பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so தோழியிற்கூட்ட மரபுகள் 135 மூலம் கூறும் வெறியாட்டைச் சமூகம் கற்புக்கு ஒரு மாசாகக் கருதுவதில்லை. இந்நிலையில் தலைவியும் அதனை அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. வெறியாட்டு நடந்த பின்னும் க்ள வொழுக்கம் நீடிப்பதனை அகத்திணை இலக்கியம் பேசும். இதனால் தலைவி வெறிக்கு அஞ்சுவதில்லை என்பது அறியப்படும். ஆயின் வேலன் வெறிக்கு அஞ்சாக் கள்வி நொதுமலர் வரைவுக்கு அஞ்சுவாள். மரபு வழியாக நடைபெறும் திருமணத்திற்கே பெற் றோர்கள் பெண்ணின் இசைவு கோருகின்றனர். இதில் எல்லா மாப்பிள்ளைமார்களையும் பெண் ஒப்புக் கொள்வதில்லை. அடக்கம் மிக்க நன்மகள்கூட தன் கருத்தை ஒருவாறு பெற் றோர்க்கு உணர்த்தியே தீர்வாள். அங்ங்ணம் இருக்கக் களவுடை நங்கை தான் காதலித்த நம்பி இருக்கும்போது அயலவனை மணக்க எங்ஙனம் ஒருப்படுவாள்? அயல் மணம் கற்புடைக் குமரியின் உயிரையே அறுக்கும் கூரிய வாள் போன்றது; சமு தாயத்தின் ஒழுக்க வேலியினையே தகர்த்தெறியும் கோடரியை யொத்தது. இந்தச் சூழ்நிலையில் ஒரு பெண் தன் களவினை வெளிப்படுத்தித் தன் கற்பினைக் காக்கும் கட்டாயம் தானாக ஏற்படுகின்றது. பெற்றோரும் உண்மையை அறியின், ஒருத்தி உறவு மாறி மனப்பதை ஒவ்வவே ஒவ்வார். ஆதலின் தோழியும் தலைவியும் வேற்று மனம் பேசுதலைப் பார்த்துக் கொண்டு வாளா இரார். மணப் பேச்சை இடை முறிப்பதற்குப் பல்வேறு யுக்தி முறைகளை மேற்கொள்வர்; கடிய வழிகளையும் கையாள்வர். இத்தகைய நிகழ்ச்சி யொன்றினை ஐங்குறுநூற்றில் காண்கின் றோம். தலைவனும் தலைவியும் தம்முள் தலைப்பட்டு இயற் கைப் புணர்ச்கி நிகழ்ந்த பின்னர் தலைவியின் இல்லத்திற்கு அய லார் மணம் பேச வருகின்றனர். இதனை அறிந்த தலைவி பாலும் உண்ணாளாய்ப் பழங்கண் கொண்டிருப்பதைக் கண்ணுற்ற செவிலி இந்நிலை இவளுக்கு எப்படி நேர்ந்தது என்று தோழியை வினவ அவள், . . தண்ணந் துறைவன் நல்கின் ஒண்ணுதல்:அரிவை:பாலா ரும்மே." (பால் ஆரும்-பால் பருகுவாள்! என்று கூறுகின்றாள். நாணத்தை விட்டேனும் காக்க வேண்டும் முதன்மையுடையது கற்பாதலின், தலைவி வேற்றவருக்கு விருந் 17. இங்குறு-ல.