பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் ةaسات மரபுகள் 127 என்றே கூறும் வேலனை வெறியாடற்பொருட்டு அழிைந்து வரு மாறு பணித்தனள். இதனை நினைக்கும்தோறும் எனக்கு நகைப்பு உண்டாகின்றது' என்கின்றாள் தலைவி. மேலும் அவள் மலை நாடனாகிய நம்பெருமான் அளித்த நோயைத் தீர்க்க வேலன் வந்தாலும் வருவான். அங்ஙனம் வந்தால் அவன் அறிவிலியே. அவ்வேலன் அழைக்குங்கால் முருகன் வருமாயின், அவனைவிட அக்கடவுளும் அறிவிலியாவான். இஃது. எனக்குச் சாலவும் நகைப்பைத் தருகின்றது’ என்கின்றாள். வெறியாடலை அறிவிக்கும் இந்த இரண்டு பாடல்களிலும் தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றலை அறியலாம். தலைமகளின் மேனி மெலிவு தெய்வத்தால் ஆயிற்று எனத் தமர் நினைந்தபொழுது அதனைப் பொறுக்கலாற்றாத ஜங்குறு நூற்றுத் தோழியொருத்தி நேராகவே செவிலியிடம் உண்மை செப்புங் கிளவியால் அறத்தொடு நிற்கின்றாள். அருந்திறல் கடவுள் அல்லன் பெருந்துறைக் கண்டிவன் அணங்கி யோனே' (அருந்திறல்-யாரானும் கடத்திலரிய பேராற்றலையுடைய) என்று அடித்துப் பேசுபவள். நெய்தல் மலரையும் செருந்தி மலரையும் கலந்து கட்டிய மாலையை அணிந்த மானிட மகனே தலைவிக்கு நோய் அளித்தவன் என்பதையும் உரைத்து விடுகின் றாள். நற்றிணைத் தோழியின் செயல் இதற்கு மேலும் ஒரு படி போகின்றது. இங்கும் தலைவி முருகேறப்பட்டவள் என்று வேலன் கூறுகின்றான். தலைவியின் நோய்க்குப் பிறிதொரு காரணம் கற்பிக்கப்பெறுவதைத் தோழியால் பொறுக்க முடிய வில்லை. அக்காரணம் தெய்வச் சார்பு ஆயினும் அவள் அதற்கு மதிப்பு தரவில்லை. தெய்வத்தையே சாடத் தொடங்குகின்றாள். 'அருவி யின்னியத் தாடும் நாடன் மார்பு தர வந்த படர்மலி அருநோய் நின்னணங் கன்மை அறிந்தும் அண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே' 105. ஐங்குறு-182 . 106. நற். 14. இப்பாடலை இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும் தோழி கூற்றாகக் கொண்டுள்ளனர். தலைவி கூற்றாகக் கொள்வதற்கே இது பெரிதும் பொருந்திய தாகும்.