பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் 103 மைக்கும் அடக்கு முறைக்கும் காரணம் என்பதை நாம் அறிதல் வேண்டும். சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டிர் அம்பல் துாற்றச் சிறுகோல் வலந்தனள் அன்னை’’ (மறுகு-அம்பலம்) என்பது நற்றிணைப் பாடல். சிலரும் பலரும் மூலை முடுக்கெல்லாம் கூடிநின்று மகளைப்பற்றிச் சாடையாகவும் நேராகவும் பேசும் போது அங்ஙனம் அவர்கள் பேசுவதற்குக் காரணமாக இருக்கும் எந்த அன்னைக்குத்தான் சினம் கனன்று எழாது? தலைவி எட்டியும் சுட்டியும் காட்டப்படும் குலத்தினன் அல்லளாதலால் வாயினாற் கூறலும் ஏறிட்டுப் பார்த்தலும் குற்றமாகும் என்று அஞ்சிக் கடைக் கண்ணால் நோக்கிக் குறிப்பாகக் கூறுவதையும், அங்ஙனம் பெருங்குடியிலே பிறந்து பெருநாணமும் உடைய ளாயினாளொரு சிறுமி காமம் தலைக்கொண்டு உடன் போயினாள் என வியப்பெய்தவின் மூக்கின் உச்சியின்கண்ணே சுட்டு விரல் சேர்த்தினமையும், வாயினால் கூற அஞ்சினமையும் பாட்டில் பெற வைத்த உலோச்சனாரின் கவித்திறத்தையும் எண்ணி மகிழ்கின்றோம். இவரது பாடல்களில் அலர் ஓவியம் பல் வேறு விதமாகச் சித்திரிக்கப் பெறுவதையும் கண்டு மகிழலாம். அவர் எழுச்சி காதலர்க்குப் புதுநெறி வகுக்கின்றது. அலர் எழுந்ததனால் தலைமகன் தெளிந்த உள்ளத்தனாய்த் தலைவியை மனந்து கொண்டு கற்பு நெறியில் ஒழுகுதலே தக்கது. ஆயின், அவன் அங்ஙனம் ஒழுகுவதில்லை. காரணம், களவு நெறியில் காணப்பெறும் கிளர்ச்சிமிக்க உணர்ச்சி கற்பு நெறியில் கிடைக்கப் பெறாது என்று கருதினான் போலும். ஆகவே, தோழியின் விருப் பத்திற் கிணங்கச் சில காலம் அவ்வலரடங்குமாறு கூட்டம் நீங்கி 'ஒருவழித் தணப்பான் என்றும், அங்ஙனம் ஒருவழித் தணந்து நில்லானாயின், தோழியின் உதவியால் யார்க்கும் தெரியாமல் நள்ளிரவில் தலைவியைக் கூட்டிச் செல்லும் உடன் போக்கினை" மேற்கொள்வான் என்றும், இவ்விரண்டும் நிகழாதாயின் தோழி யினால் வரைவு முடுக்கப் பெற்றுத் தலைவியை வரைந்து கொள் வான் என்றும் அகப்பொருள் நூல்கள் நுவலா நிற்கும். நெற். 149.