பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#08 அகத்தினைக் கொள்கைகள் டொன்று அமைய வேண்டியவிடத்து இணைந்தமைந்தும் ஒழுகிக் கொழுவிச் சுவையெதிர்ந்து நிற்கும் சொற்பொருட் பிணிப்பான தமிழ் வளங்காட்டிடும் செய்யுட்கள் சங்க இலச்கியச் சோலையுள் மலிந்து காணப்படுகின்றன. மேற்காட்டிய ஐங்குறு நூற்றுச் செய்யுள் துறையாகிய இளமை கூறிமறுத்தல் திருக்கோவையாரில்பதினைந்தாவதுதுறையாகவும், நற்றிணைச் செய்யுள் துறையாகிய குலமுறை கூறி மறுத்தல்" பதினொன்றாம் துறையாகவும் அமைந்து கிடக்கின்றன. கோவை யாரில் வரும் சேட்படுத்தும் துறைகளின் நுட்பத்தை ஈண்டு கண்டு மகிழ்வோம். குறையிரந்து செல்லும் தலைமகன் சந்தனத் தழையைக் கையுறையாக எடுத்துக் கொண்டு தோழியிடம் சென்று, அதனை ஏற்றுத் தன் குறையை முடித்தருளுமாறு வேண்டுவான். இதுவே தழை கொண்டு சேறல்’ என்பது. இங்ஙனம் வேண்டி நிற்கும் தலைவனைத் தோழி பல ஏதுக்கள் கூறிச் சேட்படுத்துவள். இத்தழை எங்கட்கு வந்தவாறு என்னோ என்று இங்குள்ள எம்மனோரால் ஆராயப்பெறு மாதலால் அந்தத் தழை எங்கட்குத் தகாது’ என்றும், யாங்கள் உறையும் குன்றில் இல்லாத தழையைத் தருதல் எங்கட்குக் குடிப் பழியாம்' என்றும் கூறிச் சேட்படுத்துவாள். இவற்றைக் கேட்ட தலைமகன் சந்தனத் தழையை மறுத்தாளேயன்றி தன் குறையிரப்பினை மறுக்கவில்லை என்று அந்நிலத்துக் குன்றிலுள்ள வேறு தழை கொண்டு செல்வான். அங்ஙனம் செல்வாற்கு அத்தோழி, என் தலைவியின் நினைவைத் தெரிந்து கொண்ட பின்னர்த்தான் இதனை ஏற்பேன்’ என்று கூறி மறுப்பள்: அங்ஙனமாயின் தலைவியின் நினைவை அறிந்தே வந்து பெறுக! என்று உள்நினைந்து நிற்க, தோழி அவள் நினைவைத் தான் அறிவாள் போற் சென்று மறைந்து பின்பு அங்கிருந்து மீண்டு தானே யொன்று படைத்துத் தலைவிக்கும் இத்தழை உடம்பாடு தான்; ஆயினும் இப்பூந்தழை குற்றாலம் என்னும் ஒரிடத்தன்றி மற்றிடத்தில் இல்லாமையால் அஃது ஈங்கு வந்தவாறு என்னோ என்று பிறரால் ஆராயப்படுதலின் அத்தழை எங்கட்கு ஆகாது” என்று மறுத்து உரைப்பாள். ஐங்குறு நூற்றுத் தோழி தழையை மறுத்துரைப்பதை, நொதும லாளர் கொள்ளார். இவையே எம்மொடு வந்து கடலாடு மகளிரும் நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்