பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அகத்திணைக் கொள்கைகள்


மருங்கண் அணையதுண்டோ? வந்த(து)

ஈங்கொரு வான்கலையே.[1]
[கணை-அம்பு; கலை-ஆண்மான்]

என்று மிக அழகாகக் கூறுவர். 'உங்கள் கண்களைப் போன்ற அம்பு தைத்தலால் உண்டான புண்ணோடு இங்கு மான் வந்ததா?' என்று கேட்பதில் 'தான் தன் தலைவியின் கண்ணம்பினால் புண்பட்டு வந்தமைபற்றிப் பையக் குறித்திருத்தல்' கண்டு இன்புறத் தக்கது.

முன்னுறை உணர்தல் : இதனை இளம் பூரணர் 'தலைவன் குறையுறா வழித் தலைவி குறிப்புக் கண்டு உணர்தல்' என்று பொருள்கூறுவர். 'இருவரது குறிப்பானேமிகவும் உணர்தல்' என்பர் நச்சினார்க்கினியர். முன்னுற உணர்தல்-முன் உற உணர்தல் - முன்னம் உணர்தல் ('முன்' என்பது குறிப்பு). அஃதாவது, முன் கூட்டங்களில் தலைவனைக் கலந்த தலைமகள் தோழியின் முன்னர் வந்தபோது அவளது கண்சிவப்பு, நுதல் வேறுபாடு முதலிய மெய்வேறுபாடு கண்டு, 'இவ்வேறுபாடு இங்குப் பலகாலும் வந்து செல்லும் ஆண்மகனோடு கூட்டமுண்மையால் இவட்கு வந்தது போலும்' என உட்கொண்டு அதனைப் பல்வேறு வகையால் சொல்லாடித் தோழி ஆராய்ந்தறிதலாகும். இவ்வாராய்ச்சியில் தலைமகளிடம் நிகழும் குறிப்பு வேறுபாடுகளால் தோழிக்குத் துணிவு பிறக்கும். இவ்வாராய்ச்சியை இறையனார் களவியலுரை ஆசிரியர் இவ்வாறு குறிப்பர்: 'கரவு நாடி எங்ஙனம் உணருமோ எனின், எம் பெருமாட்டிக்குப் பண்டைத் தன்மைத் தன்றால் இவ்வேறுபாடு, இஃது எற்றினான் ஆயிற்று, எனக்குச் சொல்லாய்' என்னும்; என, 'நெருநல் நின்னின் நீங்கி மேதக்கதோர் சுனை கண்டு ஆடினேன், நெடுங்காலமும் நின்றாடினேற்கு ஆயிற்று; ஆகாதே, கண்சிவப்பும் நுதல் வேறுபாடும்' என்னும்; 'அஃதேல், சுனையாடினோர்க் கெல்லாம் இக்காரிகை நீர்மை பெறலாமெனின், யானும் ஆடிக் காண்கேன்" என்னும்; எனக் கேட்டுத் தலைமகள் தலைசாய்த்து நிலங்கிளையா நிற்பத் தோழி புணர்ச்சி யுண்டென்று உணர்ந்து கொள்வாளாவது. அல்லதூஉம், அங்ஙனம் வேறுபட்ட வேறுபாடு கண்டு ஐயுற்று நின்றாள், அந்தி வானகட்டுச் செங்கோட்டு மதர்வைக் குழவித் திங்களைக் கண்டு தான் தொழுது,'நீயும் தொழுது காண்' என்னும்; எனக் கேட்டுத் தலைமகள் தொழாது நிற்கும், கற்பழி

  1. 11. திருக்கோவை-53