பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் - 109 உடலகம் கொள்வோ ரின்மையின் தொடலைக் குற்ற சில பூ வினரே." (நொதுமலாளர் - அயலார்; உடலகம் - மெய்யில்; தொடலைக்கு-தொடுத்து அணிதற்கு.) என்ற பாடலில் கண்டு மகிழலாம். இதில் பகைத்தழை என்றது இத்தழை தகாது என மறுத்தது. நெய்தலம் பகைத்தழை, என்றது, இத்தழை இந்நிலத்தில் இல்லை யாகலின் ஐயுறற் கேதுவாம் என மறுத்தது. நொதுமலர் கொள்ளார் என்றது, தலைவி இவற்றை ஏற்க அஞ்சு வள் எனக் கூறிமறுத்தது. எம்மொடு வந்து கடலாடு மகளிர் பகைத் தழை புனையார் என்றது, படைத்து மொழியான் மறுத்தது. உடலகம் கொள் வோரின்மையின் என்றது, இதனைப் புனையவும் தலைவி நாணுவள் என்று நானுரைத்து மறுத்தது. தொடலைக் குற்ற சிறு பூவினரே என்றது, இத்தழை புனைதல் எமக்கு இயையாது எனக் கூறி மறுத்தது என நுண்ணிதின் உணரப்படும். தழையைத் தானே மறுத்துக் கூறுகின்றாள், ஆகவே இனித் தழையொழிந்து கண்ணியைக் கையுறையாகக் கொண்டு சென்றால் அவள் மறுக்காள் என்று கருதிக் கழுநீர் மலரைக் கண்ணியாகப் புனைந்து கொண்டு செல்வான். தோழி அதனையும் மறுத்து, "என் தலைவிக்குச் செவிலித் தாயர் முன்னரே சூட்டியுள்ள் கண்ணியின்மேல் யான் ஒன்று சூட்டுவேனாயின், அவள் நாணா நிற்பள்' என்று அவட்குள்ள நாணத்தை உரைப்பாள். அதுதானு மன்றி, "யாங்களெல்லாரும் வேங்கை மலரை அணிவோமேயன்றித் தெய்வம் குடுவதற்குரிய வெறிமலர்ச் சூட அஞ்சுவோம்’ என்றும் அஃதிசையாமை கூறுவள்.இம்மறுப்புரைகள் எல்லாவற்றையும் தம் குலத்துக்கு இசையாமை கூறியதேயன்றி என் குறைக்கு இசையாமை கூறிற்றன்று எனத் தலை மகன் கருதி, மாந்தழையும் அதன் மலரும் கொண்டு மீண்டும் செல்வான். அதற்கு அவள் அன்னமும் பெண்மானும் கிளிகளும் முறையே நடையும் பார்வையும் பேச்சும் பெறுதற்கு நேரம் வாயாது நிற்கின்றன; நீங்கள் இவ்வளவு நேரம் இங்கு வந்திருந்ததும் யான் உங்கட்குக் குறை நேர்ந்ததும் அவள் அறியாள். ஆகவே செவ்வியறிந்துதான் அவள்மாட்டுச் செல்லல் வேண்டும். ஆதலால் இன்று அவளைக் காணும் செவ்வி வாய்த் திடுமாயின் அப்போது இதனைக் கொணருங்கள் என்று சொல்லி விடுவாள். இதற்குள் பொழுது சாய்ந்து கதிரவனும் மறைந்து . - بخت تہیہ عقسمسم سب سم۔ 69. ஐங்குறு-187