுதியினரை அடிமைகளாக, எந்தவிதமான உரிமையும் அற்றவர்களாக, மனித மிருகங்களாக வைத்துக் கொண்டிருந்தனர். அறநூற்களும், அறிவு நூற்களும், காவியமும் ஓவியமும், அரசு முறை பற்றிய ஏடுகளும் ஆத்மீகம் பற்றிய ஏடுகளும், எந்தக் கிரேக்கத்திலிருந்து மலர்ந்தனவோ, அதே கிரேக்கத்திலே அடிமைகளாக சமூகத்தில் ஒரு பகுதியினரை அழுத்தி வைத்திருக்கும் அக்கிரமம் நெளிந்து கொண்டிருந்தது. பிறகு வடிவமெடுத்த ரோமப்பேரரசு, எகிப்திய எழிலரசு போன்ற பலவற்றிலும், ஒவ்வோர் முறையிலும் வடிவிலும், இந்த அக்கிரமம் இருக்கத்தான் செய்தது. இவைகளைப் பற்றிக் கோடிட்டுக் காட்டத்தான் முடிந்தது—நேரம் கிடைக்க முடியாதல்லவா.

சிறுபான்மை, பெரும்பான்மை என்பது வெறும் எண்ணிக்கை பிரச்சினை அல்ல-மிகப் பெரும்பான்மையினரிடமிருந்து சிறுபான்மையினர்—அதாவது சிறிய எண்ணிக்கையில் உள்ளவர்கள், பாதுகாப்புத் தேடிக் கொள்ளும் பிரச்சினை என்று மட்டுமே இதனைக் கருதிவிடக் கூடாது. சில சமயங்களில், சில இடங்களில் மிகப்பெரிய அளவில் உள்ள மக்களை, மிகக் குறைந்த அளவில் உள்ள மக்கள், அடக்கி ஆள்வது காணலாம். சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தின்படி ; ஆதிக்கம் செலுத்தும் சிறு கூட்டம், தனது நிலையைக் கெட்டிப் படுத்திக்கொள்ள நியாயம் தேடிக் கொள்ளலாமா! அது அநியாயம்! வெள்ளைக்கார ஏகாதிபத்தியம் இங்கு இருந்த போது, பலகோடி மக்களை ஒரு சில ஆயிரவர்—வெள்ளையர்—சிறுபான்மையினர் அடக்கி ஆண்டு வந்தனர், நாங்கள் சிறுபான்மையினர், ஆகவே எங்களுக்குப் பாதுகாப்பு தேவை என்று வெள்ளையர் வாதாடி இருப்பின், எப்படி இருந்திருக்கும்? அதனை அநீதி என்றுதான் எவரும் கூறி இருப்பர்! சிறுபான்மையினராக இருக்கிற ஒரே காரணத்துக்காக இனம், மதம், மொழி, வாழ்க்கை முறை போன்ற துறைகளில் பெரும்பான்மையினரிடம் அடங்கிக் கிடக்கவேண்டும் என்ற நிலை இருக்கும்போதுதான், சிறுபான்மையினரின் உரிமைக் கிளர்ச்சிக்கு நியாயம் இருக்க முடியும்.

பண்டைய கிரேக்கத்தில் குடியாட்சிமுறை நடைபெற்ற விதத்திற்கும் இப்போதுள்ள குடியாட்சி முறைக்கும் நிரம்ப மாறுபாடு—இயற்கையான காரணத்தால் விளைந்த மாறுபாடு—ஏற்பட்டுவிட்டிருக்கிறது. கிரேக்கத்தில், ஏதன்ஸ் நகரமக்கள் ஐம்பது ஆயிரம்பேர்—எந்த அரசியல் பிரச்சினையையும் கவனிக்க, கருத்தளிக்க, முடிவெடுக்க எல்லாமக்களும் ஒருசேரச் சந்தைச் சதுக்கத்தில் கூடுவர். இப்போது, குடியாட்சி முறை என்பது, மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளுவது என்ற கொள்கை அடிப்படையில் இருப்பினும், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் மூலமாகத்தான் ஆட்சி நடத்தப் படுகிறது—நேரடியாக அல்ல—மக்கட் சமூகம் முழுவதனாலும் அல்ல. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எங்கும், தேர்ந்தெடுக்கும் மக்களைவிட எண்ணிக்கையில் சிறிய அளவினராகத்தான் இருக்க முடியும்—சிறுபான்மையினர்! நாங்கள் சிறுபான்மையினர் எங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று ஆளவந்தார்கள் வாதாடினால் எப்படி இருக்கும்; விந்தையாக மட்டுமல்ல, விபரீதமாகவும் இருக்கும்.

ஆகவே, இந்தப் பிரச்சினையை நாம் பார்க்க வேண்டிய சரியான முறை, ஜாதி, மதம், மொழி, செல்வம், வலிவு, எனும் ஏதேனும் ஒன்றைத் துணைக்கொண்டு சமூகத்தில் ஒரு பகுதியினர் ஆதிக்கம்பெற்று, ஆதிக்கக்காரர்களின் மதம், ஜாதி, மொழி, கோட்பாடு என்பதனை ஏற்றுக்கொள்ளாமல், தமக்கென்று மதம், ஜாதி, மொழி, கோட்பாடு ஏதாகிலும் பற்றுடன் கொண்டு, அவைகளுக்கு ஊறு நேரிடாதபடி பாதுகாத்துக் கொள்ளும் உரிமை பெறவேண்டுமென உறுதியுடன் மற்றோர் பகுதியினர் இருப்பின், அங்குச் சிறுபான்மையோர் பிரச்சினை எழுகிறது என்பதுதான்.

இன்று நீக்ரோ மக்கள், உலக முழுவதும் உள்ளவர்களைக் கணக்கெடுத்தால், அமெரிக்கர்களை விட எண்ணிக்கையில் அதிக அளவு என்று கூறலாம். ஆனால், அமெரிக்கா என்ற எல்லைக்குள்ளாக மட்டும் கணக்கெடுத்தால், நீக்ரோக்கள் சிறுபான்மையினர்,

ஆகவே, சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற கணக்கு, அதற்கு நாம் பயன்படுத்தும் அளவுகோல், கணக்கெடுக்கும் இடம், முறை ஆகியவற்றையும் பொறுத்திருக்கிறது.

இந்தியாவை ஒரு எல்லையாகக்கொண்டு கணக்குப் பார்க்கும்போது, முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் எனும் இரு பிரிவினருமே சிறுபான்மையினர்! ஆனால், முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் உலகில் உள்ளவர்கள் அனைவரையும் ஒன்றாகக் கணக்குப்போட்டு, இந்துக்களுடன் ஒப்பிட்டால், முஸ்லீம்களும் கிருஸ்தவர்களும் பெரும்பான்மையினர் என்பது தெரிகிறது.

உலகமெல்லாம் சுற்றுவானேன் தம்பி! அருகாமையிலேயே இருக்கிறதே விளக்கம்; சென்னை சட்டசபையை எடுத்துக்கொண்டு கணக்குப்பார்த்தால், கழகம் சிறுபான்மையாகிறது! சென்னை மாநகராட்சி மன்றத்தில் கணக்கெடுத்தால் காங்கிரஸ் சிறுபான்மையாகிவிடக் காண்கிறோம்.

இந்தி மொழி, பெரும்பான்மையினர் பேசும் மொழி என்ற வாதம்கூட, அதன் ஆதரவாளர் பயன்படுத்தும் அளவுகோலின் தன்மையைக்கொண்டுதான்.

இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளையும் ஒரு கணக்கில் சேர்த்து, இந்தியை மட்டும் ஒரு தனிக் கணக்காக்கினால், இந்தி இந்தியாவில் சிறுபான்மையினரின் மொழி என்பது விளங்கும்.

ஆனால் இந்தி ஆதரவாளர்கள், மராட்டிய மொழி பேசுவோரைவிட, தமிழ் பேசுவோரைவிட, தெலுங்கு பேசுவோரைவிட, வங்காள மொழி பேசுவோரைவிட, அதிக எண்ணிக்கையினர் பேசும் மொழி இந்தி, ஆகவே அது பெரும்பான்மையினரின் மொழி என்கிறார்கள்,

உண்மையில் பெரும்பான்மையினரின் மொழியாக இந்தி இருக்கிறது என்று மெய்ப்பிக்க வேண்டுமானால், இந்தியாவில் உள்ள 40-கோடி மக்களில் 30-கோடிப் பேர், அல்லது 25 கோடிப் பேர் இந்தி மொழியினர் என்று கணக்கு இருக்கவேண்டும். அப்படி இல்லை. ஆயினும் ஆட்சியினரின் அரவணைப்பு இருப்பதால், இந்தி பெரும்பான்மையினரின் மொழி என்று அடித்துப் பேசுகிறார்கள்.

தானே தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு கடைவீதி சென்று தின்பண்டம் வாங்கிக் கொடுத்து, தின்னத் தெரியாமல், தின்று சட்டையை அழுக்காக்கிக்கொண்ட சிறுபயல், அரும்பு மீசைக்காரனாகி, முதலாளி என்ற பட்டத்தை, தந்தை செத்ததால் பெற்றுவிட்ட பிறகு, தன்னையே—அறுபதாண்டு நிரம்பிய தன்னையே—பெயரிட்டுக் கூப்பிட்டு மிரட்டுவதை, ஊழியம் செய்து பிழைக்கும் கந்தனும் முருகனும் சகித்துத் கொள்வதைக் காண்கிறோமே! அதுபோல, இப்போதும் கடன் வாங்கிக் காலந்தள்ள நினைக்கும் நிலையிலுள்ள இந்தி மொழி, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே இணையற்றது என்ற ஏற்றம் பெற்றுவிட்ட நமது தமிழ் மொழியைவிட உயர் நிலைபெற்று, ஆட்சி மொழி என்று ஆகிறது அல்லவா!

சிறுபான்மை—பெரும்பான்மை என்பது, அதற்குக் கிடைத்திடும் பாதுகாவலனையும் பொருத்து வலிவு பெறுகிறது.

ஆனால், எக்காரணம் கொண்டோ பெரும்பான்மை என்ற நிலையைப் பெற்றுவிட்ட ஒரு பகுதி, அதிகார பலம்கொண்டு, சிறுபான்மையைச் சீரழிவாக நடத்தி வெற்றிகாண நினைப்பது, பேராபத்தில் நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். இந்தியே ஆட்சிமொழியாக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களிலேயே சிலர், ஆதிக்கம் காட்டி இந்தியைப் புகுத்திடப்போய், அதன் காரணமாக நாட்டிலே பிளவு மனப்பான்மை ஏற்பட்டு ஒற்றுமை குலைந்து போகும்போலத் தோன்றினால், இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதை விட்டுவிடத்தான் வேண்டும் என்று பேசத் தலைப்பட்டுவிட்டுள்ளனர்.

மொழி காரணமாகப் புகுத்தப்படும் ஆதிக்கத்தையும், அதனை நாம் எதிர்த்து நிற்பதையும், நான் கல்லூரிக் கூட்டத்தில் எடுத்து விளக்கும்போதுதான், அவர்களின் இதழில் வெளியிட்டிருந்த கழகம் பற்றிய கருத்துபற்றி எடுத்துக்காட்டினேன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் திராவிடர் கழகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை, இரண்டும் வேறு வேறு அமைப்புகளாகப் பதினேழு ஆண்டுகளாக உள்ளன என்பதனை உணர்ந்துகொள்ளாமலே இதழில் எழுதப்பட்டிருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டிவிட்டு, இப்போது திராவிடர் கழகம் இந்தியை எதிர்க்கத் தேவை இல்லை என்று கூறிடும் அமைப்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி எதிர்ப்பு நடத்திடும் அமைப்பாக இருப்பதனையும் விளக்கினேன். கூட்டம் முடிந்த பிறகு, பலர், நமது கழகம் பற்றிய விளக்கம் பெற ஆங்கில இதழ் ஒன்று வெளியிட வேண்டுமென்றுகூட என்னிடம் கூறிச் சென்றனர்,

மதம், இனம், மொழி போன்ற காரணங்களால் ஏற்படும் சிறுபான்மையினர்-என்ற நிலையை ஆதிக்கத்திற்கும், கொடுமை செய்வதற்கும் வழியாக்கிக்கொள்ளாமல், அனைவரும் சமஉரிமை பெற்று வாழ்ந்திடத்தக்க அரசியல் முறையை வகுத்துக்கொண்டு, ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக, நிம்மதியாக வாழ்ந்துவரும் சுவிட்சர்லாந்து நாட்டு அரசியல் பண்பாடு பற்றியும், ஆங்கில மொழியினர், பிரஞ்சு மொழியினர் எனும் இரு பிரிவு மக்களையும் கொண்ட கனடா நாட்டில் இருமொழித்திட்டம் ஒரு சமரச ஏற்பாடாகப் புகுத்தப்பட்டது பற்றியும், அந்த ஏற்பாட்டை நடத்திச் செல்வதில் நாணயக் குறைவு ஏற்பட்டதனால், இப்போது கனடாவில் கொந்தளிப்பு உள்ளது பற்றியும், கனடாவில் க்யூபெக் எனும் மாநிலம் பிரிந்துபோய்விட வேண்டுமென்ற கிளர்ச்சி மூண்டுள்ளதையும், க்யூபெக்கில் உள்ள பிரஞ்சு மொழி பேசுவோர் மனத்துக்குச் சமாதானம் ஏற்படுத்த, இதுவரை பிரிட்டிஷ் அரசு சின்னம் பொறிக்கப்பட்டதாக இருந்த கனடா நாட்டுக் கொடியைக்கூட மாற்றி அமைத்து, பிரிட்டிஷ் சின்னம் ஆங்கில மொழி ஆதிக்கத்தைக் காட்டுகிறது என்று பிரஞ்சுக் கன்னடியர் கூறுவதால், அந்தச் சின்னத்தை நீக்கிவிட்டு, புதிய கனடா தேசியக் கொடியில், பச்சிலையைச் சின்னமாக்கி இருப்பதனையும் கூறினேன்.

என்ன கூறி என்ன பலன்? கடைசியாகக் கேட்கிறார்கள், எண்ணிக்கையின்படி தி. மு. கழகம் சிறுபான்மைதானே, தமிழகத்தில் என்பதாக. ஆம்! என்றேன். எத்தனை நாளைக்குத் தம்பி! இதனைக் கூறியபடி இருப்பது? சிறுபான்மையினர் அல்ல, நாங்கள் தான் தமிழகத்தில் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியினர் என்று கூறும் நிலையை எப்போது ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறாய், தம்பி! கனடாவில் ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாக ஒரு பகுதியாக இணைந்து இருந்துவரும். க்யூபெக் மாநிலத்தில் அந்த மாநிலத்தில் மட்டும், பிரஞ்சுக் கன்னடிய உணர்ச்சி பெற்றவர்கள் அரசியலில் பெரும்பான்மையினராகி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காரணத்தால், கனடா முழுவதற்குமாக இருந்துவந்த தேசியக் கொடியையே, மாற்றிவிடும் காரியத்தில் வெற்றி கிடைத்திருக்கிறது. நீங்கள், உங்கள் மாநிலத்திலேயே, சிறுபான்மையினராகத்தானே இருக்கிறீர்கள் என்ற கேள்வியை, எத்தனை நாளைக்குத் தாங்கிக் கொண்டிருக்கச் சொல்கிறாய். தமிழக அரசு நடாத்துபவர் வேறு; அந்த அரசு இப்படி இப்படி நடத்தப் படவேண்டும் என்று கூறிடும் எதிர்க்கட்சியாக—சிறுபான்மைக் கட்சியாக—தி. மு. கழகம் என்ற நிலை இருக்கும்வரையில், நமது கொள்கை, ஏழ்மையால் எழில் கெட்டு, இளைத்துக் கிடக்கும் ஏந்திழை மருத்துவரிடம் பெற்ற மருந்துக்குப் பணம் தரக்காசு இன்றி, காதிலுள்ளதைக் கழற்றிக் கடை நோக்கி நடந்திடும் நிலையினில் தான் இருக்கும். இந்த நிலை உனக்குச் சம்மதம்தானா?


28-3-1965

அண்ணன்,
அண்ணாதுரை