பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழியிற் கூட்ட மரபுகள் 145


வதை அறிக. இங்ஙனம் வரைவு கடாவும் விகற்பங்களைத் தொல்காப்பியர் கூறும்,

களனும் பொழுதும் வரைநிலை விளக்கிக்
காதல் மிகுதி உளப்படப் பிறவும்
நாடும் ஊரும் இல்லும் குடியும்
பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி
அவன்வயின் தோன்றிய கிளவியொடு

தொகைஇ’** என்ற தோழி கூற்றுகளாலும் அவற்றிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை விரிவாலும் நன்கு அறியலாம். திருக்குறளில் 'அலரறிவுறுத்தல்' என்ற அதிகாரத்தும் இந்த வரைவுகடாதலுக்கு நல்ல விளக்கம் காணலாம்.

     மேற்கூறியவாறு தோழி கூற்றுகளாலேயே வரைவுகடாதலை அமைத்துக் காட்டிய தொல்காப்பியர் மீட்டும் பொருளியலில்,
     
பொழுதும் ஆறும் காப்புமென் றிவற்றின்
வழுவி னாகிய குற்றங் காட்டலும்
தன்னை யழிதலும் அவனுா றஞ்சலும்
இரவினும் பகலினும் நீவா என்றலும்
கிழவோன் தன்னை வாரல் என்றலும்
புரைபட வந்த அண்ணலை பிறவும்
வரைதல் வேட்கைப் பொருள என்ப***

என்ற நூற்பாவால் வரைதல் வேட்கைப் பொருளாக வரும் இடங்களைக் காட்டுவர். இளம்பூரணரும் இங்ஙனம் தோழி கூறும் சொற்கள் யாவும் தலைமகளுக்குத் தலைமகன்பால் விருப்பமின்மையாற் கூறப்பட்டன அல்ல, தலைமகளை அவன் விரைவில் மணந்து கொள்ளுதல் வேண்டுமென்னும் வேட்கையினைப் பொருளாகவுடைய சொற்களாகும் என்று விளக்குவர். மேலும் அவர், இவையெல்லாம் தோழிகூற்றினுள் கூறப்பட்டன. ஆயின் ஈண்டோதிய தென்னை எனின், அவை வழுப்போலத் தோன்றும் என்பதனைக் கடைப்பிடித்து அன்பிற்கு மாறாகாது ஒரு பயன் வந்ததென உணர்த்துதலே ஈண்டு ஒதப்பட்டதென்ப. நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறும் என்பது நாடும் ஊரும் இல்லும் குடியும் என ஆண்டோதப்பட்டது. இவை வரைதல் வேட்கைப்

  _______________

133. களவியல் - 23 (நச்) 134. பொருளியல் - 15 (இளம்) அ1ை0