பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் 125 ஆகுவ தறிவும் முதுவாய் வேல! கூறுக மாதோநின் கழங்கின் திட்பம் மாறா வருபனி கலுழுங் கங்குலின் ஆனாது துயருமெங் கண்ணினிது படிஇயர் எம்மனை முந்துறத் தகுமோ தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே' (அறுவை-ஆடை, குடுமி-உச்சி; நாற்றிய-தொங்க விடப் பட்ட கோடு-வளைந்த முதுவாய்-அறிவு வாய்ந்த ; திட்பம்-குறி; மாறா-இடையறாது; பனி-நீர்; கலுழும்கலங்கி அழும்; படி இயர்-துயிலும் யொருட்டு; முந்துறமுட்பட குறிப்பு-உட்கோள்) மகட்போக்கிய நற்றாய் கூறுவதாக அமைந்தது இப்பாடல். தலைவனுடன் வெளியேறிய தன் மகளைத் தன் வீட்டிற்கு முற்படக் கொணர்வானா அல்லது தன் மனையின்கண் கொண்டு உய்ப்பானா என்பதைக் கழங்கின் குறியால் கூறுமாறு வேண்டு வதைப் பாடலில் காணலாம். - வரையாது வந்தொழுகும் ஐங்குறுநூற்றுத் தலைவன் ஒருவன் சிறைப்புறத்தில் இருக்குங்கால் அவன் கேட்குமாறு வெறி நிகழா நின்றமையைத் தோழி தலைமகளிடம் சொல்லுகின்றாள். வெறிசெறித் தனனே வேலன் கறிய கல்முகை வயப்புலி கழங்குமெய்ப் படுஉ புன்புலம் வித்திய புனவர் புணர்த்த மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து மன்றிற் பையுள் தீரும் குன்ற நாடன் உறீஇய நோயே..' (வெறி செறித்தல்-வெறியாடற்கு வேண்டுவன எல்லாம். களத்தின்கண் சேர்த்தல்; கறி பகல்-மிளகுக் கொடி படர்ந்த மலை; முகை-குகை வயப்புலி-ஆண் புலி, கழங்குகழற்சிக் காய்; புன்புலம்-புன்செய்: புனவர் - குறவர்: புணர்த்தல்-வேண்டும் பொருளெல்லாம் கூட்டிச் செய்தல்: பெண்பால்-பெண்புலி; மன்று-கொல்லையின் நடுவே அமைந்த விடுநிலம்; பையுள்-துன்பம் (காமம்) தீரும்தீர்த்துக் கொள்ளும்; உl இய-செய்த) 101. அகம்-195 102. ஐங்குறு-246.