பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற் கூட்ட மரபுகள் - 129 செய்யப்படும். (இக்காலத்துத் தாயத்து போல்வது) கெழுகை - உரிமை.) - r பொய் கூறுதலில்லாத மரபினை டஉையோன் ஆதலின் அவன் இந்நோய் முருகனால் ஏற்பட்டது என்ற இடத்து அக் கூற்று முருகனுக்கே உரிமையுடையதாலன்றி தம்பெருமானுக்கும் உரிய தாகுமோ?' என்று ஐயுறுகின்றாள். 'முருகன் என்பது காரணப் பெயராகலான், அக்காரணங்கள் யாவும் நம்பெருமானுக்கும் பொருந்துகின்றமையால் அக்கூற்று மெய்யேயாகி அவன் பொய்யா மரபினன் என்பதற்கே சான்றாகுமோ? யான் அறிகிலேன்' என் கின்றாள் போலும், இங்குத் தோழிக்கு தலைவனை இடித் துரைக்கவும் வரைவு முடுக்கவும் வெறியாட்டு ஒரு கருவியாக அமைகின்றதையும் காண்கின்றோம். - தலைவியின் நோயைத் தவறாகப் புரிந்துகொண்டு செவிலி எடுக்கும் வெறியாட்டம் நிகழாவண்ணம் தடுக்க நினைத்து வேலனை நோக்கிக் கூறுவதாக அமைந்த மணிவாசகப் பெருமானின் பாடல் சொற்சுவை பொருட்சுவை உடையது. விதியுடை யார்உண்க வேரி விலக்கலம் அம்பலத்துப் பதியுடை யான்பரங் குன்றினில் பாய்புனல் யாம்ஒழுகக் கதியுடை யான்கதிர்த் தோள்நிற்க வேறு கருதுநின்னின் மதியுடை யார்தெய்வ மேயில்லை கொல்இனி வையகத்தே.' (விதியுடையார்-உரிமையுடையவர்கள்; வேரி-கள்; விலக் கலம்-விலக்கேம்; பதி-இடம்; கதி-இயக்கம்; கதிர்த்தோள். ஒளியையுடைய தோள் மதி-அறிவு.) இங்குத் தேயழி வேலனை நோக்கி, அட கடவுளே! நின் செயல் அழகிது. எம் பெருமாட்டியின் நோய்க்குக் காரணம் அன்றொரு நாள் அவள் புனலில் மூழ்கியபோது அப் புனலினின்றும் அவளைக் கரையேற்றி அவளுக்கு உயிர் தந்து உதவினானே ஒரு வள்ளற் பெருமான், அவனுடைய ஒளிமிக்க தோள்களாகும். அங்கின மிருக்க நீ வெறியாடுதலால் யாது பயன்? வெறியாடலால் நீங்கள் 110. திருக்கோவை-292 9 متحت نایی