பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அகத்திணைக் கொள்கைகள் தோழியால் சேட்டுக்கப்பட்ட தலைவன் ஆற்றாமை மீதுார்ந்து தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியதாக அமைந்தது இப் பாடல். இதில் பெருகி நிற்கும் தன் நோய் தீர மடலேறாது இறந்து படுமோ என அழிந்து கூறுகின்றான் தலைவன். இந்த இரண்டு பாடல்கள்ால் மட்டிலும் மாதங்கீரனாருக்கு மடல் பாடிய என்ற சிறப்படை தோன்றியிராது என்றும், வேறு பல பாடல்களும் இத்துறையில் இவர் பாடியிருத்தல் கூடும் என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. இம்மடல் ஏறும் வழக்கம் நாகரிகமாகுமோ என்பதும் ஈண்டு ஆராயத்தக்கது. நாகரிகம் என்பது மக்களின் இயல்பை வைத்தே அறியப்படும் ஒன்றாகும். உண்மையான காதலர்களின் நிலை யறிந்து அவர்களது திருமணம் முடித்து வைத்தல் உற்றார் பெற்றார் முதலியவர்களின் கடமையாகும். இக்கடமையினின்றும் தவறுதலே நாகரிகமற்ற செயலாகும். ஆகவே, ஆண் மக்கள் இயற்கைக் களவின் வழி உள்ளம் வீழ்ந்து தெரிந்தெடுத்துக் கொண்ட பெண் மக்களைக் கூடுதற்பொருட்டு முயல்வதும், அம்முயற்சிக்கு இடையூறு கண்டபோது மடலூர்ந்து வெளிப் படுதலும் நாகரிக உணர்ச்சியையே காட்டுகின்ற தன்றோ? நன்மைப் பயக்குக் கூடிய செயல் எளிதில் நிறைவேறாதபொழுது தன் உயிரைக் கொடுத்தேனும் அதனை நிறைவேற்றுதல் உணமை யான ஆண்மையும் பெருமையும் ஆகும். ஆயின் மேற் குறிப்பிட்ட குறுந்தொகைப் பாடலில் மடலேறுதலைப் பிறரெல்லாம் இழித்து ஏளனம் செய்வதாகக் கூறப்பெற்றுள்ளதே என்று வினவலாம். அவர்கள் எல்லாம் கருத்து நோக்காது வெறுஞ் செய்கையை மட்டிலும் நோக்கி அங்ங்ணம் எள்ளி ஏளனம் செய்வர் என்பதும் அங்ங்ணம் செய்பவரும் கீழ்மக்களே யாவர் என்பதும், உயர்ந்த கருத்தும் ஆன்ற அறிவுமுடைய மேன்மக்கள் அங்ங்ணம் கூறார் என்பதும், அவரும் மடலேற்றத்தைக் கேள்விப்பட்ட தொடி யிலேயே காதலர்தம் மணத்தை முடிக்கவே முயல்வர் என்பதும் ஈண்டு உளங் கொள்ளத் தக்கவை. தலைவன் தோழிமாட்டு மட லேறும் வகை உரைக்கும் திறனெல்லாம், தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர்." 91. குறள்-1135