பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - அகத்திணைக் கொள்கைகள் கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தால் செய்திக் கண்ணும்.”* என்னும் கூறுவர். களமாவது, கட்டும் கழங்கும் இட்டுரைக்கும் இடமும் வெறியாட்டிடமுமாகும் என்று பொருள் கூறுவர். நச்சினார்க்கினியர். மேலும், இவர் கட்டினும் கழங்கினும் : என்பதற்கு கட்டுவிச்சியும் வேலனும் தாம் பார்த்த கட்டினானும், கழங்கினானும் என்று கூறுவர். இதனால் கட்டுவிச்சிக்குக் கட்டெடுத்தலும் வேலற்குக் கழங்கு பார்த்தலும் முறையே உரியவை என்பது பெறப்படும். யார் நோய்க்கும் முருகென மொழிதல் இவன் வாய்மரபாகும். அன்னைக்கு முருகென மொழியும் வேலன்' என்ற ஐங்குறுநூற்றால் இஃது அறியப் படும். - கட்டுவிச்சி கட்டேறிக் குறி சொல்லுவதைத் திருமங்கை மன்னன் அருளிச் செய்த சிறிய திருமடலால் அறியலாகும். வாராது மாமை அதுகண்டு மற்றாங்கே ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார் பாரோர் சொலப்படும் கட்டுப் படுத்திரேல் ஆரானும் மெய்ப்படுவ னென்றார் அதுகேட்டுக் காரார் குழற்கொண்டைக் கட்டுவிச்சி கட்டேறிச் சீரார் சுளகில் சிலநெல் பிடித்தெறியா வேரா விதிர்விதிரா மெய்சிலிராக் கைமோவாப் பேரா யிரமுடையான் என்றாள் பெயர்த்தேயும் காரார் திருமேனி காட்டினாள்.'" என்பது காண்க. கட்டுவிச்சி தெய்வ ஆவேசம்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு ஒரு முறத்தினின்றும் ஒரு பிடி நெல் எடுத்து அவற்றை எண்ணிப் பார்த்து ஒற்றைப் படைஎண் வருகின்றதா இரட்டைப் படை எண் வருகின்றதா என்று சோதித்துப் பார்த்து உண்மையை அறியும் முறையே கட்டு எடுத்துக் குறிசொல்லல் ஆகும். வேலன் கழங்கு பார்த்துக் குறி சொல்வதை அக நானூற்றால் அறியலாம். அறுவை தோயும் ஒருபெருங் குடுமிச் சிறுபை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல் 98. டிெ-24 அடி (3-4) (நச்) 99. ஐங்குறு-249. 100. சிறிய திருமடல்-கண்ணி 18-22