திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/45.பெரியாரைத்துணைக்கோடல்

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


பொருட்பால் அரசியல்- அதிகாரம் 45.பெரியாரைத்துணைக்கோடல்

தொகு

பரிமேலழகர் உரை

தொகு

அதிகார முன்னுரை:

அஃதாவது, மூவிரு குற்றமும் முறைமையிற் கடிதலிற் காவற் சாகாடு உகைத்தற்கு உரியனாய அரசன், தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறிவுடையாரைத் தனக்குத் துணையாகக்கோடல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். பேரறிவுடையராவார், அரசர்கட்கும் அங்கங்கட்கும் மானுடத் தெய்வக் குற்றங்கள் வாராமற் காத்தற்குரிய அமைச்சர், புரோகிதர்.

குறள் 441 (அறனறிந்து மூத்த)

தொகு
அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மைஅறன் அறிந்து மூத்த அறிவு உடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் (01)திறன் அறிந்து தேர்ந்து கொளல்.
இதன்பொருள்: அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை= அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை;
தேர்ந்து திறன் அறிந்து கொளல்= அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறமறிந்து கொள்க.
விளக்கம்:
அறநுண்மை நூலானே அன்றி உய்த்துணர்வானும் அறியவேண்டுதலின், 'அறனறிந்து' என்றார். மூத்தல்' அறிவானும், சீலத்தானும், காலத்தானும் முதிர்தல். 'அறிவுடையார்' நீதியையும், உலகியலையும் அறிதலை உடையார். 'திறனறி'தலாவது, நன்கு மதித்தல், உயரச்செய்தல், அவர்வரைநிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறனறிந்து செய்தல்.

குறள் 442 (உற்றநோய்)

தொகு
உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல் (02) பெற்றியார்ப் பேணிக் கொளல்.
இதன்பொருள்: உற்ற நோய் நீக்கி= தெய்வத்தானாக, மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி; உறாஅமை முன் காக்கும் பெற்றியார்= பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன்னறிந்து காக்கவல்ல தன்மையினை உடையாரை; பேணிக் கொளல்= அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க.
விளக்கம்: தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினதின்மை மிகுதிகளானும், காற்றுத் தீப் பிணி என்று இவற்றானும் வருவன. அவை கடவுளரையும், தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், சுற்றத்தார், வினைசெய்வார் என்று இவர்களான் வருவன. அவை சாம பேத தான தண்டங்களாகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனான் நீக்கப்படும். 'முற்காத்த'லாவது, தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களான் அறிந்து அச்சாந்திகளாற் காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பவற்றான் அறிந்து அவ்வுபாயங்களுள் ஒன்றாற் காத்தலுமாம். ஆகவே, புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம்- குறிப்பான் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம்- குறிப்பின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன- நன்கு மதித்தன்முதலியன.
இவை இரண்டு பாட்டானும், பெரியாரது இலக்கணமும் அவரைத் துணையாகக் கொடல் வேண்டும் என்பதூஉம் கொள்ளுமாறும் கூறப்பட்டன.

குறள் 443 (அரியவற்றுள்)

தொகு
அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்பேணித் தமராக் கொளல்.
இதன்பொருள்: பெரியாரைப் பேணி்த் தமராக் கொளல்= அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்;
அரியவற்றுள் எல்லாம் அரிது= அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் அரிது.
விளக்கம்: உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்குரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது, இதனால் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.

குறள் 444(தம்மிற்பெரியார்)

தொகு
தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை (04) வன்மையுள் எல்லாம் தலை.
இதன்பொருள்: தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்= அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர்வழி நின்று ஒழுகுதல்;
வன்மையுள் எல்லாம் தலை= அரசர்க்கு எல்லா வலியுடைமையினும் தலை.
விளக்கம்: பொருள் படை அரண்களாகிய வலியினும் இத் துணைவலி சிறந்ததென்றது, இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியராகலின்.

குறள் 445(சூழ்வார்)

தொகு
சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன் சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் (05)சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
இதன்பொருள்: சூழ்வார்கண்ணாக ஒழுகலான்= தன்பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடத்தலான்; மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்= அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க.
விளக்கம்: இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லனாயினும், அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன்பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமைபற்றி, அவரைக் 'கண்ணாக'க் கூறினார். ஆராய்தல் அமைச்சியலுட் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல்.
இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைக்கோடலின் சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 446(தக்காரினத்)

தொகு
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில் (06) செற்றார் செயக்கிடந்தது இல்.
இதன்பொருள்:
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை= தக்காராகிய இனத்தை உடையனாய்த் தானும் அறிந்தொழுக வல்ல அரசனை;
செற்றார் செயக்கிடந்தது இல்= பகைவர் செய்யக்கிடந்ததொரு துன்பமும் இல்லை.
விளக்கம்:
'தக்கார்' அறிவு ஒழுக்கங்களாற் தகுதியுடையார். 'ஒழுகுதல்' அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல். வஞ்சித்தல், கூடினரைப் பிரித்தல், வேறுபகை விளைத்தல் என்று இவற்றானும், வலியானும் பகைவர்செய்யும் துன்பங்கள் பலதிறத்தவாயினும், தானும் அறிந்து அறிவார் சொல்லுங் கொண்டு ஒழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக்கிடந்தது இல்' என்றார்.

குறள் 447(இடிக்குந்)

தொகு
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர் (07) கெடுக்கும் தகைமையவர்.
இதன்பொருள்:
இடிக்கும் துணையாரை ஆள்வாரை= தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாம் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசரை;
கெடுக்கும் தகைமையவர் யார்= கெடுக்கும் பெருமையுடைய பகைவர் உலகத்து யாவர்?
விளக்கம்:
தீயன - பாவங்களும் நீதியல்லனவும். துணையாந் தன்மையாவது, தமக்கு அவை இன்மையும், அரசன்கண் அன்புடைமையுமாம். அத்தன்மை உடையார் நெறியின் நீங்கவிடாமையின், அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம். 'நெருங்கிச் சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர்.
இவை இரண்டு பாட்டானும் அதன்பயன் கூறப்பட்டது.

குறள் 448(இடிப்பாரை)

தொகு
இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் (08) கெடுப்பார் இலானும் கெடும்.
இதன்பொருள்:
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்= கழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன்;
கெடுப்பார் இலானும் கெடும்= பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும்.
விளக்கம்:
'இல்லாத', 'ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கெடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது, பாகன் இல்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.

குறள் 449(முதலிலார்க்)

தொகு
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ் முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க் கில்லை நிலை (09) சார்பு இலார்க்கு இல்லை நிலை.
இதன்பொருள்:
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை= முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம்;
மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை= அதுபோலத் தம்மைத் தாங்குவதாந் துணை இல்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை.
விளக்கம்:
முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலைபெற வேண்டும் என்பதாம். 'நிலை' அரசர் பாரத்தோடு சலியாது நிற்றல்.

குறள் 450(பல்லார்பகை)

தொகு
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல் (10)
இதன்பொருள்:
பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே= தான் தனியனாய்வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலிற் பதிற்றுமடங்கு தீமை உடைத்து;
நல்லார் தொடர் கைவிடல்= அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாது ஒழிதல்.
விளக்கம்:
பலர் பகையாயக்கால் "மொதி முள்ளொடு முட்பகை கண்டிடல்- பேது செய்து பிளந்திடல்"1 என்பவை யல்லது ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும்; நல்லார் தொடர் கைவிட்டால் ஒருவாற்றான் உய்தல்கூடாமையின், இது செய்தல் அதனினும் தீது என்பதாம்.
இவை மூ்ன்று பாட்டானும் அது செய்யாவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.
1.சீவகசிந்தாமணி, விமலையார் இலம்பகம்-32.